சொல்லாயோ வாய் திறந்து?
—ஆகாய சூரியன் மேற்கினில் சாய
ஏகாந்த வேளையில் மோகமுள் பாய
தூண்டிலில் புழுவாக திருமேனி வாட
தாமதம் இனி ஏனோ இருமேனி கூட
அந்தி வரும் தென்றல் சுடும்
ஓர் விரகம் விரகம் எழும்
என்று வரும் இன்ப சுகம்
ஊன் உருகும் உருகும் தினம்
நாள் முழுதும் ஒவ்வோர் பொழுதும்
உன் வண்ணங்கள் எண்ணங்கள் நெஞ்சுக்குள் நிறைந்திடும்…
நாள் தோறும் பார்வையில் நான் விடும் தூது
கூறாதோ நான் படும் பாடுகள் நூறு
நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட
ஏழையை விடலாமோ இது போல வாட
வெள்ளி நிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்
நள்ளிரவில் மெல்லிசையில் தேனலைகள் நினைவில் எழும்
ஓர் இதயம் உன்னால் இளகும்
இன்னேரத்தில் கண்ணா உன் மௌனத்தை தவிர்த்து
கூறாதோ நான் படும் பாடுகள் நூறு
நானொரு ஆண்டாளோ திருப்பாவை பாட
ஏழையை விடலாமோ இது போல வாட
வெள்ளி நிற வெண்ணிலவில் வேங்குழலின் இசையும் வரும்
நள்ளிரவில் மெல்லிசையில் தேனலைகள் நினைவில் எழும்
ஓர் இதயம் உன்னால் இளகும்
இன்னேரத்தில் கண்ணா உன் மௌனத்தை தவிர்த்து
மோகமுள் பாடல் ரேடியோவில்
9.50 night, 8-5-2023.
No comments:
Post a Comment