Monday, July 29, 2024

கீழடி பத்தாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது யானை மருப்பினாலான


 கீழடி பத்தாம் கட்ட அகழ்வாய்வில் தற்போது யானை மருப்பினாலான ( தந்தத்திலான) ஆட்டக்காய் ஒன்று கண்டெடுக்கப்பட்டு,  அது காலக் கணிப்புக்கான கரிமச் சோதனைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.  தமிழ்நாடு தொல்லியல் துறையினால் ஏற்கனவே  மேற்கொள்ளப்பட்ட  அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இத்தகைய ஆட்டக்காய்கள் சங்க காலத்தினைச் சேர்ந்தவை  என அறிவிக்கப்பட்டுள்ளமையும்,  அவை 'சதுரங்கங் காய்கள்' எனத்  தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ளமையும் தெரிந்ததே ( சான்று - கீழடி 4 கையேடு) .  


  எனது பார்வையில்  இது யானை மருப்பினால் செய்யப்பட்ட காய்  மட்டுமன்று,  தோற்றத்தினைப் பார்த்தால் இது  'ஆனை' ( Rook) எனும் வல்லாட்டக் காயினையே சார்புப்படுத்துகின்றது ( 12ஆம் நூற்றாண்டு  பாரசீகக் காய்களை ஒப்பு நோக்குக). 


 சென்ற கிழமை வெம்பக்கோட்டையிலும் வல்லாட்டக்காய்கள் கண்டெடுக்கப்பக்டமை தெரிந்ததே! இவை எல்லாமே குப்தர் காலத்துக்கு முந்தியவை. 👉 இவ்வளவு சான்றுகளை கையில் வைத்திருந்தும் எம்மால் ஏன் குறித்த ஆட்டமானது குப்தர் காலத்துக்கு முந்தியே எம்மிடமுள்ளது எனச் சான்றுப்படுத்த முடியவில்லை? பெயர்ச் சிக்கலே காரணம். Chess இனை சதுரங்கம் என அழைத்தால், அது சதுரங்கா என்ற வடமொழி வழி வந்தது என்றே எண்ணுவர்.  காட்டாக,  பழந்தமிழ் எழுத்துகளை,  'தமிழ்ப் பிராமி' என அழைத்த போது, அது அசோகர் பிராமி வழி வந்தது எனப் பலர் நம்பியது போன்றதே இதுவும்.  பின்னர் 'தமிழி' என மாற்றிய பின்பே வரலாறு மாறியது.  அது போன்றே ' chess' இற்கான தமிழ்ச் சொல்லாக 'வல்லாட்டம் ' என்பதனைப் பயன்படுத்தினாலே,  இந்த ஆட்டத்தின் வரலாறு சரி வரப் புரிந்து கொள்ளப்படும் . சங்ககாலம் முதலே எமக்கு வல்லாட்டம் என்ற சொல்லுக்கான இலக்கியச் சான்றுகள், இலக்கணச் சான்றுகள் உண்டு. இச் சொல்லின் பயன்பாடானது  16  ஆம் நூற்றாண்டு வரை நீடித்தமைக்கான சான்றுகளுமுண்டு.  அதற்குப் பிறகே அச் சொல்லினைத் தொலைத்தோம்.  ஒரு சொல்லினைத் தொலைக்கும் போது,  வரலாற்றினையும் சேர்த்தே தொலைக்கின்றோம்.  


Chess = வல்லாட்டம் 

#வல்லாட்டம்.

No comments:

Post a Comment

உச்சநீதிமன்றதீர்ப்பு #தனியர்நிலங்களஆர்ஜிதம்

# உச்சநீதிமன்றதீர்ப்பு #தனியர்நிலங்களஆர்ஜிதம்  ———————————————————- தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்! வழக்கறி...