#மத்தியபட்ஜெட்2024_25
…
தமிழகத்திற்கு இந்த பட்ஜெட்டில் நிதி இல்லை என்பது வருத்தம் அளிக்கிறது. அது ஒரு கவலைக்குரிய விஷயம்.
அதற்கு பதிலடியாக வரும் 27ஆம் தேதி டெல்லியில் நடக்க இருக்கும் நிடி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள மாட்டேன்! என்று முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பது அரசியல் நோக்கில்
சரியாக படவில்லை.
அப்படி இல்லாமல் காமராஜர் காலத்தில் திட்டமிடப்பட்டு அண்ணா காலத்திலும் நிறைவேற்றப்படாமல் இருந்த சேலம் இரும்பு உருக்காலை திட்டத்திற்கு அனுமதி கேட்டபோது கலைஞர் டெல்லியில் இருந்தார். அப்போதும் இந்த உருகாலைத் திட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால் கலைஞர் சும்மா இருக்கவில்லை அது சம்பந்தமாக அன்றைக்கு காலையில் திட்டக்குழு கூட்டத்தில் (இன்று நிடி ஆயோக்) பிரதமர் இந்திரா காந்தி முன்னிலையில் தனது எதிர் வினை ஆற்றினார். மாலையில் உணவு இடைவேளை பின் அந்த கூட்டத்தில் முதல்வர் கலைஞர் கலந்து கொள்ளவில்லை. நியாயங்களையும் எதிர்ப்பையும் தெரிவித்தார். பின் பிரதமர் அலுவலுக அதிகாரிகள் சேலம் இரும்பலைக்கு அனுமதி உறுதி ஆன பின் பிரதமரின் மாலை திட்டக்குழு டில்லி கூட்டத்தில்
கலைஞர் கலந்து கெண்டது போல ஸ்டாலின் தனது தரப்பு எதிர் வினைகளை ஆற்ற வேண்டும்.
பிறகு இந்திட்டம்எம்ஜிஆர் காலத்தில் அது நிறைவேற்றப்பட்டது. கலைஞரைப் போன்ற இந்த ராஜதந்திரம் நமக்கு வேண்டியிருக்கிறது
சரி, திமுக மத்திய ஆட்சியில் 18 ஆண்டுகள் பங்கெடுத்தப்போ தமிழ்நாட்டுக்கு சந்திரபாபு நாயுடு போல் என்ன சிறப்புத்திட்டம் கொண்டுவந்த….தன் குடும்பத்துக்குமட்டும் வளமானத்துறைய வாங்கலியா?
நிடி ஆயோக் ஆய்வுக்கூட்டத்தைப் புறக்கணிக்கிறேன் என்று முதல்வர் மறுதளிக்காமல் அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களது எதிர் வாதங்களை நியாயங்களை முன்வைத்து அதை வலியுறுத்த வேண்டியது அவசியம் அல்லவா? ஒருவேளை அது மறுக்கப்பட்டால் அதை எதிர்த்துக் கண்டனம் தெரிவித்து அந்தக் கூட்டத்தை விட்டு வெளிநடப்பு கூடச் செய்யலாம்.
புறக்கணிக்கிறேன் என்று தமிழ்நாட்டு முதல்வர் சொல்வது அவ்வளவு ராஜதந்திரம் ஆகாது.
“குணம் நாடிக் குற்றம் நாடி அதில் மிகை நாடி மிக்கக் கொளல்”
என்கிறது குறள்.
பட்ஜெட் 2024-25:
—————————-
1. பின்தங்கிய மாநிலமான பீகாரில் சாலை கட்டமைப்பு வசதிகளுக்காக 26,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
2. சமீபத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட ஆந்திரா - தெலுங்கானா மாநிலங்களின் ஒருங்கிணைந்த தலைநகரமாக இதுவரை ஹைதராபாத் இருந்தது. பிரிக்கப்பட்ட தெலுங்கானாவிற்குள் ஹைதராபாத் வந்துவிடுவதால் ஆந்திராவின் புதிய தலைநகரமான அமராவதி நகர் கட்டமைப்பு வசதிக்காக 15,000 கோடி ஒதுக்கீடு.
3. பெண்கள் & பெண்குழந்தைகள் வளர்ச்சி திட்டங்களுக்கு 3 லட்சம் கோடி ஒதுக்கீடு.
4. India Post Payment Bank வடகிழக்கு மாநிலங்களில் 100 கிளைகளுடன் செயல்படும்.
5. 2004 ம் ஆண்டு துவங்கப்பட்ட Polavaram Irrigation Project இந்தியாவின் இரண்டாவது பெரிய ஆறு கோதாவரியில் முழுமை பெறுவதன்மூலம் நாட்டின் உணவு உற்பத்தி தன்நிறைவு பெறும். :
6. 20 லட்சம் இளைஞர்கள் பயனடையும் வண்ணம் தொழில்துறையில் வேலைவாய்ப்பை (EPFO) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலம் உருவாக்கப்படும்.
7. MSME Term Loans மூலம் கடன் உத்திரவாத திட்டத்தின்படி நபர் ஒருவருக்கு 100 கோடி ரூபாய் வரை அறிமுகம்.
8. 21,400 கோடி ருபாய் முதலீட்டில் 2400 மெகாவாட் புதிய மின் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயம்.
9. முத்ரா கடன் உச்சவரம்பு 10 லட்சத்தில் இருந்து 20 லட்சமாக உயர்த்தப்படுகிறது.
10. நகர்ப்புற வளர்ச்சி மற்றும் அடிப்படை கட்டமைப்பு ரூபாய் 2,66,000 செலவில் விரிவாக்கம்.
11. விவசாயம் & விவசாயம் சார்ந்த துறைக்கான ஒதுக்கீடு 1.52 லட்சம் கோடி .
12. ஏழை , நடுத்தட்டு மக்களுக்கென மலிவு விலை வீடுகள் அமைக்க 3 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
9 வகையான தொழில்களுக்கு முன்னுரிமை ...
1. விவசாயம் & சார்ந்த துறைகளுக்கு முன்னுரிமை ..
2. வேலைவாய்ப்பு & திறண் மேம்படுத்துதல்.
3. மனிதவளம் & சமூகநீதி ...
4. உற்பத்தி சார்ந்த தொழில்கள்.
5. நகற்புற மேம்பாடு ...
6. எரிசக்தி மேம்பாடு ...
7. அடிப்படை கட்டமைப்பு.
8. புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சிகளுக்கு முன்னுரிமை ...
9. வருங்கால தலைமுறை முன்னேற்றம்.
பட்ஜெட் 2024 நேரடி வரிவிதிப்பு சிறப்பு அம்சங்கள்.
* standard deduction increased to Rs 75,000 from Rs 50,000
புதிய வருமானவரி வரம்புகள்.
0-3 lakh - Nil
3-7 lakh - 5%
7-10 lakh - 10%
10-12 lakh - 15%
12-15 lakh - 20%
15 lakh and above - 30%
No comments:
Post a Comment