Thursday, October 15, 2026

Oct 19, 2025 #கண்ணதாசன்

 #கண்ணதாசன்

#தேர்தலில்வாக்குக்காக காலில் விழாத கண்ணதாசன் ______________ 1957ஆம் ஆண்டு முதன் முதலில் திமுக தேர்தலில் போட்டியிட்டது. #அப்போது திமுக அங்கீகரிக்கப்பட்ட கட்சி அல்ல என்பதால் அனைத்து வேட்பாளர்களும் சுயேட்சையாகத்தான் போட்டியிட்டார்கள். திமுக போட்டியிட்ட அதிக தொகுதிகளில் சேவல் சின்னத்தில் போட்டியிட்டது. அறிஞர் அண்ணாவும் சேவல் சின்னத்தில்தான் போட்டியிட்டார். #திமுகவின் அப்போதைய தலைவர்களில் ஒருவரான கவிஞர் கண்ணதாசனும் 1957ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டார். ஆயிரம் விளக்குத் தொகுதியில் போட்டியிடுமாறு அவரது நண்பர்கள் வற்புறுத்தினாலும், தனது சொந்த ஊரான சிறுகூடல்பட்டியை உள்ளடக்கியிருந்த திருக்கோஷ்டியூரில் போட்டியிட்டார். சில ஊர்களில் நாட்டுக்கோட்டை நகரத்தார் கூட்டம் போட்டு அங்கு அவரை அழைத்து வாக்குகள் கேட்கச் சொன்னார்கள். அவரும் கலந்துகொண்டார். கூட்டத்தார் முன் நின்று தனக்கு வாக்களிக்க வேண்டும் என்று கேட்கவும் செய்தார். எனினும், கேட்டுக்கொண்டபடி வாக்குகள் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவருக்கு இல்லை. காரணம், நகரத்தார் கூட்டங்களில் வாக்குகள் கேட்பவர் கூட்டத்தின் முன் கீழே விழுந்து வணங்கிக் கேட்க வேண்டும் என்பது அப்போது நடைமுறையில் இருந்த மரபு. கண்ணதாசன் அதற்குத் தயாராக இல்லை. நின்றுகொண்டே கும்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டார். வெற்றியோ தோல்வியோ வாக்குகளுக்காக ஒருவர் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டியதில்லை என்று பின்னர் அவர் குறிப்பிட்டார். கண்ணதாசன் போட்டியிட்ட இந்தத் தேர்தலில் 20.15 விழுக்காடு வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பெற்றார்.



No comments:

Post a Comment

Oct 10, 2025