Tuesday, August 13, 2024

பால கங்காதர திலகர்) 23 சூலை 1856 –1 ஆகஸ்ட் 1920 "தேசியவாதியும்", "


 

பால கங்காதர திலகர்) 23 சூலை 1856 –1 ஆகஸ்ட் 1920 "தேசியவாதியும்", "சமூக சீர்திருத்தவாதியும்", விடுதலைப் போராட்ட வீரர். இந்திய விடுதலை இயக்கத்தின் முதல் மக்கள் ஆதரவு பெற்ற தலைவரும் இவரே. இவரது பெயருடன் கௌரவப் பட்டமான "லோகமான்ய" என்பதையும் சேர்த்து அழைப்பதுண்டு. இந்தியாவுக்கு முதன் முதலில் தன்னாட்சி கோரியவர்களுள் திலகரும் ஒருவர். தன்னாட்சி எனது பிறப்புரிமை அதனை நான் பெறுவேன் என்னும் இவரது புகழ் பெற்ற கூற்று இன்றும் இந்தியாவில் நினைவுகூரப்படுகிறது. முதன் முதலில் மக்களிடையே சுதந்திரம் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தியவர் ஆவார். மக்களிடையே அவருக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அவர் திலக் மகராஜ் என்றும் அழைக்கப்பட்டார். மகாத்மா காந்திக்கு முன்பே தேசிய அளவிலான தலைவர் திலகர் அவர்கள். காந்தி திலகர் அவர்களை "நவீன இந்தியாவின் தயாரிப்பாளர்" என்று அழைத்தார். லோகமான்ய பால் கங்காதர திலகர் அவர்கள் பிறந்த தினம் ஜீலை23,1856. அவரை மகிழ்ந்து போற்றுவோம்.

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...