Tuesday, May 16, 2023

சித்தராமையா sidharammiah

#சித்தராமையா
 ராமகிருஷ்ண ஹெக்டே வீட்டிற்க்கு 1980 களில் செல்லும போது பல முறை சித்தராமையாவை (75)பார்த்துள்ளேன் பேசியுள்ளேன்.ஆரம்பத்தில் மாணவர் இளைஞர் அரசியலில் சோசலிஸ்டு. ராம்மனோகர் லோகியாவின் பிஎஸபியில்  (Praja Socialist Party, PSP )இருந்தார். பாரதீய லோக்தள் கட்சி, ஜனதா கட்சி என இயங்கியவர். ராமகிருஷ்ண ஹெக்டே அமைச்சரவையிலும் இருந்துள்ளார். ஜே.எச். பட்டீல் முதல்வாராக இருக்கும் போதும், தரம்சிங் முதல்வராக இருக்கும் போதும் துணை முதல்வராக இருந்துள்ளார். தேவகெளடாவுடன் இணைந்து செயல்பட்ட போது அவரது குடும்ப அரசியல் மற்றும் குமாரசாமிக்கு சித்தராமையாக்கும் உறவு சரியாக இல்லாத காரணத்தால் மதச்சாரபற்ற ஜனதா தளத்தில் இருந்து வெளியேறிவிட்டார். காங்கிரஸில் இணைந்தார்.கன்னட மொழி  கலாச்சாரத்தை பாதுகாப்பதில் முக்கிய பணியாக இருப்பார. காவேரி, மேகேதாட், தென் பெண்னை விவகாரத்தில் தமிழக நலனுக்கு விரோதமாக இருப்பார்.






#சித்தராமையா

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-5-2023.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...