Thursday, October 15, 2026

Oct 17, 2025 #நெல்லை மாவட்டத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

 #நெல்லை மாவட்டத்தில் தனியார் பேருந்து ஓட்டுனர்கள் சிறப்பாக செயல்படுவார்கள்.

01. லயன் ஆட்டோமொபைல்ஸ் - தூத்துக்குடியில் இருந்து நெல்லைக்கு தினமும் மூன்று தடவை எக்ஸ்பிரஸ் சேவை உண்டு. காலை 8.50க்கு புறப்பட்டு, சரியாக 9.50க்கு நெல்லை சந்திப்பு பேருந்து நிலையத்திற்கு வந்துவிடும். அதில் பயணிப்பவர்கள் பெரும்பாலும் வங்கிகளில் வேலை பார்ப்பவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள் தான். வழி நில்லா பேருந்து - இவர் தான் முன்னோடி. 02. சீதாபதி ரோடுவெய்ஸ் - இவர்களும் நெல்லையை சார்ந்தவர்கள் தான். 03. ராம் பாப்புலர் - பெரும்பாலும் தூத்துக்குடியில் இருந்து பேருந்துகளை இயங்கினார்கள் 04. ஜெயவிலாஸ் - அருப்புக்கோட்டையை சார்ந்தவர்கள். அந்த பகுதியை சார்ந்த அணைத்து ஊர்களுக்கும் இவர்களுடைய பேருந்துகள் தான் ஓடிக்கொண்டு இருக்கும். 05. 1970 காலகட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து மதுரைக்கு இரண்டு பேருந்துகள் மட்டுமே இருந்தன. ஜெயவிலாஸ் மாலை 5.00 மணிக்கு கிளம்பி மதுரைக்கு இரவு 9 மணிக்கு சேரும். TVS விடிகாலை 6 மணிக்கு கிளம்பி மதுரைக்கு 10.00 மணிக்கு வந்து சேரும். தற்போது சாலைகள் மேம்படுத்தப்பட்டுவிட்டதால், பயண நேரம் வெறும் இரண்டரை மணி மட்டுமே. நெல்லை- ராஜபாளையம், ஶ்ரீவில்லிபுத்தூர் வழிதடம். 0.6 கோவில்பட்டி எம் ஆர் கோவலன் பஸ் கம்பெனி நினைவு இப்பொழுதும் வருகிறது 0.8 கணபதி பஸ் சார்வீஸ் 08. ஒரு காலகட்டத்தில் தூத்துக்குடியில் இருந்து திருநெல்வேலி செல்ல பேரின்ப விலாஸ் பஸ்ஸுக்கு ஏகப்பட்ட கூட்டம் இருக்கும் ஒரு பஸ் கம்பெனிக்கு ரசிகர் மன்றம் முதல் முதல் அமைத்தது அதற்குத்தான். 09அரசர் அய்யா 1956 நவம்பர் 1ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டம் உதயமானது ! அதற்கு முன்பும் பின்பும் கன்னியாகுமரி மாவட்டத்தில் தனியார் பேருந்து ஓடவில்லை அனைத்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்ற பெயரில் இயங்கியது ! 1972ல் பாண்டியன் போக்குவரத்து கழகம் உடைக்கப்பட்டு நெல்லையை தலைமையிடமாகக் கொண்டு கட்டபொம்மன் போக்குவரத்து கழகம் கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் ஓடியது ! #திருநெல்வேலி #Tirunelveli


Uploading: 21790 of 21790 bytes uploaded.


No comments:

Post a Comment

Oct 10, 2025