#ரசிய_விளாடிவோஸ்டாக்_டு_சென்னை
விளாடி வோஸ்டாக் டு சென்னை துறைமுகக் கடல் வழி போக்குவரத்திற்கான ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி அவர்களின் ரஷ்ய பயணத்தின் போது 2019-ல் அடிக்கல் நாட்டுப்பட்டு பேச்சுவார்த்தையில் இருந்த இந்த திட்டம் இடையில் கொரோனா கால நோய் தாக்குதலுக்கு இடையே தள்ளிப் போடப்பட்டது. பிறகுமான பேச்சுவார்த்தையின் போது உக்கிரேன் யுத்தம் வந்து விட்டதாலும் மேலும் இந்த தள்ளிவைப்பு நீடிக்கப்பட்டிருந்த சூழலில் ரஷ்ய அதிபர் புடினும் பிரதமர் மோடியும்
இப்போது இந்தத் திட்டத்தைப் புதுப்பித்து இருக்கிறார்கள்.
இத்திட்டத்தால் சென்னை துறைமுகம் மிகுந்த அளவில் ஒரு சர்வதேசப் பொருளாதார மண்டலமாக மாறும் என்றும் சுமார் பத்து நாடுகள் தங்கள் பொருள்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யவும் மற்றும் கச்சா எண்ணெய் இயற்கை உரங்கள் இவற்றை பரிமாறிக் கொள்ளும் வகையில் இந்தக் கடல் வழித் திட்டம் மிகுந்த பலன் கொடுக்கும் என்று நிபுணர்கள் கருதுகிறார்கள்.
ஏற்கனவே ரஷ்ய பீட்டர்ஸ் பர்க் நகரில் இருந்து இந்தியாவின் மும்பைத் துறைமுகத்திற்கு இப்படி ஆன கப்பல் வழிப் போக்குவரத்து இருக்கிறது.
என்றாலும் இந்த புதிய திட்டத்தால்
நமது சென்னைக்கு குறைந்த செலவில் ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகங்கள் நடைபெறலாம் என்பதோடு சென்னையில் இருந்து சுமார் பத்தாயிரம் கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் ரஷ்யாவின் இரண்டு நகரங்களை இணைக்கவும் இந்தக் கடல் வழிப் போக்குவரத்து வழிவகை செய்கிறது.
தோராயமாக 40 நாட்கள் பயணம் செய்ய வேண்டிய இந்த தூரத்தை புதுப்பிக்கப்பட்டு இருக்கும் இந்த கடல்வழிப் போக்குவரத்து 20 நாட்களாகச் சுருக்கித் தந்திருக்கிறது.
மரபான இந்திய சோவியத் நட்புறவு இப்படியாக மீண்டும் பொருளாதார உறவுகள் மூலம் புதுப்பிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியைத் தருகிறது இரு பெரும் தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.
சமீபத்தில் பிரதமர் மோடி அவர்களின் ரசிய பயணத்தில் அதிபர் புடின் அவருக்கு சிறப்பான முறையில் மதிப்பு மரியாதைகளையும் ராணுவ அணிவகுப்பையும் கொடுத்து வரவேற்று இருக்கிறார். ஒரு பக்கம் இந்தியாவிற்கு அமெரிக்காவுடன் உறவு இருந்தாலும் கூட அதன் மறுபக்கம் கம்யூனிஸ்ட் பிளாக்கில் இந்தியா நன்மதிப்பு பெறுவது இந்தச் சந்திப்பை மிக முக்கியமானதாக ஆக்குகிறது.
அதற்கு ஏற்றார் போல் ஒரு காலத்தில் பீட்டர் தி கிரேட்” நிறுவிய ரஷ்ய நாட்டின் உயரிய விருதான “புனித ஆன்ரு தி அப்போஸ்தலர் ஆணை”என்ற விருதை மோடிக்கு வழங்கி புடின் அவரைக் கௌரவித்திருக்கிறார். இதற்கு முன்பாக பிரஷ்னெவ் காலத்தில் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் அங்கு சென்றபோது இந்த விருதை அவருக்கு வழங்க இருந்தும் ஏனோ பிறகு அவருக்கு வழங்கப்படவில்லை.
இதற்கிடையே செய்தித்தாள்களில் அதிகம் வெளிப்படாத ஒரு சுவாரசியமான விஷயம் என்னவெனில் ரஷ்ய ஏர்போர்ட்டில் இருக்கும் பேட்டரி காரில் புடின் மோடியை அருகில் அமர வைத்துக்கொண்டு அவரே அதைத்தன்கைகளால் ஓட்டியபடியே சுற்றி காண்பித்துக் கொண்டும் அவருடன் பேசிக்கொண்டும் வருகிற காணொளிகளைக் காண முடிகிறது.இதுவரையில் புடின் இம்மாதிரி வேறு தலைவர்களுடன் அமர்ந்து கார் ஓட்டியதில்லை என்று மாஸ்கோ தரப்பில் தெரிவிக்கிறார்கள்.அந்த வகையில் இந்திய ரஷ்யா நட்புறவு நல்ல முறையில் வலுப்பெற்று வருவதை இச்சம்பவம் தெரிவிக்கிறது
இருவருக்கும் ஆன பேச்சுவார்த்தையின் போது இந்து மகா சமுத்திரத்தின் அமைதி மண்டலம் பற்றியும் இந்தியா மீதான சீன ஆதிக்கம் பற்றியும் அமெரிக்க இக்கோ கசியா பற்றியும் கலந்து உரையாடிக் கொண்டதாகச் செய்திகள் தெரிவிகின்றன.
எனக்குத் தெரிய இது குறித்த பிற செய்திகள் விபரங்கள் ஏதும் இந்திய தமிழ்ச் செய்தித்தாள்களில் அதிகம் காணப்படவில்லை! ஆனால் மாஸ்கோ செய்திகள் மேற்கண்டவாறு உற்சாகத்துடன் கூறுகின்றன.
அதேபோல் உக்கிரேன் யுத்தம் குறித்த அபிப்ராயங்களில் மோடி தன் கருத்தை முன்வைத்தாரா என்று தெரியவில்லை? ஆனால் அங்கு யுத்தம் நிறுத்தப்பட்டு அமைதி திரும்ப வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என மோடி வலியுறுத்தி இருப்பார் என்றாலும் அதை ரசிய அதிபர் புடின் எப்படி எடுத்துக் கொள்வார் என்றும் தெரியவில்லை.
இதில் முக்கியமான இன்னொரு விஷயம் என்னவெனில் இந்த உக்கிரேன் போரில் இந்தியாவில் இருந்து ஆட்களை ரஷ்ய இராணுவத்திற்கு எனத் தேர்ந்தெடுத்து அங்கே அவர்கள் ரஷ்யாவிற்கு ஆதரவாக போரில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என்ற ஒரு தகவலும் இருக்கிறது. குறிப்பாகப் பஞ்சாப் தெலுங்கானா மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ரஷ்ய ராணுவ வீரர்களாகப் படையணியில் சேர்க்கப்படுகிறார்கள் என்கிறார்கள்.
அவர்களை அங்கிருந்து மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவர வேண்டும் என்பதும் இந்தியாவின் நெடுநாள் கோரிக்கையாக இருக்கிறது.
இப்படியான இந்த இரு நாட்டு தலைவர்களின் சந்திப்பு சர்வதேச அளவில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் ஆகிறது. இவர்களுக்கு இடையேயான நல்லுறவில் மேலும் ஆன நட்பில் உலக அமைதியோடு பல நன்மைகளும் அடுத்தடுத்து நிகழ்ந்தால் நல்லதுதானே!.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
16-7-2024.
No comments:
Post a Comment