Monday, May 8, 2023

இந்தியாவில் இதுவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் 42 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன்ர்.



இந்தியாவில் இதுவரை, நாடாளுமன்ற உறுப்பினர்கள்(எம்பிகள்)42 பேர் தகுதி நீக்கம் செய்யப்பட்டு உள்ளன்ர். 

1985 ஆம் ஆண்டு, மிசோரம் மாநிலத்தில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி. லால்துகோமா, முதன்முதலாக கட்சித்தாவல் சட்டத்தின்கீழ் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். 

1989 வி.பி. சிங் ஆட்சி அமைத்தபோது கட்சி மாறிய 
9 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள்.

நரசிம்மராவ் ஆட்சிக்காலத்தில் 4 பேர்.  

2004/09 நாடாளுமன்றத்தில்தான் ஆகக் கூடுதலாக, 19 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்கள். 

நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்காக லஞ்சம் பெற்றதை, 
ஒரு தனியார் தொலைக்காட்சி அம்பலப்படுத்தியது. அதனால்,
பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர்கள் ஒய்.ஜி.மகாஜன், சத்ரபால் சிங் லோத்தா, அன்னா சாகிப் எம்.கே. பாட்டீல், சந்திரபிரதாப் சிங், பிரதீப் காந்தி, சுரேஷ் சாந்தல், 



பகுஜன் சமாஜ் கட்சியின் நரேந்தர்குமார் குஷ்வாகா, லால்சந்திர கோஷ், ராஜாராம் பால், 
ராஷ்டிரிய ஜனதா தளம் எம்பி. மனோஜ்குமார்,
காங்கிரஸ் எம்.பி. ராம்சேவக் சிங்
தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

நாடாளுமன்ற மக்கள் அவையில் இருந்து அவர்களைத் தகுதி நீக்கம் செய்யக் கோரி, 
மன்மோகன் சிங் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. 
மாநிலங்கள் அவையில், 
பிரணாப் முகர்ஜி கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது. 

அதை எதிர்த்து அவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். 

அவர்களை நீக்கியது சரிதான் என உச்சநீதிமன்றம் 2007 இல் தீர்ப்பு வழங்கியது. 

 2008 ஆம் ஆண்டு, அமெரிக்கா உடன் அணுவிசை உடன்படிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 
மன்மோகன்சிங் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை இடதுசாரிகள் விலக்கிக் கொண்டனர். 
அப்போது நம்பிக்கை வாக்குப் பதிவில் கட்சி மாறி வாக்கு அளித்த 
9 உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

மாநிலங்கள் அவையில் கட்சி மாறிய முஃப்தி முகமது சயீத் 1989, 
சத்யபால் மாலிக் 1989, 
சரத் யாதவ் 2017, அலி அன்வர் 2017 தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் சிபு சோரன், சமாஜ்வாதி ஜெயா பச்சன் ஆகியோர், 
ஆதாயம் தரும் பதவி வகித்ததாக 2001, 06 ஆம் ஆண்டுகளில் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். 

சிபு சோரன், ஜார்கண்ட் தன்னாட்சி கவுன்சில் தலைவர்,
ஜெயா பச்சன், உ.பி. திரைப்பட வளர்ச்சி வாரியத்தலைவர் பொறுப்பு வகித்ததால், தகுதி நீக்கம். 

இதேபோன்ற பிரச்சினை சோனியா காந்திக்கும் வந்தது. 
உடனே அவர் எம்.பி. பதவியில் இருந்து தாமே விலகி விட்டார். இடைத்தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 

ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்ட மாநிலங்கள் அவை ரஷீத் மசூத், மக்கள் அவை லாலு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தளம் ஜெகதீஷ் சர்மா தகுதி நீக்கம். 

அண்மையில், முகமது பைசல், 
ராகுல் காந்தி, அப்சல் அன்சாரி ஆகியோர் தகுதி நீக்கம். 

முகமது பைசல் குற்றவாளி என்ற கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை, கேரள உயர்நீதிமன்றம் நிறுத்தி வைத்ததால், அவரது பதவி பறிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

No comments:

Post a Comment

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை

#இலங்கைநாடாளுமன்றதேர்தலில் அதிபர் அனுர குமார திசநாயக்கக் கூட்டணி வெற்றி-ஒர் பார்வை ——————————————————— இலங்கையில் அதிபர் ஆட்சி நடைமுறை அமலில...