Monday, July 29, 2024

கடந்தாண்டு திருநெல்வேலியில் தமிழக அரசு நடத்திய புத்தகக் கண்காட்சி


 கடந்தாண்டு திருநெல்வேலியில் தமிழக அரசு நடத்திய புத்தகக் கண்காட்சி நேரத்தி்ல் R Narumpu Nathan தலைமையில் சிறப்பாக அருமையாக நெல்லை மண் பேர் சொல்லும் தயாரிக்கப்பட்டு நூல்கள் வெளிவந்து இருக்கிறது. பாராட்டுக்கள்..

வாழ்த்துக்கள்….

அதில் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த எழுத்தாளர்கள் அவர்களது படைப்புகள் பற்றிய குறிப்புகளோடு மிகச் சிறப்பாக  திருநெல்வேலி மாதவையா காலம் முதலாக படைப்புகள் வெளிவந்திருக்கிறது.


#நெல்லை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டிருக்கும் இரண்டு நூலில் ஒன்றில் கதைகளும் மற்றொன்றில் கவிதைகளுமாக கட்டுரைகளோடு சேர்ந்து அவை வெளிவந்துள்ளன.


தாமிரபரணிக்கு செல்லும் உற்சாகம் எல்லோரிடத்திலும் எப்போதும் குறுக்குத்துறை சென்றோம். திருநெல்வேலி எழுத்தாளர்கள் வழி அறிந்து கொண்ட தாமிரபரணியைப் பார்ப்பதில் எனக்கு ஆர்வம்  எப்போதும் மிகுதி.  வருடத்துக்கு ஒரு முறை அடியேன் காலை - மாலை 6.30 மணியளவில் படித்துறையில் அமர்ந்து நதியில் கால் நனைத்தபடி  அவர்களின் நினைவுகளை அசை போடுவது வடிக்கை


இதில்  கூத்து என்னவெனில் இதை தயாரித்த பணியில் எனது நண்பர்கள் சிலர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் ஒரு காலத்தில்நண்பர்களாக இருந்தவர்கள்தான். அதன் அடிப்படையில் அவர்களிடம் அந்த நூல்கள் இரண்டையும் அனுப்புமாறு கேட்டு கால் செய்தேன். 


அவர்கள் அனுப்பிய பாடாக இல்லை! 

அவற்றை எனக்கு அனுப்பினால் திமுகவிலிருந்து நான் இடைக்கால செய்யப்பட்டிருக்கிறேன் என்பதால்   தமிழக முதல்வரின் அதிருப்திக்கு உள்ளாக நேரிடும் என்று அஞ்சி இருப்பார்கள் போல….


இவர்களெல்லாம் திருநெல்வேலியில் எனக்கு அணுக்கமானவர்கள் என்று  இதற்கு முன்பு “நிமிர வைக்கும் நெல்லை”  ‘’ பாரதி நினைவு -100 ஆண்டு’’என்ற எனது புத்தகங்கள கை நூலாக நான் தொகுத்து இருந்தேன். அதன் பிரதிகளை 100க்கும் மேல் எனக்கு நெல்லை மாவட்ட நண்பர்கள் என்று சொல்லிக் கொண்ட இவர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன். அதையெல்லாம் மறந்து இருக்கலாம்.


நாம் நினைப்பது போல நம் நிழல் கூட நடப்பதில்லை . பிறகு ஏன் மற்றவர்களிடம் எதிர் பார்க்கிறோம் என

எடுத்துக்கொண்டேன்.


பிறகு நான் அங்குள்ள மாவட்ட நம்பர் 1 உயர் அதிகாரி ஒருவருக்கு அந்த இதழ்களை அனுப்பித் தருமாறு  கை பேசியில் கேட்ட மறுநாளே அந்த புத்தகங்கள் நேற்று, 6-7-2024 வீடு வந்து சேர்ந்து விட்டன. அவரும் கிடைத்து விட்டதா என என்னிடம் கேட்டதும் மகிழ்ச்சி. அவருக்கும் நன்றி.


எனக்கு ஒரே ஒரு கேள்விதான் மிஞ்சி இருந்தது! நீங்கள் எல்லாம் கலை இலக்கியவாதிகளா அல்லது அரசின் நிழல் நிர்வாகிகளா? 


உங்கள் முற்போக்கு  கலை இலக்கியங்களை எல்லாம் எவர் காலடியில் சமர்ப்பித்து விட்டு 

பெயருக்கும் புகழுக்கும் ஆட்பட்டிருக்கிறீர்கள்

என்பது உங்கள் மனச்சான்றுக்குத் தெரிந்தால் சரி. ஆமாம் இது வெட்கம் கெட்ட காலம்தான்.

 

காலம் மாறி வரும்…


#திருநெல்வேலி

#tirunelveli 

#நெல்லை

#நெல்லை 

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

7-7-2024 

@trending

 

@Highlights

 

@follwers


No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...