Thursday, August 15, 2024

#கிராவிருது

 #கிராவிருது 

இந்தியாவிலேயே ஞானபீடம் மற்றும் சாகித்திய அகடமி விருதுகளுக்கு வழங்கப்படும் தொகையை விட அதிகபட்சமாக ஐந்து லட்சத்தை நம்   தமிழ் இலக்கியவாதிகளுக்கு மறைந்த   கி. ராஜநாராயணன் அவர்கள் பெயரால் பொற்கிழி வருடம் வருடம் செப்16 அன்று சக்தி மசலா மூலம் வழங்கி படுகிறது. அத்தகைய சிறப்பு மிக்க விருது இந்த வருடம் வரும் செப்டம்பர் 16ஆம் தேதி கோவை பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரி வளாகத்தில் வைத்து இந்த விருது மதிப்பிற்குரிய நாஞ்சில்நாடன் அவர்களுக்கு வழங்கப்படும்.


இது  முறையான தேர்வுக் கமிட்டியின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு.


இந்த அறிவிப்பை தேர்வு குழு முறையாக  அறிவிப்பதற்கு முன்பாகவே முகப்புத்தகத்தில் பலரும் இதை அவசர அவசரமாகப் பதிவு செய்கிறார்கள்.


இலக்கியவாதிகளுக்கு இடையே ஏன் இந்த கண்ணியமற்ற போக்கு நிலவுகிறது என்று தெரியவில்லை!

இப்படியான பதிவுகள் விருதை கொடுப்பவர்களுக்கும் வாங்குபவர்களுக்கும் இடையே சிக்கலை உண்டு பண்ணும் என்பது கூடத் தெரியாதா?


சற்றுப் பொறுமை காப்பது உடன் முறையான அறிவிப்பு வந்த பிறகுதான் அதை பகிர்ந்தும் கொள்ள வேண்டும்!


கிரா விருதை பெரும் நாஞ்சில் நாடன்அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்!!!


#கிராவிருது


#ksrpost

#கேஎஸ்ஆர்போஸ்ட்

12-8-2024.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...