#மாஃபியா கும்பலால்
கொடூரமான கொலைகள்
—————————————
சமீபத்தில் தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு கோவில்பத்து கிராமத்தைச் சார்ந்த கிராம நிர்வாகி லூர்து பிரான்சிஸ் மணல் மாஃபியாவால் கொடூரமாக கொல்லப்பட்டார். மணல் போன்ற கனிமங்கள் கடத்தப்படுவதைத் தடுக்க வருவாய்த்துறை அதிகாரிகள் தமிழகத்தில் கடந்த காலத்தில் கொல்லப்பட்டனர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியா முழுவதும் 79 பேர் படுகொலை செய்யப்பட்டதாகத் தகவல்.
2012 - இலிருந்து 2021 வரை உலகம் முழுவதும் 1733 சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இப்படிப்பட்ட படுகொலைகள் தென்அமெரிக்க நாடுகள், மெக்ஸிகோ, கொலம்பியா, பிரேசிலில் அதிகம். இதற்கு உலக சமுதாயம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? மலை, வனம், ஆற்றுச் செல்வங்களை எப்படி எதிர்காலத்தில் பாதுகாக்கப் போகிறோம்? இந்த இயற்கையின் அருட்கொடைகள் இருந்தால்தான் காற்று, நீர் என்ற மனித சமுதாயத்தின் தேவைகள் பூர்த்தி செய்யப்படும். இவ்வாறு இயற்கை வளங்களைச் சுரண்டுவது, கார்பன் வெளியேற்றம், வெப்பநிலை கூடுதலாவது ஆகிய சவால்களில் இருந்து எப்படி மனித சமுதாயம் மீளப் போகிறது என்பது ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது.
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
4-5-2023.
No comments:
Post a Comment