Thursday, August 22, 2024

#ஜாதிஅரசியல்

 #ஜாதிஅரசியல்

———————-

ஜாதி இல்லாத சமுதாயம் படைக்க வேண்டும் என்று பொதுவாகவே எல்லோரும் பேசுவார்கள்.  அந்த வகையில் அது  எப்போதும் பொதுவாகத் தான்  போய்விடும்! ஜாதிவாரி கணக்கு எடுப்பு, ஜாதி கட்சிகள்,மறைமுக ஜாதி ஏற்பு தேர்தல் நிலைகள் என …  நாடாளுமன்றத்தில் கனிமொழி கூட ஏன் எப்போதும் சாதி பற்றியே பேசுகிறீர்கள் கேட்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பி உள்ளார். 


கனிமொழி அவர்களே!

நீங்க நாடாளுமன்றத்தில , தலையை ஆட்டி திக்கிதிக்கி ,ஒருவரைப் பார்த்து  ஜாதியை கேட்பதற்கு வெட்கமா இல்லையா ? ன்னு நீங்க கேட்டதை

 ரொம்ப ரசிச்சு பார்த்தேன் .


இப்ப இந்தியாவில தான நீங்க இருக்கீங்க ? 

#மனிப்பூருக்கு எடுத்துட்டுபோன அந்த பெரிய candle வைச்சிருக்கீங்களா ?  தேடிப் பாருங்க  , கொஞ்சம் பொடி நடையா கொல்கத்தா வரை போயிட்டு வருவோம் .


இவரும் தூத்துக்குடி தொகுதியில் நாடார் பெரு மக்கள் அதிகம் உள்ள தொகுதியில் தானே வாக்குக் கேட்டு நின்றார். அங்கு இரு முறை ஜெயித்தும் இருக்கிறார். அவர் ஒரு நாடார் என்று அங்கு பிரச்சாரம் செய்யப்பட்டதும் அறிந்ததே!அவர் கிராமணி என்கிறார்கள் கடலூர் மாவட்டத்திற்கு அருகே ஸ்ரீ முஷ்ணம் என்கிற ஊரில்  அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் பிறந்தவர். மேலும் ஸ்ரீமுஷ்ணத்தில் வாழ்பவர்கள் பெரும்பாலோர் கிராமணிகள் தான். ராஜாத்தி அம்மாள் கிராமணிதான் என்பது உண்மையோ பொய்யோ அது எனக்குத் தெரியாது! அதுவும்  தகவல்களின் பேரில்தான்!.


மற்றபடிஇதையெல்லாம் ஒருவருக்கு அடிப்படையான தகுதிகளாக வைத்துக்கொள்ள வேண்டியதில்லை தான். ஆனால் பொதுவாழ்வில் உள்ளவர்கள் சாதி ஒழிய வேண்டும் என்று கூறுவதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா? 


வைகோ கம்மா அதிகம் வாழும் சிவகாசி மற்றும் விருதுநகர்  தொகுதிகளில் தான் நாடாளுமன்ற தொகுதியில் நின்றார்.. பாட்டாளி மக்கள் கட்சி ராமதாஸ் அவர்கள் சாதி வாரி கணக்கீடு செய்து வன்னியர் ஆகிய எங்களுக்கு இன்னும் அதிகம் இட ஒதுக்கீடு வேண்டும் என்று தான் கேட்கிறார்!.


ஆனால் பொதுத்தளத்தில் சாதியை ஒழிப்போம் என்று  மட்டும் சொல்லுவார்கள்! ஒருபோதும் சாதியை ஒழிக்கவும் மாட்டார்கள்! அதன் ஆர்ப்பாட்ட நலனை கேட்டுக் கொண்டே தான் இருப்பார்கள்.


கனிமொழியும் ஏன் சாதிப்பார்க்கிறார்கள் என்று ஆதங்கத்துடன் நாடாளுமன்றத்தில் பேசுகிறார்! சரி! இவர் மணிப்பூருக்கு சென்றாரே மெழுகுவர்த்தியெல்லாம் ஏந்தி ஊர்வலமும் வந்தார். அப்படியானவர்  ஏன் கல்கத்தாவுக்குச் செல்லவில்லை? இங்கே பக்கத்தில் இருக்கும் தமிழ்நாட்டின் ஒரத்தநாடுக்குச் செல்லவில்லையே?


#கொல்கத்தாசம்பவம் ஓயும் முன்னே தலைப்பு செய்தியில் வரும் அளவு மற்றொரு சம்பவம் .


பெற்றோரை இழந்த  ஒரு மைனர் பெண் , உறவினர்களும் கைவிட்டதால்  எதுவும் புரியாமல்  ஏதோ பஸ்ஸில் ஏற கண்டக்டர் நான் டிக்கெட்டிற்க்கு பணம் தர்றேன்னு நல்லவன்

வேஷம் போட்டு Dehradun  கூட்டிண்டு போய் அங்க இன்னும் மூனு பேரை கூட்டு சேர்த்து  அந்த பிஞ்சை நாசம் செஞ்சு , அவளை  Patiala விற்கு கூட்டிண்டு போக திட்டம் போட்டு , வழியில சாப்பிட ஒரு hotel ல இறங்க , அங்க இருந்த ஒரு security guard க்கு இவர்கள் மேல் சந்தேகம் வர  police help line க்கு call செஞ்சு , இந்த ஐந்து பேரையும் arrest செய்து இருக்கிறார்கள் .


அந்த பெண்னிற்கு தன்னுடன் நடந்த  விபரீதம் கூட புரியவில்லை .


அந்த security guard சமயோசிதமாக நடந்து கொண்டிருக்கா விட்டால் அந்த பெண்ணை இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்களோ ?  

ஏதோ  அந்த guard ஒருவராவது நல்லவராக இருந்து குழந்தையை மீட்க உதவினாரே என்ற ஒரு சிறு ஆறுதல் .


30-40 வருடங்களுக்கு முன்பெல்லாம் இப்படி இல்லையே . தனியாக  school , tution   போய்க்கொண்டு இருந்தோமே  எந்த பயமும் இல்லாமல் .  

எல்லோரையும் நம்பி பேசி பழகிக்கொண்டு  இருந்தோமே நம்பிக்கை யுடன் . 


#சாத்தான்குளம்காவல்நிலையம்மரணத்திற்குகனிமொழி மேலும் கீழும் குதித்தார். தற்போதுஇதுவரை தமிழ்நாட்டில் காவல் நிலைய மரணங்கள் நூறு வரை நிகழ்ந்திருக்கிறது என தகவல்.


அதற்கெல்லாம் இதுவரை அவர் வாயே திறப்பதில்லை! அதையெல்லாம் எடுத்துரைத்துப் பேச வேண்டியதுதானே?


தனக்கு ஒரு நியாயம் வேறு ஒருவருக்கு ஒரு நியாயமா?

மற்றவர்களுக்கு இவர்கள் சீமென்ஸ் செய்கிறார்கள்.


என்னதான் சாதி மறுத்து பேசினாலும் தூத்துக்குடியில் தானே கனிமொழி மீண்டும் மீண்டும் நிற்கிறார். அவர் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னையில் தானே! அங்கே பெரும்பாலான சாதிகள் ஒரு தொகுதியில் இல்லையே! ஏன் அங்கே ஏதோ ஒரு தொகுதியைக் கேட்டு நிற்க வேண்டியதுதானே!


ஆக சாதி மறுத்து பேசுகிற அனைவரும் தங்கள் சாதிகளுக்கு தண்ணீர் ஊற்றி எல்லாம் வளர்ப்பதில்லை! பாலூட்டி வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.


நான் சாதி இல்லை என்று சொல்லவில்லை. இன்று அதன் பிரச்சினை கீழ் மட்டம் வரை சென்று விட்டது. அனைத்தையும் கணக்கில் எடுத்து சாதிகளுக்கு அப்பால் அரசியல்1/2

No comments:

Post a Comment

உச்சநீதிமன்றதீர்ப்பு #தனியர்நிலங்களஆர்ஜிதம்

# உச்சநீதிமன்றதீர்ப்பு #தனியர்நிலங்களஆர்ஜிதம்  ———————————————————- தேசிய அளவில் கவனம்பெற்ற தீர்ப்பைக் கண்டுகொள்ளாத தமிழ் ஊடகங்கள்! வழக்கறி...