Tuesday, May 23, 2023

காலம், நேரம் என நீண்டவருடங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது விலைமதிப்பு இல்லாதது

காலம், நேரம் என நீண்டவருடங்கள் நமக்கு இலவசமாகக் கிடைக்கிறது என்பதற்காக அதைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அது விலைமதிப்பு இல்லாதது. நாம் அதைச் சொந்தமாக்கிக் கொள்ள முடியாது. ஆனால் அதைப் பயன்படுத்த முடியும். சேமித்து வைக்க முடியாது, ஆனால், செலவிட முடியும். ஒருமுறை இழந்துவிட்டால், யாராலும் அதைத் திரும்பப்பெற முடியாது. வாழ்க்கை நமக்கு கொடுத்த மாபெரும் முதலீடு நேரம்தான். அதை வீணடிப்பதும்  பயன் படுத்துவதும் நம் கைகளில்தான் உள்ளது.

காலம் பொன்போன்றது என்ற வாசகத்தை கலைஞரின் கோபாலபுரம் வீட்டிற்குச் செல்லும்போது, அவரின் மாடி அறைக்குச் செல்லும் பாடி பாதையில் மரப்பலகையில் எழுதியிருந்து நினைவுக்கு வருகிறது.

இன்று காலத்தைத் திரும்பப் பார்க்கிறேன். கலைஞரோடு,  வைகோவோடும், ஸ்டாலினோடும் அர்ததமற்ற அவர்களின் அரசியல் இருந்து அவர்களுக்கு உழைத்த  காலத்தை  வீணடித்து விட்டு அவசியமில்லாமல் நீண்ட நெடிய காலத்தைக் கழித்துவிட்டோமே, அதை வேறு ஒரு வகையில் பயன்படுத்தி இருக்கலாமே என்று தோன்றுகிறது. காலம் பொன் போன்றது என்ற சிந்தனைவோட்டத்தில் மீண்டும் மீண்டும் வந்து போகிறது.

A barren-spirited fellow; one that feeds
On objects, arts, and imitations,
Which, out of use and stal’d by other men,
Begin his fashion…..
-Mark Antony
(Shakespeare’s JuliusCaesar)

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
கேஎஸ்ஆர்போஸ்ட்
#KSR_Post
23-5-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...