Thursday, October 15, 2026
Oct 19, 2025 #ஒர்விளக்கம் #யாருடனும்சண்டைக்குசெல்லமாட்டேன்.
#யாருடனும்சண்டைக்குசெல்லமாட்டேன்.
ஆனால்
என் மீது வேண்டும் என்று தவறாக தினிக்கும் சண்டையை விடவும் மாட்டேன்.
————————————————
இங்கு சில விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன!! நான் வன்முறைச் சட்டப் பிரகாரம் தீங்கிழைத்து விட்டேன் என்று சொல்கிறார்கள். இவர்கள் எல்லாம் நான் உண்மையில் என்ன பதிவு செய்திருக்கிறேன் என்பதைச் சரியாக வாசிக்காமல் பேசுகிறார்கள். இந்தியத் தலைமை நீதிபதி கவாய் அவர்கள் கிட்டத்தட்ட ஐம்பது ஆயிரம் ரூபாய் மேல் மதிப்புள்ள விலை உயர்ந்த ஒரு காலணியை அணிந்திருக்கிறார். எளிய குடும்பத்தில் பிறந்து வந்த அவர் காந்தியின் மீது பற்றுள்ளவர் காந்தியச் சிந்தனைகளில் உள்ளவர். அவரது எளிமையை பின்பற்ற வேண்டியவர் இப்படி ஒரு விலை உயர்ந்த காலணியை அணிந்து இருக்கிறாரே என்பதாகச் அச் செய்தியை twitterஇல் 15-10-2025 அன்று பதிவு போட்டிருந்தேன். இந்தச் செய்தி ஏற்கனவே இந்தியிலும் ஆங்கிலத்திலும் ஊடகங்களிலும்பலர் பலரும் பதிவு செய்திருந்ததுதான். இதில் என்ன வன்முறைச் சட்டம் கண்டார்கள். இதில் குறிப்பிட தகுந்த விஷயம் என்னவெனில் தலைமை நீதிபதி அவர்களின் சாதி பற்றி நான் எங்குமே குறிப்பிடவில்லை. தலைமை நீதிபதி அவர்களின் சாதி பற்றி நான் எங்குமே குறிப்பிடவில்லை. இங்கே அவரின் சாதி என்ன எனபது கூட தெரியாது . அதை பற்றி நான் பதிவு செய்யவில்லையே… புரிதல் வேண்டும் இந்தச் செய்தியை ஆங்கிலத்திலும் இந்தியிலும் பதிவு செய்தவர்கள் கூட அவரது சாதி பற்றி எங்கும் குறிப்பிடவில்லை. .
இந்தியா மாதிரி ஒரு வளரும் நாட்டில் பொறுப்புள்ள பதவியில் இருப்பவர்கள் விலை உயர்ந்த பொருட்களைப் பயன்படுத்துவது ஒரு உறுத்தலாக படுகிறது என்கிற தொனியில் தான் அந்த பதிவு போடப்பட்டது இங்கே. தமிழ்நாட்டில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அரை லட்சம் பெறுமானம் உள்ள காலணியை அணிந்துதான்
போகிறார் வருகிறார்.
அவையெல்லாம் பொது ஊடகங்களில் பதிவு ஆகின்றன.
அப்படியான ஒரு கவன ஈர்ப்பு செய்தியை நான் போட்டு இருக்கிறேன் என்பதைத் தாண்டி நீங்கள் நீதிபதி மீது வன்முறை சட்டம் பிரயோகிக்கிறீர்கள் என்று சொல்வது அந்த செய்தியின் உண்மைக்குப் புறம்பானது. எந்த வகையிலும் பொருத்தமற்ற வேண்டுமென்றே தூண்டி விடுகிற சூழ்ச்சிக்காரர்களின் திட்டம் தான் இது. இதற்கெல்லாம் அஞ்சுவதாக இல்லை. நானும் ஒரு வழக்கறிஞர் தான். நீங்கள் வழக்கை போட்டால் அதை தார்மீகான முறையில் எதிர் கொள்வேன். மிரட்டல்களுக்குப் பணிய மாட்டேன். சண்டைக்கு செல்ல மாட்டேன். ஆனால்
என் மீது வேண்டும் என்று தவறாக தினிக்கும் சண்டையை விடவும் மாட்டேன். இதை காமராஜர், கலைஞர், பழ. நெடுமாறன், விவசாயிகள தலைவர் சி. நாரயணசாமி நாயுடு,வைகோ, வேலுப்பிள்ளை போன்றோர் இதை அறிவர்
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸட்
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...


No comments:
Post a Comment