Thursday, October 15, 2026
Oct 19, 2025 #கலைஞரின்பராசக்தி
————————————
சிவாஜி கணேசன் நடித்த கலைஞரின் பராசக்தி திரைப்படம் சென்னை வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்திற்கு எதிராக இருந்த பாரகன் தியேட்டரில்தான் இரண்டு நாட்கள் ஏன் ஏறக்குறைய முப்பது மணி நேரம் சென்சார் செய்யப்பட்டது. அந்த சென்சார் துறையின் அதிகாரியாக இருந்தவர் மணிக்கொடிப் பத்திரிக்கை நடத்திய சீனிவாசன். அந்த மணிக்கொடி சீனிவாசனுக்கு காங்கிரஸ் கட்சியின் சார்பாக அக்காலத்தில் சங்கரன்கோவில் தொகுதியில் போட்டியிட ஒரு வாய்ப்புக் கிடைத்தது.
அவர் “நான் தஞ்சை பகுதியில் இருப்பதால் சங்கரன்கோவில் சென்று போட்டியிட முடியாது” என்று மறுத்தபோது அதற்குப் பதிலாக சென்சார் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவர் அதிகாரியாக இருந்ததனால் பராசக்தி திரைப்படத்தில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் வெட்டப்பட்டு பல்வேறு வகையில் தணிக்கை செய்துமுடிக்கப்பட்டு பிறகுதான் அத்திரைப்படம் வந்தது. இதையெல்லாம் அறிந்த எனக்கு இதுகுறித்து யாராவது திமுகவிலிருந்து எழுதுவார்கள் என்று எதிர்பார்த்தேன். அதெல்லாம் எழுத ஆளில்லை அவர்களுக்குத் தெரியவும் தெரியாது. அந்த பராசக்தி படம் இரண்டு நாள் சென்சார் அதிகாரிகளால் கடுமையாகப் பரிசீலிக்கப்பட்டது.
பராசக்தி (Parasakthi) 1952 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படமாகும். கலைஞர் வசனம் எழுத,கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோர் இயக்கிய இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பண்டரி பாய், எஸ். எஸ். ராஜேந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம், ஸ்ரீரஞ்சனி மற்றும் பலரும் நடித்திருந்தனர். எஸ். எஸ். ராஜேந்திரனை, சிவாஜி கணேசனை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய படம் இது.பராசக்தி படத்தின் தயாரிப்பாளர்கள் எ. வி. மெய்யப்ப செட்டியார் மற்றும் பி. எ. பெருமாள் அவர்கள்.இப்படம் இதே பெயரிலான பாவலர் பாலசுந்தரத்தின் நாடகத்தை அடிப்படையாகக் கொண்டது. பராசக்தி இரண்டாம் உலகப் போரின்போது ஒரு தமிழ் குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு நேர்ந்த துயரங்களை
சொல்கின்றன .
இன்றைக்கு திமுகவில் இருப்பவர்களுக்கு கலைஞரைப் பற்றி என்ன தெரியும். இன்றைக்கு கூட்டணி என்கிறார்கள்
இருந்தாலும் திமுகவிலிருந்து நீக்கப்பட்ட என்னைப் போன்றவர்களும் திமுகவில் இருந்து கொண்டே என்னை அறிந்த பலரும் மௌனமாக இருக்கிறார்கள். ஒரு காலத்தில் திமுகவில் இருப்பவர்கள் புத்திசாலிகள் அறிவாளிகள் நுண்மான் நுழைபுலம் கொண்டவர்கள் என்றெல்லாம் சொல்வார்கள். இன்றைக்கு அதெல்லாம் இல்லை.எல்லாம் வணிக அரசியல் தான். இருப்பவர்கள் எல்லாம் அரசியலைப் பயன்படுத்திக் கொள்ளும் அரசியல் வியாபாரிகள் தான்.
#Parasakthi
#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
Subscribe to:
Post Comments (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...


No comments:
Post a Comment