Wednesday, May 10, 2023

தோப்பில் முகமது மீரான்,

கன்னியாகுமரி மாவட்டத்தின் தேங்காய்ப் பட்டனத்தில் பிறந்த தோப்பில் முகமது மீரான், ஒரு கடலோர கிராமத்தின் கதை, துறைமுகம், கூனன் தோப்பு, சாய்வு நாற்காலி, அஞ்சு வண்ணம் தெரு என ஐந்த நாவல்களையும் அன்புக்கு முதுமை இல்லை, தங்கராசு, அனந்த சயனம் காலனி, ஒரு குட்டித் தீவின் வரைபடம், என படைப்புகளை படைத்தார்.தோப்பில் நெல்லை மண்ணுக்கும் பெருமை சேர்த்தவர். பழகுதற்கு எளிமையானவர். தமிழ்நாட்டை விட கேரளத்தில் இவருக்குக் கிடைக்கும் வரவேற்பே அலாதியானது. அவ்வளவு வாசகர்கள் அங்கே இருக்கிறார்கள். கேரள் எழுத்தாளர்கள் ஆரத் தழுவி வரவேற்பதை கண்ணால் பார்த்திருக்கிறேன்.  கதைசொல்லியின் ஆலோசனை குழு உறுப்பினர். 1983இல் எனது விழாவில் முதன் முதலாக சென்னையில் கலந்து கொண்டார்   என்னை சந்திக்கும் போது ‘’ மாமா உங்களை அரசியல், நீங்கள் ஆதரவாக இருந்தவர்களும் ஏமாற்றி விட்டார்கள்’ என்பார் தோப்பில்.
இறுதியாக 2019 நாடாளுமன்ற தேர்தல் கட்டத்தில், அவரின் மறைவுக்கு முன் சந்தித்த நினைவுகள் இன்றும் மனதில் உள்ளன. 
இன்று அவரின் நான்காவது நினைவு ஆண்டு.

#தோப்பில்_முகமது_மீரான்

#ksrpost
10-5-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...