Sunday, May 14, 2023

இனி தமிழகத்துக்கு திராவிட நிலப்பரப்பில் அண்டை மாநிலங்களுடன் இனி எந்த பிரச்சனகளும் வராது. இதை ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.

அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்ற ஸ்டாலின் நிலையில்; தமிழகத்தின் உரிமையை காவேரியில்  ஸ்டாலின் -ராகுல் ஆகிய  இருவரும் தங்களின் சகோதர உறவுகளால் மீட்டு தருவார்கள்.அதைபோலவே  கேரளா தமிழக நதி நீர் சிக்கல்கள
( தெற்கே நெய்யாறு துவங்கி வடக்கே பாண்டியாறு-புன்னம்புழா வரை, 10வரையான) ஸ்டாலின் மற்ற அவரின் இன்னொரு சகோதரர் பினராயி விஜயன்
தீர்ப்பார். திராவிட மாடல் …..
இனி தமிழகத்துக்கு திராவிட நிலப்பரப்பில் அண்டை மாநிலங்களுடன் இனி எந்த பிரச்சனகளும் வராது. இதை ஸ்டாலின் பார்த்துக்கொள்வார்.
——————————————
கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துருச்சினு இன்னைக்கு  சந்தோஷம் படுவர்களுக்கு….
ஒன்னு சொல்லிக்கிறேன்..

நாளைக்கு கர்நாடகா காவேரியில் தண்ணி தரல.. 
குறுக்க மேகேதாட் அணை கட்டுறாங்க'னு- 
ஒகேனக்கல் பிரச்சனை வரும். அப்போது தமிழக முதல்வர் ஸ்டாலனின் சகோதரர்
ராகுல் காந்தி இவற்றை தீர்த்து தமிழகத்துக்குஉரிய நியாயத்தைப் நிலைப்படுத்துவும் மட்டும் அல்ல அவர் கடந்த நாட்கள் அவர் மெச்சிய தமிழ்-தமிழகம்  பக்கம் நிற்பார். ஸ்டாலின் தனது அறிக்கையில் குறிப்பிட்டவாறு ‘’அடுத்து, 2024 பொதுத்தேர்தலிலும் வெல்ல நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்தியாவில் மக்களாட்சியையும், அரசியலமைப்பு விழுமியங்களையும் மீட்போம்", என்ற நிலையில் தமிழகத்தின் உரிமையை காவேரியில்  ஸ்டாலின் ராகுல் ஆகிய இருவரும் மீட்டு தருவார்கள்,
மீட்டு தரவேண்டும்.

#Cauveri
#காவேரி
#ராகுல்_ஸ்டாலின்_பினராயி_விஜயன்_சகோதர_பாசம்

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
14-5-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...