Sunday, May 7, 2023

#இன்றைய திமுக மந்திரிகளுக்கு, எம்பிக்களுக்கு….. தெரியுமா?

#பரண்- #பழைய கோப்புக்கள….
#இன்றைய திமுக மந்திரிகளுக்கு, எம்பிக்களுக்கு….. தெரியுமா?
—————————————

‘தலைவரின் கலைஞரின் விசாலப் பார்வை’ என்ற கட்டுரை 14 ஆண்டுகளுக்கு முன் 2009 ஆகஸ்ட் மாதம் முரசொலியில் வெளி வந்தபோது, செல்பேசியில் தலைவர் கலைஞர் என்னை அழைத்துப் பாராட்டியது இன்றும் நினைவுக்கு வருகிறது. இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலினைக் குறித்தும் வாரிசு அரசியலைக் குறித்தும்  2003 - இல் மூத்த பத்திரிகையாளர் மறைந்த ஜே.வி. கண்ணன்  கடுமையான எதிர்வினையோடு தினமணியில் எழுதிய கட்டுரைக்கு, அந்த கட்டுரை வந்த மறுநாளே அதற்கு தக்க பதில் கட்டுரையாக என்னுடைய கட்டுரை தினமணியில் வெளிவந்தது. 









 
அப்போது கலைஞர், “உன்னால் தான்பா இதைச் செய்ய முடியும்” என்று மனதாரப் பாராட்டினார். ஆனால் இன்றைக்குள்ள முதல்வர் முக.ஸ்டாலினுக்கு இவ்வாறான புரிதலோ, அறிதலோ, தெளிதலோ இல்லை. அப்படி இருக்கும்போது ஸ்டாலினுக்கு இந்த அருமையெல்லாம் எப்படித் தெரியும்? நாமும்  ‘ குறையொன்றுமில்லை ’ என்று கடந்து செல்ல வேண்டியதுதான். நுண்மான் நுழைபுலத்துக்கும் புரிதல் அடைவதற்கும் சில அடிப்படைகளும் தேவை அல்லவா?

#திமுக #DMK #கலைஞர்

கே.எஸ். இராதா கிருஷ்ணன்.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
7-5-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...