Monday, May 15, 2023

#*ஈழம்* #*முள்ளிவாய்க்கால்*

*15-5-2009 #*முள்ளிவாய்க்கால் ரணக்குரல்* :
#*ஒரு சிறுவனின் கண்ணீர் குரல்*
—————————————
இன்றைய நாள் என் வாழ்வில் மறக்க முடியாத நாள், என் அப்பாவின் இறுது அரவணைப்பின் கதகதப்பை உணர்ந்த நாள், என் அப்பாவை கட்டி அணைந்து ஓவென்று அழுது அவருக்கு விடைகொடுத்த நாள், " நான் வரமாட்டன் நீங்க போங்கோ..." என்ற அந்த வார்த்தைகள் கேட்ட நாள். அழுகையும், வெறுமையும்

ஒரு பாக்கில நாலு ஐந்து உடுப்பையும் எடுத்துக்கொண்டு இறுதியாக என்னை கட்டி அணைத்தார். குழப்படி செய்யமா அம்மாவோட இருக்கோனும் அப்பா போறன் என்ற வார்த்தைகளின் பின் என் கண்களில் ஆறாய் கண்ணீர் வடிய அப்பாவும் இறுக கட்டியணைத்து என்னை ஒரு முறை இறுதியாக கொஞ்சி ஆராதித்தார்.

மே மாதம் 15 ஆம் திகதி  2009ம் ஆண்டு வட்டுவாகல் பகுதி மதியம் 11 இலிருந்து 1 மணிக்கிடையில் அப்பாவும் இன்னொருவரும் வந்தார்களஇ நானும் அம்மாவும் பதுங்குழியைவிட்டு வெளியே வந்தோம் அப்பா எங்களை பார்த்து எல்லாம் முடிஞ்சுது நீங்க போங்கோ நான் வரமாட்டன்.



#ksrpost
15-5-2023.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...