Thursday, October 15, 2026

Oct 15, 2025 இது எச். பீர் முகமது பதிவு…..

இது எச். பீர் முகமது பதிவு….. facebook.com/share/p/1FrFaA விசேஷ திருமண சட்டம் ( Special Marriage Act1954 ) மறுமண வாழ்த்துகள் தோழர் கே.பி. ஏ லத்தீப் சென்னை மாகாண உலக மலையாள கவுன்சிலின் முன்னாள் செயலாளர். சிறந்த நாடக கலைஞர். சென்னை பெரம்பூர் இரயில் பெட்டி தொழிற்சாலையின் ஓய்வு பெற்ற பொறியாளர். ஓய்விற்கு பிறகு தற்போது கோழிக்கோட்டில் வசித்து வருகிறார். ஒரே ஒரு பெண் மகளின் தந்தையான இவர், முஸ்லிம் பெண்ணுக்கு சொத்து பங்கீட்டில் உள்ள சமத்துவ சிக்கல் ,அதாவது ஒரே ஒரு பெண்ணாக இருந்தாலும் 50 சதவீதம் மட்டுமே அவளுக்கு சொத்தில் பாத்தியதை, இரு பெண்களாக இருந்தால் மூன்றில் இரண்டு பங்கு என்பதை தவிர்க்கவும், சொத்துரிமையில் இஸ்லாமிய பெண்களுக்கு சமத்துவத்தை வலியுறுத்தியும் 1996 ல் நடந்த தன் திருமணத்தை தற்போது Special Marriage Act படி பதிவு செய்திருக்கிறார். இவரைப்போன்றே கேரளாவில் முஸ்லிம் ஆண்கள் பலரும் ,SMA படி தற்போது தங்கள் திருமணத்தை பதிவு செய்து வருகின்றனர். வாழ்த்துக்கள் Kpa Latheef



 

No comments:

Post a Comment

Oct 10, 2025