Thursday, August 15, 2024

இன்னிக்கு ஆடிக் கடைசிச் செவ்வா,,,,,

 

இன்னிக்கு ஆடிக் கடைசிச் செவ்வா,,,,,
அம்மைக்குத் திருநா[ள்]
இன்னிலேந்து கடந்த நாலு செவ்வாச்சையும்,,,
திருநா[ள்] தான் கொண்டாட்டம் தான்,,,
அன்னிக்கெல்லாம்,,,
அம்மைக்கு அலங்காரம் பண்ண,,,
பூசாரி தாணப்பண்ணன்,,,
நயம் சந்தன வில்லையை வாங்கிட்டு வந்து,,,ஊற வச்சு,,, அதையும், அரைச்சு மசிச்சு, அதை வைச்சி அம்மையை அலங்காரம் பண்ணினா,,,, !
சந்தன வில்லை இல்லேன்னா ?
பச்சரிசியை
ஊறவச்சு,,
மாவு இடிச்சு,,சலிச்சு,,,பிசைஞ்சு,,, அம்மைக்கு மாக்காப்பு செஞ்சான்னா,,,, !
அம்மை கருவறையில் இருந்தாலும்,,
துள்ளிக் குதிச்சு ,,,,
நம்மளப் பார்த்து ஓடி வருகாப்புல இருக்கும்,,, !
ஆமா,,
அவ்வளோ,,,துடியா,,,, இருக்கும்,,,
அந்த அலங்காரம்,,,, !
அதும்,,,
அம்மைக்கு காலுக்கு கீழே இருக்க சிங்கத்தைப் பார்த்தா,,,,?
அதுவும் பிடறியை சிலிர்த்துகிட்டு கர்ஜிக்கிற மாதிரியே இருக்கும்,,,
பூசை கழிக்க,,,, எல்லாம் ரெடியாக்குனதும்,,,,
மொத மணியை அடிக்க ஆரம்பிப்பான்,,,, !
பூசைக்கு தாணப்பன் பூசாரி ரெடியாயிட்டான்னு ஊருக்கு சொல்லுற அழைப்பொலி அதுவாக்கும்,,, !
ஊர்ல உள்ள குஞ்சு குளுவானுங்க தான் மொதல்ல வந்து நிக்கும்,,,
மெதுவா ஆளுகளும்,,, ஆணும் பொண்ணுமா வருவா,,, !
கொஞ்சம் கூட்டம் சேர்ந்ததும்,,,
பூசைக் கழிக்க
ஆரம்பிக்கதுக்கு முன்னால,,, வைரவருக்கு,, தேங்காபழம் வைக்கிற மாதிரி,,, வந்து,,
அன்னிக்குள்ள உபயதாரர் வந்துட்டாளான்னு,,
ஒரு பார்வை பா(ர்)த்துருவான்,,, !
அவாள் வரலேன்னா,,,
ஒரு சலிப்பு மொகத்துல ஓடும்,,, !
ஆனா,,,லும்,,
அத வெளிக்காட்டாம,,,
உள்ளுக்குள்ள பொதைச்சுக்குவான்,,,
வந்துட்டாள்ன்னா,,,
ஆரம்பிச்சுரலாமா,,,? போத்தியோன்னு,,,,,, மெல்லக் கேப்பான்,,,!
அவ்வளும்,,,
தன்னச் சுத்திப் பாப்பா,,,,
அன்னிக்கொரு நாள் ராசா,, !
தன்னோட நாட்டைப் பாக்குற மாதிரி,,பார்த்துட்டு,,,
எல்லாரும்,,வந்துட்டான்னா,,,
நீ அரம்பிச்சுரு தாணப்பா,,,,,,,,,,,,,,ன்னு,,, சொல்லுவா,,,
அதும்,,
உபயதாரர் வீட்டம்மா தான் சொல்லுவா,,,,
ஆரம்பிக்கலாமான்னு கேட்டது,,,
ஐயாகிட்ட தான்னுன்னாலும்,,
பதிலென்னவோ ?
அம்மா தான் சொல்லுவா,,,,
எல்லாரும் வந்துடாளான்னு பாத்துக்கோ தாணப்பான்னு,,,
சொன்னா,,,?
அதுக்கு அர்த்தமே வேற,,, வேறயாக்கும்,,,,
அட,,பொறுலே,,, தாணப்பா,,
கொஞ்சம்,,பொறுக்க மாட்டியோ,,,,,?
எம் மருமவ வரல பாத்துக்க,,,,
எம் மவளுக்கு மைனி வரல பாத்துக்க,,,
மருமகனையும்,,காணோமுங்கிற,,,,,,,,,,,,,,, குறி சொல்லு அது,,,
அம்மைக்கு மாலை சொல்லி இருந்தனே !
மைலாடிப் பண்டாரம் கொண்டுட்டு வந்தானா ?
போட்டுட்டியா ?
பைசா,,,நெறையக் கொடுத்தாக்கும் வேண்டுனது,,,,
போட்டிருக்கேல்லா,,,,
எதுக்கும்,,பாத்துக்க,,,, தாணப்பா !
பிச்சிவெள்ளக் கொடுத்தானா ?
உபயதாரர் அம்மா தான் சொல்லுவா,,,, !
ம்ம்ம்,,,
அதுக்கும் தலையாட்டுவான்,,,,
அதுக்கு அர்த்தம் வேறயாக்கும்,,,
லே ,,தாணப்பா,,,, பூசை கழிஞ்சதும்,,,
பிச்சி வெள்ளைய,,மல்லியை எல்லாம்,,,
எல்லாத்துக்கும் வெளம்பிராதேலே,,,
எனக்கிட்ட கொடுக்கணுக்குமாக்கும்,,,,, ங்கிற குறி சொல் அது,,,
அப்பயும்,,
தாணப்பண்ணன்,,,
மொகத்துல,,,
ஒரு இளநகை ஓடும்,,,
கருக்கு சீவ,,மறந்துட்டேன்,,,ன்னு,,ஓடுவான்,,, !
கருக்கு இருக்கா,,,,,?
இருக்கும்மா,,,, !
இதையா வெச்சிருக்க,,,,
நம்ம தோப்புல செங்கழனிக் கெடக்கில்லா,,,,
அத எடுத்துத்திருக்கலாமே,,,?
இதயெல்லாம்,,,மொதல்லயே சொல்ல மாட்டயா,,,,?
நம்ம,,,அம்மைக்கில்லா செய்யோம்,,, !
அதை அவளுக்கு கொடுக்காம யாருக்கு கொடுக்க போறோம்,,,,
செங்கழனி கேட்டதும்,,,
போதும்,,போதும்,,,
ரெண்டு ரூவாயாக்கும்,,இந்த எளநின்னு சொன்னதெல்லாம்,,,
பூசாரி தாணப்பன்னுக்குள்ள ஓடும்,,,
இருந்தும்,,,,
ஒன்னும் பேசாம,,,ஓடுவான்,,
அவன் கால் வலி,,அவனுக்கும்,,
அவம் பொண்டாட்டிக்கும் மட்டும் தான தெரியும்,,,
வெட்ட வெள்ளன,,,, நாலு மணிக்கு எழுந்துரிச்சு,,
புட்டம்பதுக்கும்,,
வடைக்கும்,, ஊற வைச்சு,,,
அரைச்சு,, பிசைஞ்சு,,
பொடிச்சு,,சலிச்சு,,,
முதுகுத்தண்டு விண் விண்ணென்னு வலிக்கும்,,அவனுக்கு,,,
குலசேகரம்மை,,,சிரிப்பா,,,,
தாணப்பண்ணனுக்கு வெப்ராளமா வரும்,,, !
ஆனாக்
காட்ட முடியாதுள்ளா,,,,, !
ரெண்டு பொட்டப்புள்ளய,,,, கூட ஒரு பய,,
மூணு மக்க,,,,
கொலுசம்மைக்க களத்துல,,,வீடு,,, !
அது கெடக்கு,,,,
ஒரு நூறு வலி,,,,
கோவிலைச் சுத்தி வெளையாடுக பிள்ளையளோட சத்தம் அதிகமாகும்,,,,
ஏ !
தாணப்பா,,, பூசைக்கு நேரமாச்சுல்லா,,,,,
ஊர் டிரஸ்டி யாராவது அந்தப் பக்கமா வந்தா,,
அவாள் வேற ஒரு குரல் கொடுப்பா,,, !
இன்னிக்கு மாதிரி,,
அன்னிக்கு செல்போனெல்லாம்,,, கெடையாது,,
பக்கத்துல,,,
எவம் பாவமா நிக்கானோ ?
அவனை ஏலேய்,,,, இங்க வாலேன்னு கூப்பிட்டு,,
மைனியைக் கூட்டிட்டு வாறீயாலேன்னு உபயதாரர் வெரட்டுவா,,,
அவ்வளும்,,
சீவி சிங்காரிச்சு,, மெதுவா,,,, வருவா,,,
அவ்வ,,வருகதுக்குள்ள
எவனாவது பயக்க மணி அடிச்சாலும்,,,,
பூசாரி தாணப்பனுக்குத்தான் கொடை நடக்கும்,,, !
எல்லாரும் வந்ததும்,,,
மணி அடிக்க ஆரம்பிப்பான்,,, !
ரெண்டு அடி அடிச்சிட்டு,,,
பக்கத்துல இருக்க எளவட்டம் கையில மணிக் கயித்தைக் கொடுத்துட்டு,,,
அம்மை கொலுவிருக்கிற கருவறைக்குள்ள,,
திரையை வெலக்கிட்டு ஓடுவான்,,, !
கைமணியைத்தூக்கிட்டு,,,
தாம்பாளத்தட்டும்,,, கையுமா,,,, கன்னிமூலை விநாயகருகிட்ட ஓடுவான்,,, !
அப்படியே மேலாங்கோட்டுக்காரிக்கும்,,ஒரு பூசை நடத்திட்டு,,,
திரும்ப,,, கருவறைக்குள்ள ஓடுவான்,,,,
உள்ள தகிச்சிட்டிருக்கிற தனல்ல,,, ஊதி,,
கங்காக்கி,,அதுல,,,
ஒரு கை சாம்பிராணியை அள்ளிப் போடயில,,,,
சாம்பிராணி புகை,,, கருவறை முழுக்க பரவும்,,
இப்ப,,,
கை மணியை வேகமா அடிப்பான்,,, !
மகனுகிட்ட சொல்லி,,,,திரையை வெலக்குவான்,,, !
அந்த சாம்பிராணி புகையில,,,,
அம்மை அவ,,,
சிரிப்பா,,,, ஆனந்தமா,,,,,, சிரிப்பா !
ஏழடுக்கு தீபம் காட்டி,,
மூணடுக்கு தீபம் காட்டி,,
கச்ச தீபம் காட்டி,,,
செவ்வரளி பூ வீசி,,
முத்திரை காட்டி,,,
அதுக்குப் பின்னால,,,,
கர்ப்பூர ஆரத்தி,,காட்டையில,,,
கை மணீ சத்தமும்,,,
காண்டா மணிச் சத்தமும்,,,காதெல்லாம்,,நிறைக்க,,,
மெல்ல,,,,, மெல்ல,,,, கெண்டி தண்ணி எடுத்து
தாணப்ப அண்ணன்,,,
பிரசாதம் கொடுக்க,,,,தட்டெடுத்துட்டு கருவறையை விட்டு வெளிய வருவான்,,,
உடம்பெல்லாம்,,,வேர்த்து ஊத்தும்,,,
அப்படியே,,வைரவருக்கும்,,, ஒரு பூசையைக் கழிச்சு,,,,ட்டு,,,
தின்னூறு, சந்தனம், கொஞ்சம் உதிரு பூ இருக்க பிரசாத தட்டோட,,,, வருவான்,,, !
நீட்டுகிற கையைப் பாத்தே,,,,
தின்னூறும், சந்தனமும்,,, கொடுப்பான்,,,
சில கைக்கு பூவும்,,வரும்,,,
அவங் கணக்கு தப்புனதே இல்லயாக்கும்,,,
கோவிலத்தாண்டி தெருவுலயும்,,,
சமயத்துல கூட்டம் நிக்கும்,, !
அத்தனைக்கும்,,,
அந்த பித்தளத் தட்டுல இருக்க,,,, சந்தனம் தின்னூரும் தான்,,,
அதுக்குப் பொறவு,,,,,
புட்டம்பது போணியையும்,,,
வடை இருந்தா,,,,?
அதையும்,,சேத்து எடுத்துட்டு ,,,,,,
அவன் கருவறை வாசல்ல,,,,வந்து நின்னு,,,,,
கூட்டத்தை கண்ணால அளப்பான்,,, !
புட்டம்பதை விளம்பிரலாமான்னு,,,
உபயதாரரைக் கேப்பான்,,,
அவ்வளும்,,,
தாராளமா,,,,
நம்ம பிள்ளையளுக்குத் தான,,,வெளம்புக,,
நல்லா,,,,தாராளமா,,,வெளம்பு,,, தாணப்பா,,,
பிடிச்சு வெளம்பு தாணப்பா,,
எல்லாத்துக்கு கிட்டணும்,பாத்துக்க,,,
ஆஹா,,
குறி சொல்,,
வந்தாச்சு,,,
இனி,,,, அவ்வளவு தான்,,,
பூசாரி தாணப்பனின் கை புட்டம்பது இருக்கும், போணிக்குள் நுழையும், போது,,, ,,,,,
கால்பந்தாட்டக் களத்தின் கோல் போஸ்ட் அருகே நின்று வருகின்ற பந்தை தடுக்கின்ற வீரரின் விரல்களைப் போல,,விரிந்திருக்கும்,,, !
பயக்க நாங்க எல்லாம்,,,,,,
கால் பந்து அளவிற்கு புட்டம்பது கிடைக்குமென்று இரு கைகளையும்,
விரித்துப் பரத்தி கை நீட்டி பூசாரி தாணப்ப அண்ணனின் முன்னே நிற்போம் !
ஆனால்,,,
படிப்படியாக,,,புட்டம்பதைத் தொடும் போது,,,, பூசாரி தாணப்பனின் கை,,,,,, குளத்தில் இருக்கிற மாலை நேரத்து அல்லிப் பூவாக,,,சூம்பிப் போய் விடும்,, !
சூம்பிப் போன அந்த விரல்களிலிருந்து,,,, விழுகிற புட்டம்பது,,,ஒரு கையின் பாதியைக் கூட,,,மறைக்காது,,, !’
ஆடிச் செவ்வாக்காரி,,
இப்பவும்,,சிரிப்பா,,,,
அவ,,
எப்பவும்,,
அப்படித்தான்,,,,
அத்தனையும்,,,
பார்த்தபடி,,
இப்பவும்,,
அவள் அந்த ஊரின் காவல் தெய்வமாக,,,,,

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...