#கோவைமாநகராட்சியில் இன்றைய திமுக மேயராக இருப்பவர், ஜி டி நாயுடு தெரு என்ற பெயரில் உள்ள நாயுடுவை அழித்துவிட்டு ஜிடி தெரு என்று மாற்றிவைத்தார். முதல்வர் ஸ்டாலினோ புதிய பாலத்திற்கு ஜிடி நாயுடு மேம்பாலம் என்று பெயர் வைக்கச் சொல்லுகிறார். முதல்வரே இப்படிச் சொல்லும் பொழுது அந்த மேயர் ஏன் அந்த தெருவில் இருந்து நாயுடு என்கிற பெயரை நீக்கி உள்ளார் என்ற கேள்வி எழுகிறது. இன்னொரு விஷயம் கோவையைப் பற்றிச் சொல்ல வேண்டும். காந்திபுரம் பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள சாலைக்கு வி கிருஷ்ணமேனன் சாலை என்று பெயர்ப் பலகை வைத்திருக்க வேண்டும். வி.கிருஷ்ணமேனன் எவ்வளவு முக்கியமானவர்.நேருவின் நண்பர்! ஐநா சபையில் இந்தியா காஷ்மீர் பிரச்சினையைப் நீண்ட நேரத் பேசியவர்.கோவையில் தங்கிப் படித்தவர். மட்டுமல்லாமல் இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் இருந்தவர்! அவரது பெயரை வி கே மேனன் என்று போட்டிருக்கிறார்கள். யார் வி கே மேனன்? இப்படிச் சுருக்கி போட்டால் அவர் பெயரை அப்படி ஒருவர் இருந்தார் எப்படி அறிந்து கொள்வது? கிருஷ்ண மேனன்என்று தான் அக்காலத்தில் அவர் இந்தியா முழுக்க பிரபலம்! இந்த விகே மேனன் யார் என்று பலர் கேட்கிறார்கள். இதுதான் கோவை மாநகராட்சியின் நிர்வாக லட்சணம். எந்த வரலாறும் தெரியாது. தெரிந்தாலும் அதை மறைப்பது! அல்லது புதிதாக யாராவது வந்து அவர்கள் போக்கில் எதையாவது மாற்றிக் கொண்டிருப்பார்கள்! கேட்டால் மாடல் ஆட்சி விடியல் என்று சொல்வார்கள்.
#ஜிடிநாயுடுமேம்பாலம் #gdnaiduoverbridge #கோவை #CoimbatoreNews #coimbatore #ksrpost #கேஎஸ்ஆர்போஸ்ட் 13-10-2025.
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...
No comments:
Post a Comment