Monday, August 12, 2024

#வக்கீல்தொழில்கருப்புஅங்கி_குற்ற_பாதுகாப்புஅல்ல

 #வக்கீல்தொழில்கருப்புஅங்கி_குற்ற_பாதுகாப்புஅல்ல

———————————————————

சமீப காலமாகப் பார்க்கிறேன் இன்றைக்கு கூட செய்தித்தாள்களில் வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இன்றைய வழக்கறிஞர் சிலரும்  போதை பொருள், நிலமோசடி நில அபகரிப்பு, கொலை வழக்கு வன்முறையான ரவுடிகள் புழங்கும் கிரிமினல் நடத்தைகளின் அதன் பின்னணியில் இருப்பவர்களாக மாறி இருக்கிறார்கள். இது  சட்டத்துறைமீது அனைத்து மக்களுக்குமான  நம்பிக்கையின்மையை தான் ஏற்படுத்துகிறது. பெரும் கொள்ளைகளில் ஈடுபடும் அல்லது பன்னாட்டு முதலீடுகளில் ஈடுபடும் பலரும் குறுகிய லாபத்திற்காக எல்லாவற்றையும் மீறுகிற போக்கு அதிகரிப்பது அல்லது பணத்திற்காக எது வேண்டுமானாலும் கொலைகள் வரை செய்யலாம் எனும் வகையில் பல்வேறு அதிகாரங்களுடன் ஆயுதங்களுடன் நிகழ்த்தி வரும் இச்செயல்கள்  பொது வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்துவதோடு அல்லாமல் இதில் வழக்கறிஞர்களும் கூட சம்பந்தப்பட்டிருகிறார்கள் என்கிற போதுதான்  இன்றையநிலைமையின் மோசத்தை அல்லது ஆபத்தை உணர வேண்டியதிருக்கிறது.

என்னைப் பொறுத்தவரையில்1980 -90  வரை இம்மாதிரியான நிலைமைகள் தமிழ்நாட்டில் இல்லை!

ஒருவகையில் எல்லோரும் சட்டம் படிக்கலாம் என்று அநேக சட்டக்கல்லூரிகளைத் திறந்தது நல்லது தான்! ஆனால் இவர்களில் பலர் ரெகுலர் என்று சொல்லக்கூடிய கல்லூரிக்குச் சென்று முழுக் கல்வியையும் கற்காமல் டிப்ளமோ மாதிரி வக்கீல் தொழிலுக்காக ஆந்திராவிற்கோ கர்நாடகத்திற்கோ சென்று அங்கு  சட்டக்கல்லூரி வகுப்புக்கே செல்லாமல் எல்எல்பி என்கிற ஒரு பட்டத்தை பலர் ‘வாங்கிக் கொண்டு’ வந்து இங்கு  வழக்கறிஞர் என இம்மாதிரியான வேலைகளில் ஈடுபடுகிறார்கள்!

ஒரு காலத்தில் கருப்பு கோட்டை போட்டுக் கொண்டு நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டுமே புழங்கிய கண்ணியமான வழக்கறிஞர்கள் இருந்தார்கள். இப்போது இப்படியான எல்எல்பிகள் கருப்பு கோட்டை அணிந்து கொண்டு தெருவிலேயே நடமாடுகிறார்கள். காரில் வக்கீல் என்ற அடையாளச் சின்னங்களை ஒட்டிக் கொண்டிருக்கிறார்கள். அநேகம் பேர் வக்கீலே அல்ல. இன்று கூட உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் கழுத்துப்பட்டை அணிவது பற்றி கூறி இருக்கிறார்.

இவர்களின் நோக்கம் என்னவெனில் எங்கே சொத்துகள் கைமாறுகின்றன யாருக்கு அதில் என்ன சங்கடம் அதை முடித்துக் கொடுத்தால் எவ்வளவு கிடைக்கும் எந்த நிறுவனங்கள் தவறு செய்கின்றன.எங்கு மூலதனம் புழங்குகிறது என்பதையெல்லாம் அறிந்து கொண்டு அங்கு மீடியேட்டர் என்று சொல்லக்கூடிய தரகு வேலைகளைச் செய்து வருகிறார்கள். 

அதற்கு இந்தப் புனிதமான வழக்கறிஞர்த் தொழிலைப் பயன்படுத்துகிறார்கள். 1990க்கு பிறகுதான் இந்தப்போக்கு அதிகரித்திருக்கிறது. 

கருப்புக் கவுனை அணிந்து கொண்டு நீதிமன்ற வளாகங்களுக்கு வெளியே திரிவது தவறு! பதிலாக நெக் பாண்ட் மற்றும் வெள்ளுடை கீழே கருப்பு பாண்டு அணிந்து வெளியில்   Quasi judiciary authoritiesயிடம் வாதாட போகலாம். நான் இன்று ஒரு busy travelling Arbitrator.

என்னுடைய சட்டப் படிப்பு முடிந்து பட்டம் பெற்ற பின் அதைப் பதிவு செய்து விட்டு வாழ்த்துகள் வாங்குவதற்காக 

எனது உறவினர்  உச்ச நீதி மன்ற 1970களில் நீதிபதியாக இருந்து நாகம்பட்டி அழகர்சாமி, சென்னை உயர் நீதிமன்ற தலைமை எம். எம்.இஸ்மாயில்  மற்றும் நீதிபதிகள்   Justice என். கிருஷ்ணசாமி ரெட்டியார், அண்ணாச்சி Justice எஸ் ரத்தினவேல்பாண்டியன் சென்றிருந்தேன்.அப்போது எனக்கு சீனியராக இருந்தவர் ஆர் காந்தி. 

அப்போது நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் என்னிடம் கூறினார் “அப்பா! நீ இந்த சட்டத்தின் மாண்பையும் கண்ணியத்தையும் காக்க வேண்டும் . நீதிமன்ற தவிர பொது இடங்களில் கருப்புக் கவுனோடு இருக்கக் கூடாது! நீதிமன்ற வளாகத்திற்குள் மட்டும் தான் அதை பயன்படுத்த வேண்டும்.

பொது இடங்களுக்கு செல்லும்போது  நெக்பாண்ட் அணிந்து  வெள்ளை சட்டையும் கருப்பு பேண்டும் அணிந்து நடந்து செல்லாமல் ஆட்டோவில் செல்ல வேண்டும்” என்று சொன்னார். இது 1970 களில் இவர்கள் சொன்னது. இன்றும் எனது மனதில் உள்ளது.

இப்போது பார்த்தால் முழு கருப்புக் கவுனையும் அணிந்து கொண்டு மரத்தடியில் பெட்டி கடைகளில்  அங்கு இங்கு என இந்த எல்எல்பிகள் கண்டபடி நிற்கிறார்கள்.

எவ்வளவு கண்ணியமானது இந்த வக்கீல்த் தொழில்! லேனர்ட் புரபஷன்  என்பார்கள்! வேறு எந்த தொழிலுக்கும் கூட இந்தச் சொல்லைப் பயன்படுத்த மாட்டார் கள்.

இன்று மூன்று முக்கியமான செய்திகளை பார்க்கிறேன்…….

ஒரு பெண் வழக்கறிஞராம். அரசியலிலும் இருக்கிறாராம். அவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று  இருவர் மற்றும் ஆண் வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொன்னேரி பக்கத்தில் ஏதோ நில அபகரிப்பு வழக்காம் ஒரு வழக்கறிஞர் இன்று கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

இன்னொரு வழக்கறிஞர் ஏதோ குற்றவியல் வழக்கில் கைது செய்யப்படுகிறார். இவர்களையெல்லாம் வழக்கறிஞர் என்று எப்படி சொல்லுவது புரியவில்லை! இதனால் நல்ல பல நேர்மையான வழக்கறிஞர்களை வேதனை படுத்துகிறது.

இன்று மாலை சென்னையில் ஜாதி, அரசியல் ரீதியாக வழக்கறிஞர்கள் மோதல் என்ற செய்தி டிவி சேனல்களில் ஒளிபரப்பு செய்கின்றன

வழக்கறிஞர் தொழில் என்பது தான் செய்யும் குற்றங்களுக்கான பாதுகாப்பு என்று ஒருவர் கருதக்கூடாது. இன்றைய நவீனப் பொருளாதாரத்தில் வழக்கறிஞரராய்ப்  படிக்க வைக்கப்படுவதெல்லாம் தங்கள் குடும்ப நலனை பாதுகாத்துக் கொள்வதற்காக தான்  என்று தோன்றுகிறது.

மிக கண்ணியமான இந்த வழக்கறிஞர்கள் தொழில் இப்படியாக பணத்திற்காகவும் வணிக நோக்கங்களுக்காகவும் சீரழிவது நாட்டுக்கு நல்லதல்ல. வழக்கறிஞர் தொழில் என்பது ஒரு அழகு  கௌரவம் கண்ணியம்(dignity) சார்ந்த பிரச்சனை அல்ல. அது கற்றறிந்த கண்ணியமான தொழில் அதன் மாண்பை குலைக்கக் கூடாது. குறிப்பாக வக்கீல் தொழிலை வணிகம் சார்ந்து விளம்பரப்படுத்தவே கூடாது என்பது ஒரு முக்கியமான அறம்.

#advocateprofession

#வழக்கறிஞர்

#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

19-7-2024.

No comments:

Post a Comment

2023-2024