Wednesday, August 2, 2017

போராட்டங்களின் வாசகங்கள்

"தாடிகள் எல்லாம் தாகூரா மீசைகள் எல்லாம் பாரதியா வேஷத்தில் ஏமாறாதே தோழா"

நமது போராட்டங்களின் வாசகங்கள் பாதிக்கப்பட்டவர்களின் மொழியில் இருக்க வேண்டுமே தவிர, துதி நாடும் போலி தன் நலம் பலசாலிகளின் மொழியாக அமைந்து விடக்கூடாது...
..................
உண்மை  எப்போதும் அமைதி
குணம் கொண்டது.

கே.எஸ் .இராதாகிருஷ்ணன்
2/8/2017
#அரசியல்
#politics
#ksrposting
#ksradhakrishnanposting

பாசம் ....


வேனல்... கலாப்ரியா.


---------------------
திருநெல்வேலி டவுன் 
நான்கு ரத வீதிகள்.மலரும் நினைவுகள்; கல்லூரி நாட்கள்.

அருமை, இந்த ஓட்டல்களிலும் சாப்பிட்டுருக்கிறேன்..
குமார விலாஸ் மட்டும் நியூ குமார விலாஸ்.காசி நாடார் மிலிட்டரி ஓட்டல் இடம் மாறி காசி விலாஸ்.பழைய ஓட்டல் கல்லூர் பிள்ளை ஓட்டல்.சேரன்மகா தேவி ரோட்டில் குட்ட வாத்தியார் பள்ளி எதிரில் ஐயர் ஓட்டல் அதே இடத்தில் இருக்கிறது. மற்றவை மறைந்து விட்டது.போத்தி  ஓட்டல் இழப்பு நெல்லைவாசிகளின் நினைவுகளில் என்றென்றும்.

#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-08-2017
.........
வேனல்...                                       கலாப்ரியா
____________________________________________
திருநெல்வேலி கோயிலைச் சுற்று நான்கு ரதவீதிகள். இரண்டிரண்டு வீதிகள் சந்திக்கும்  நான்கு முனைகள். முக்குகள் என்போம். சந்திப் பிள்ளையார் முக்கில் போத்தி ஓட்டல், லாலா சத்திர முக்கில் குமாரவிலாஸ், குத்துப்புற முக்கு என்கிற ராயல் டாக்கீஸ் முக்கில்  சரஸ்வதி கஃபே, வாகையடி முக்கு என்றால் சப்பாத்தி ஓட்டல் என்கிற  காந்திமதி லஞ்ச் ஹோம்.
          இவை தவிர     அங்கங்கே  சில  சைவாள்    ஓட்டல்கள்.    ரொம்ப அபூர்வமாய் வண்டிப்பேட்டை   பாய் கடை.  அங்கே      பிரியாணி,  ரொட்டி சால்னா , கறிவடை    கிடைக்கும்.   கோவிலின் சாமி சன்னதித் தெருவில் காசி நாடார் மிலிட்டரி ஓட்டல். அங்கே தனி ருசியாய் அசைவம் கிடைக்கும். அப்பொழுது ஓட்டல்களே இவ்வளவுதான்.   இப்பொழுதென்றால்   நாலடிக்கு நாலடி  இடம் கிடைத்தால் போதும்    ஒரு ரொட்டி சால்னாக் கடை ஆரம்பித்து விடுகிறார்கள். காணாதததற்கு டாஸ்மாக் பாரில் சைடு டிஷ் ஆக   பலதும் கிடைக்கிறது.  அப்பொழுதெல்லாம் சல்லிப் பக்கடா வாங்க வேண்டுமென்றால் மூக்க பிள்ள கடையைத் தேடிப் போக வேண்டும். அது சின்ன இட்லிக்கடை அதனால் ராத்திரி எட்டு மணிக்கு மேல் போனால் எதுவும்  கிடைக்காது. காலியாகிவிடும். ஒன்பது மணிக்கெல்லாம்    இட்லிக்கடை  முடிந்து  எடுத்துவைக்க ஆரம்பித்து விடுவார். வஞ்சனையில்லாமல்   மீந்து போன சாம்பார் சட்னியை, கேட்கிற யாருக்கும் இலவசமாகவே தருவார். இதற்கென்றே சில வசதியற்றவர்கள் அந்நேரம் போய்ப் பார்ப்பதுண்டு.  மீந்து போனது இல்லையென்றால், முகம் கோணாமல்       நாளைக்கி வாங்க என்று சொல்லி  விடுவார். தெற்கு ரத வீதியிலிருந்தது  அவரது சிறிய கடை.

*
          மகாலட்சுமி  அவளது அம்மா மூக்கம்மாவை உரித்து வைத்தது போலிருக்கும். லேசான மாறுகண் உட்பட.  மூக்குத்தி போட்டால் அம்மாவேதான். எங்கள் வீட்டிற்கு  அடுத்த முடுக்கு வழியாகப் போனால்  உள்ள ஒரு குச்சு வீட்டில் இருந்தார்கள். அது பாப்பாத்தி ஆச்சிக்கு சொந்தமான வீடு. கணவர் இல்லாத ஆச்சிக்கு அந்த வருமானம்தான் வாழ்தலுக்கான ஆதாரம். மகாலட்சுமியை  மகால் என்றுதான் அவள் அப்பா,  கூப்பிடுவார். அப்பா செல்லம் மகால். அவர் லாலாசத்திர முக்கு  ஓட்டலில் சரக்கு மாஸ்டர். அப்படியொரு ஒல்லியான உடல்.  லேசான     இளந்தொந்தி  மாதிரி இருக்கும். மத்தியானம் இரண்டு மணி சுமாருக்கு, கடையிலேயே சாப்பிட்டு விட்டு வருவார்.  தார்சாலில்  சுவரோரமாகப் படுத்திருப்பார், லேசான பொய்த்தூக்கம் தூங்குவார்.  மகால் இருந்தால் அது கூடக் கிடையாது. மேலே  விழுந்து   புரண்டு விளையாடுவாள். மூக்கம்மா மதினி சத்தம் போடுவாள். ஏட்டி மூதேவி கொஞ்ச நேரம் அவுகளைத்   தூங்க விடுதியா,”வெக்கையிலெயே நின்னுட்டு வாராக ” என்று சத்தம் போடுவாள். அவர் இல்லையென்றால் மகாலுக்கு  ஏச்சும் பேச்சுமாக இருக்கும். மதினியின் தீராத ஆவலாதிகளில் ஒன்று அவளுக்கும் மாறுகண் போல இருப்பதுதான். ஆனால் இரண்டு பேருக்குமே அவ்வளவு ஒன்றும் அது குறை மாதிரி தெரியாது. மதினியின் கட்டான உடல் வாகும் நிறமும் பார்ப்பவரை ஒரு விதமாகக் கவரும். அழகுடனேயே இருப்பாள். முகத்தில் மட்டும் ஏதோ குறைவது போல எப்போதும் தோன்றும். அவர்  மட்டும் எதற்கும் சிரித்துக் கொண்டேதான் இருப்பார்.
     மூன்று மணியானால் எழுந்து விடுவார். குச்சு வீட்டின் முன்னாலோ, கொஞ்சம் தள்ளிப் போனால் இருக்கிற வேப்ப மர நிழலிலோ குவிந்து காய்ந்து கொண்டிருக்கிற தீப்பெட்டியின் மேல்க் கூடுகளை பதனமாக அள்ளி, பெரிய சாக்குப் பையில் கட்டி தீப்பெட்டி ஆபீஸுக்கு கொண்டு போய்க் கொடுத்து விட்டு ஓட்டல் வேலைக்குப் போய் விடுவார். மதினி அவ்வளவு வேகமாக தீப்பெட்டி ஒட்டுவாள். நீளமான தகடு போன்ற சாதிக்காய் மரத்தில், மடிக்கத் தோதுவாய் பதிவுகள் இருக்கும். பதிவுகள் மேலாக மடித்தால்,  தீப்பெடியின் வெளிக் கூடு வந்து விடும். மடித்து, அதற்கென்றே ஏற்பட்ட நீலக்கலர் தாளை பசை தடவி ஒட்ட வேண்டும். அந்தத்தாளின் நிறத்திற்கு தீப்பெட்டிக் கலர் என்றே பெயர்.
’நல்ல தீப்பெட்டிக் கலர்ல சேலையும் ஜம்பரும்’ என்று பெண்கள் பாஷையில் அடி படும். மதினி ஒரு மெஷின் போல ஒட்டுவாள். பெண் பார்க்க வருகிற போது அல்லது மணவறையில் உட்கார்கிற மாதிரி உட்கார்ந்திருப்பாள். வலது கை ஆட்காட்டி விரலில் மட்டுமே பசை எடுப்பாள். ஒரு தீப்பெட்டிக்கு தேவையான அளவுக்கே மிகச்சரியாக எடுப்பாள். கொஞ்சம் கூடினால் கூட அந்த மெல்லிய தாள் சொத சொதத்துவிடும். தாளில் பசை தடவி மெல்லிய அட்டை போன்ற மரத்தகட்டை அதன் மேல் வைத்து ஒட்டி மடிப்பாள்,  ஆட்காட்டி விரலில் பெரிய மோதிரம் போல் தீப்பெட்டிக் கூடு உண்டாகி விடும். அப்படியே லாவகமாகச் சுண்டுவாள். சத்தம் போடாமல் கூடு குவியலில் போய்ச் சேர்ந்து கொள்ளும். எல்லாம் ஒரு நொடி வேலை.
     
*
 என் ஃப்ரெண்டு நமசு, பாப்பாத்தி ஆச்சிக்கு சொந்தக் காரன். அதனால் அவன் மதினி வீட்டுக்கு அடிக்கடி போவான்.  தீப்பெட்டி ஒட்டும் போது அருகே இருப்பான். ஆளும் சற்று பெண்பிள்ளை மாதிரி அழகாக இருப்பான். மதினி தீப்பெட்டி ஒட்டும்  போது இடது புறம் உட்கார்ந்து கொள்ளுவான். மதினி முந்தானையை தோள் மேல் சுருக்கிப் போட்டு அமர்ந்திருப்பாள்.அவளின் வெள்ளையான வயிற்றையும் அவ்வப்போது ஜம்பருக்குள் தெரிகிற மார்பையும் பார்க்க அதுதான் தோது, என்று நமசு சொல்வான். அதை அவன் ரொம்ப நாள் கழித்தே சொன்னான். மதினிக்கு தீப்பெட்டி ஒட்டும் போது, மகால் அருகே வந்து தொந்தரவு செய்தால் தீப்பெட்டி அட்டை நொறுங்கி விடுமோ என்று பயம். அதனால் அருகேயே ஒரு நீள வேப்பம் குச்சியைத் தயாராய் வைத்திருப்பாள். அவள் விளையாட்டுப் போக்கில் அருகில் வந்தால் கம்பை எடுத்து ஏய் என்பாள். மகால் ஓடி விடுவாள்.  நான் நமசு இல்லாத ஒருநாள், மதினியின் இடப் புறமாக அமர்ந்திருந்தேன். ’அதற்காகத்தான்’.  ”‘கற்பகம்’ சினிமா பாத்திட்டியா நல்லாருக்காமே” என்று மதினி கேட்டுக் கொண்டே, தீப்பெட்டிக் கூடு ஒட்டிக் குவித்துக் கொண்டிருந்தாள். “கொஞ்சம் கதை சொல்லேன்”, என்றாள். சொல்லிக் கொண்டே, தெரியாத மார்பை பார்க்க முயன்று கொண்டிருந்தேன். சற்று நேரம் கழித்து மதினி அதை உணர்ந்து கொண்டாள் போல. முந்தானையை இறக்கி விட்டாள்.ஆனால் வேலை மும்முரத்தில் மறுபடி முந்தானை தோளுக்கு ஏறிவிட்டது. நான் ஷீலா - முத்துராமன் முதலிரவுக் காட்சியை விவரித்துச் சொல்லிக் கொண்டே மறுபடி கண்ணை ஓடவிட்டேன். மதினி, 12 வயசுப் பையன்  முதலிரவு என்று சொல்கிறானே என்றதற்குச் சிரித்தாளா, அல்லது நான் படுகிற பாட்டைப் பார்த்துச் சிரித்தாளா, தெரியவில்லை. வேப்பங்குச்சியால் என் மொழியில் லேசாக அடித்து, நீ இந்தப் பக்கமா வந்து உக்காந்து சொல்லு” என்றாள். அவர் தன் “துக்கத்திலிருந்து எழுந்து கொண்டார். ”தம்பி ஷோக்கா கதை சொல்லுதாரே, நீ படமே பாக்க வேண்டாம் போல இருக்கே” என்றார்.மதினியும் எழுந்து, ”முழிச்சிட்டிங்களா இன்னக்கி தீப்பெட்டி அட்டையும் தாளும் வாங்கீட்டு வாங்க, நாளைக்கி ஒட்டறதுக்கு இல்லை”என்று சொல்லிக் கொண்டே காபி போடப் போனாள். நான் பாதிக் கதையோடு வந்து விட்டேன்.

*
 மதினி வீட்டுக்கு சற்று மேற்கே ஒரு வேப்ப மரம். வேப்ப மரத்தின் எதிரே ஒரு சொள்ள மாடசாமி பீடம். அதை மனை காவல் பெருமாள் என்பார்கள். எப்போதாவது அதற்குப் படையல் வைப்பாள் பாப்பாத்தி ஆச்சி. இருட்டி விட்டால் மரத்தடிக்கு யாரும் போக மாட்டார்கள். ஆனால் அதைத் தாண்டித் தான் ஒரு மண் மறைப்பில் உலர் கக்கூஸ். ஒரு சாயந்தரம் தற்செயலாக அங்கே போனவனை மூக்கம்மா மதினி கூப்பிட்டாள். ”இங்க வாடே , வயிறு என்னமோ மதிரி இருக்கு, கொஞ்ச நேரம் இங்கன வந்து துணைக்கி நில்லு, கக்கூஸ் போயிட்டு வந்திருதேன், கோளை நாளும் அதுவுமா (செவ்வாய்க் கிழமை) அந்தப் பூடத்தைத் தாண்டி போக பயமாருக்கு எனக்கு,”என்றாள் .நான் காவலுக்கு நின்று கொண்டிருந்தேன். மகால் வேற, வீட்டுக்குள்ளிருந்து அம்மா, அம்மா என்று கத்திக் கொண்டிருந்தாள். எனக்கும் வேப்பமரம் அந்தி இருளில் ஆடுவதைப் பார்க்க பயமாயிருந்தது. மதினி வேகமாக என்னைக் கடந்து வீட்டுக்குள் போய் விட்டாள். நானும் முடுக்கு வழியாய்  தெருவுக்கு ஓடியே வந்தேன். 
 
 
நான் அவர் வேலை பார்க்கும் குமாரவிலாஸ் ஓட்டலுக்குப் போவதே கிடையாது. எங்கள் வீட்டுக்கு போத்தி ஓட்டலில் தான் கணக்கு. அப்போது லால் பகதூர் சாஸ்திரி/பக்தவத்சலம் காலம் என்று நினைவு. ஓட்டல்களுக்கெல்லாம் ஒரு நாள் கண்டிப்பாக விடுமுறை விட வேண்டும். எல்லோரும் ஒரு நாள் இரவு உணவைக் கைவிட்டு உபவாசம் இருக்கலாம் என்று ஒரு எழுதப் படாத சட்டம்.  அதனால் புதன் கிழமை தோறும் போத்தி ஓட்டல் விடுமுறை. நானும் நமசுவின் அண்ணனும், அவர் என்னை விட நாலைந்து வயது மூத்தவர்- குமாரவிலாஸில் ஒரு காபி குடிக்கப் போனோம். நான் அங்கே போவது அதுவே முதல்த் தடவையாகக் கூட இருக்கலாம்.அந்தக் கடை முதலாளி பெரியாரின் பரம சீடர். பெரியார் படம் கல்லாவின் அருகில் மாட்டி இருக்கும்.காபி சொல்லி ரொம்ப நேரம் ஆகியும் வரவில்லை.நாங்கள் உட்கார்ந்திருந்த பெஞ்சை ஒட்டிய சுவருக்குப் பின்னால்தான் சமையலறை போலிருக்கிறது..சுவர் சூடாக இருந்தது.
மூக்கம்மா மதினியின் கணவர், எங்கள் எதிரே சிரித்தபடி வந்தார். மேலெல்லாம் வேர்வை இடுப்பில் ஒரு துண்டு தோளில் ஒரு துண்டு. இரண்டிலுமே எண்ணெய் அழுக்கும்  கரியும் படிந்திருந்தது. நமசுவின் அண்ணனிடம் வாங்க தம்பி, என்றவர், அந்த எதிர் பெஞ்சில உக்காருங்க, இங்க வெக்கை தாங்க முடியாது, என்று சொல்லி, ”எதிர் பெஞ்சில் இரண்டு இலை போடப்பா”என்று ஒரு சர்வரைப் பார்த்துச் சொன்னார்.எதுக்கு என்று இரண்டு பேரும் கேட்டோம்.சாப்பிடத்தான் என்று சிரித்துக் கொண்டே உள்ளே போனார்.இரண்டு முறுகலான தோசையுடன் வந்தார். சாப்பிடுங்க என்றார். சாப்பிட்டோம். இன்னொன்னு என்றார். இரண்டு பேருக்கும் போதுமாய் இருந்தது.போதும் என்றோம். சாப்பிட்டுக் கை கழுவியதும் சர்வரிடம் பட்டறையில் சொல்லிரு என் கணக்குன்னு என்றார்.வாங்க தம்பி என்று சமையலறைக்குள் அழைத்தார். போத்தி ஓட்டலிலெல்லாம் சமையலறைப் பக்கம் எட்டிக் கூடப் பார்க்க விட மாட்டார்கள். பெரிய நீள் சதுரத் தோசைக்கல்லைப் பார்க்கவே ஆச்சரியமாய் இருந்தது. கல்லுக்கு மேல் ஒரு கயிறு கட்டித் தொங்கிக் கொண்டிருந்தது, எண்ணெய்ப் பிசுக்குடன். கல்லின் எதிர் முனையில் தோசை விடும் போது அதைப் பிடித்துக் கொண்டு ஊற்றினார். அவ்வளவு அகலமான கல்.
*
 
நிறைய பேர் மதினியின் வீட்டுக்கு வந்து போய்க் கொண்டிருந்தார்கள். என்ன விஷயமாயிருக்கும் என்று நானும் போனேன். சமீபமாய் நான் அங்கே போவதே இல்லை.வழக்கமான தார்சால்ச் சுவரோரமாக அண்ணாச்சி படுத்துக் கிடந்தார்.அண்ணாச்சி எப்பவுமே மதினியை விட சற்று வயதானவர் போல்த் தான் இருப்பார்.அன்று நாலு நாள்த் தாடியுடன் இருந்தார்.இடுப்பில் பேருக்கு வேஷ்டி இருந்தது.மார்பெல்லாம் தீக் கொப்புழங்கள். கை, முகம் தோளிலெல்லாம் கூட. ஒரு வாழை இலையை வைத்து மதினி விசிறிக் கொண்டிருந்தாள். ஒரு பாட்டிலில் ஜெனிஷியன் வயலட் களிம்பும் ஈர்க்குச்சியில் சுற்றின பஞ்சும் இருந்தது.”தம்பி இந்த களிம்பைக் கொஞ்சம் புண்ணு மேல போட்டு விடுதீங்களா” என்றாள் மதினி. தொடர்ந்து, ”நோய் நோக்காடு வந்தாக் கூடவா தொடக் கூடாது, ஏதோ ஒரு தரம் உங்க தம்பி மேல ஆசப் பட்டுட்டேன், அவனும் தான் போய்ட்டானே” என்று அழுதாள். மகால் ஏற்கெனவே அழக் காத்திருந்தது போல அழ ஆரம்பித்தது.” வீட்டுக்குள்ளையும் படுக்க மாட்டாக, என்ன குளிர், என்ன வேனல்ன்னாலும் சரி: வேனல்லையே தான கெடக்காக...” என்றாள் மதினி.”கிளப்புல தோசை ஊத்தும் போது கயிறு அந்து அப்படியே கல்லுல விழுந்துட்டாகளாம், அது என்னப்பா கயிறு “, என்று கேட்டாள். அவர் சிரித்துக் கொண்டார்.
     பாப்பாத்தி ஆச்சி வந்தாள்.  ”யார்ட்டழ்ழா காமிக்கெ”, என்ற கேள்வியுடன். “யாரோ டாக்டர் முத்தையாபிள்ளை ஆஸ்பத்திரியாம்லெ அங்கெதான்,   முதலாளி ஏற்பாடு, அதெல்லாம் எல்லாரும் வந்து நல்லாப் பாக்காங்க”, என்றாள். ஆச்சி தார்சாலை அடுத்திருந்த ஒரே கட்டுக்குள் சென்று,  ”மூக்கம்மா இன்னா இப்படி உள்ள வா” என்றாள். ஏதோ பேசிக் கொண்டிருந்தார்கள். நானும் உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு கேபினெட் சைஸ் போட்டோப் படம், படத்துக்குப் பொட்டு வைத்திருந்தது. நான் பார்த்ததை அவர் பார்த்து விட்டார்,  ”ஏந்தம்பி, செத்துப் போயிட்டான்,” என்றார். வலியில் அவரது முகச்சதை கோணுவது கூட சிரிக்கிற மாதிரி இருந்தது. ஆச்சி போனதும், மதினி அழுது கொண்டே வந்தாள். ”என்ன, வீட்டைக் காலி பண்ணச் சொல்லுதாங்களா” என்றார். ”ஆமா, வேறென்ன சொல்லுவாங்க,  மனசுல ஒண்ணும் நெனைக்காம  பொண்டாட்டியக் காப்பாத்துதாங்கன்னா மெச்சுவாங்க, நீங்க சொல்லலைன்னாலும் ஊரு, என்னைய கெட்டுப் போனவன்னுதானே சொல்லும்,” என்று சொல்லி விட்டு, தனியாக அழுது கொண்டிருந்த மகாலை இழுத்து அணைத்துக் கொண்டாள். அவர் அதைப் பார்த்துச் சிரித்தார்.
     
நமசுவின் அண்ணன், எனக்கு ஓரளவு புரிந்ததை முழுவதும் தெளிவாக்கினார். அந்தப் புண் குணமாகும் முன்பே அவர்கள் வீட்டை காலி செய்துவிட்டார்கள். அவர்கள் காலி செய்து போகும் போது தெருவில் நானும் நமசுவின் அண்ணணும், ஓரமாக நிழலில் நின்று கொண்டிருந்தோம். பையன்கள் அந்த உச்சி வெயிலில் தங்கள் வேனல் விடுமுறையை பம்பரம் விளையாடி கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். அவர் அந்தக் குழந்தைகளையும் எங்களையும் பார்த்துச் சிரித்தார். மகால், அம்மா தோளில் தூங்குவது  போல் சாய்ந்து கொண்டிருந்தாள். மதினி, தலையை மட்டும் ‘போய்ட்டு வாரோம்’ என்று ஆட்டினாள். அவர், என்ன நினைத்தாரோ கையில் வைத்திருந்த தம்பியின் படத்தை அருகிலிருந்த குப்பைத் தொட்டியில் விசிறினார். அப்போதும் அவர் முகம் சிரித்த மாதிரியே இருந்தது.

Emergency...

ln Emergency, based movie Indu Sarkar, there is a character Farzana with Sanjay Gandhi in every scene, in actual life she was (the lady in the photo), Rukhsana Sultana. She was a famous socialite of Delhi then, mother of actress Amrita Singh....!

Rajesh Pilot also there..

#Emergency


ConstituentAssembly.

The first resolution that the Constituent Assembly of India passed on 13th December 1946. This resolution was moved by Jawaharlal Nehru. It gives an idea of what the CA hoped to do for India
"(1)This Constituent Assembly declares its firm and solemn resolve to proclaim India as an Independent Sovereign Republic and to draw up for her future governance a Constitution; (2)WHEREIN the territories that now comprise British India, the territories that now form the Indian States, and such other parts of India as are outside British India and the States as well as such other territories as are willing to be constituted into the Independent Sovereign India, shall be a Union of them all; and (3) WHEREIN the said territories, whether with their present boundaries or with such others as may be determined by the #
 and thereafter according to the Law of the #Constitution, shall possess and retain the status of autonomous Units, together with residuary powers, and exercise all powers and functions of government and administration, save and except such powers and functions as are vested in or assigned to the Union, or as are inherent or implied in the Union or resulting therefrom; and (4) WHEREIN all power and authority of the Sovereign Independent India,its constituent parts and organs of government, are derived from the people; and (5)WHEREIN shall be guaranteed and secured to all the people of India justice, social, economic and political; equality of status, of opportunity, and before the law; freedom of thought, expression, belief, faith worship, vocation, association and action, subject to law and public morality; and (6)WHEREIN adequate safeguards shall be provided for minorities, backward and tribal areas, and depressed and other backward classes; and (7)WHEREBY shall be maintained the integrity of the territory of the Republic and its sovereign rights on land, sea, and air according to Justice and the law of civilised nations, and (8)this ancient land attains its rightful and honoured place in the world and make its full and willing contribution to the promotion of world peace and the welfare of mankind."
-India history

Tuesday, August 1, 2017

பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா?

அரசியலில் அமைதிப்படை அமாவாசைகள்.....
-------------------------------------
பரமசிவன் கழுத்தில் இருக்கும் பாம்புக்கு கிடைத்த மரியாதையை போல் அரசியலிலும் பதவிகள் கிடைப்பதுண்டு. 

காங்கிரஸ் இரண்டாக பிரிந்த போது இந்திராகாந்திக்கு தண்ணிக் காட்டிய காங்கிரஸ் தலைவர் நிஜலிங்கப்பாவின் கார் ஓட்டுனர் ஜாபர் ஷெரிப் இந்திராகந்தி அமைச்சரவையில் ரயில்வே அமைச்சர், பின்னாளில் காங்கிரசின் மூத்த தலைவரானார்.

பிரணாப்முகர்ஜி அமைச்சராக இருந்த போது அவரது துறையில் அதிகாரியாக பணிபுரிந்த மன்மோகன்சிங் பின்நாளில் பிரதமர். அவரது அமைச்சரவையில் பிரனாப் அமைச்சராக இருந்தார்.

அத்வானி கூட வேண்டாம், வெங்கையா நாயுடு தலைவராக இருந்து அவரால் வளர்க்கப்பட்ட மோடி இன்று பிரதமர். 

ஒருவர் தகுதியில் அடிப்படையில், நேர்மையான முறையில்  அரசியலில் உயர்ந்தவர்களை யாரும் தவறாக பேசுவதில்லை. மாறாக குறுக்கு வழியில் வந்தவர்களை வரலாறு விமர்சிக்காமல் விட்டதும் இல்லை. 

1980களில் குடியிருக்க வீடு இல்லாமல் இருந்த லல்லு பிரசாத் யாதவ் இன்று பல மாடமாளிகைகளுக்கு சொந்தக்காரர். 

சந்திரபாபு நாயுடுவால் வளர்க்கப்பட்ட சந்திரசேகர் ராவ்  இன்று சந்திரபாபு நாயுடுக்கு சவால் விடுக்கும் வகையில் தெலுங்கானாவின் முதல்வர்.  இவைகள் யாவும் வரலாற்றில் கண்முன் காணப்படும் உண்மைகள். இவ்வாறாக நிறைய உதாரணங்கள் உள்ளன. 

தனிப்பட்ட முறையில் தட்டச்சு பணி செய்தும்,  உதவியாளராக பணிபுரிந்தவர்களும்  இன்று  நியாயமற்ற  செயல்களால் உயர்ந்து உச்சத்தில் நிற்கின்றார். 

இவ்வாறான அமைதிப்படை அமாவாசைகள் அரசியலில் உயர்வது அரசியலை ஆரோக்கியமாக வளர்க்குமா அல்லது அங்குமிங்குமாக இருக்கும் குறைந்தபட்ச ஆரோக்கியத்தையும் அழித்துவிடுமா? இது சரியா தவறா  என தெரிய வில்லை.

ஆனாலும் பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது, கருடா செளக்கியமா? என்ற பாடல் ஏனோ இன்று நினைவுக்கு வருகின்றது. 

''என்னை ஏற்றி
 உயர வைத்தவர்களை
எண்ணிக்கையில் 
சொல்லிவிடலாம்.....

 பலரை உயரவைக்க
தோள் கொடுத்தேன்....
முதுகையும் கொடுத்தேன்
ஏன்.... தலையிலும்
சுமந்தேன்......
அன்பால் கரைந்தேன்....

இன்னும் சிலருக்காக
முடிந்ததெல்லாம்
இழந்தேன்.....

அவையெல்லாம்
சொல்லும் தரமன்று...

நேர்மையான சூழலில்
என்னை ஆட்படுத்திய 
வேகம்......
ஒருபோதும் தாழ்வுகள்
தரப்போவதில்லை.''

#அரசியல்அமாவாசைகள் 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-08-2017

குடியரசும், ஜனநாயகமும் - ஒரு சிறு விளக்கம்.








---------------------------------------
இன்றைய(1-8-2017) " தி இந்து " -  தமிழ் நாளிதழில் 'இப்படிக்கு இவர்கள்' என்ற பகுதியில் 'குடியரசும், ஜனநாயகமும் - ஒரு சிறு விளக்கம்' என்ற தலைப்பில் எனது பதிவு வெளியாகி உள்ளது. இதன் பொருள் என்ன; வரலாறு குறித்த விளக்கம் இடம் பெற்றுள்ளது.

வரலாற்று ரீதியாக ஜனநாயகம் என்ற சொல் கிரேக்கச் சொல். Democracy 
(demo -kraits;demokratia)கிரேக்க நகர அரசுகள் தான் ஜனநாயகத்தின் நாற்றங்கால். ஏதென்ஸ் நகரத்தில் முதன்முதலாக இச்சொல் பிறந்த்து. சாக்ரடீஸ் போன்றவர்கள் இதற்கு காரணகர்த்தா ஆவார்கள்.
 
குடியரசு என்பது ரோம் நகரில் பிறப்பெடுத்து பிளாட்டோவால் கொண்டாடப்பட்ட சொல்லாகும். இடைப்பட்ட காலங்களில் இந்த சொற்கள் ஐரோப்பா முழுவதும் பரவியது. அமெரிக்க அரசியலமைப்புச் சட்டத்தில் இந்த ஜனநாயகம் என்ற சொல்லுக்கான இயல்பு இல்லாமல் குடியரசு என்ற நிலையில் அங்கு ஆட்சி அமைப்புகள் நடக்கின்றன. ரோமத்தில் பப்ளியுஸ் (Publius) என்பது ரிப்பப்ளிக் (Republic) ஆனது. அலெக்ஸாண்டர் ஹெமில்டன், பெஞ்சமின் பிராங்களின் ஆகியோர் இதை ஏற்றுக்கொண்டு ரிப்பப்ளிக் அரசாக அமெரிக்காவை  1787ல் நிர்மாணித்தனர்.
 
பிரிட்டனில் மரபும், சம்பிரதாயங்களை கொண்டு எழுதப்படாத அரசியல்மைப்புச் சட்டப்படி ஆட்சிகள் நடக்கின்றன. ஜனநாயகத்தை அடிப்படையாக கொண்டு பிரிட்டன் இயங்குகிறது. ஆனால் குடியரசு என்ற நிலைப்பாடு கிடையாது. எழுதப்படாத அரசியல் சட்டங்கள் அதாவது, மரபு, வாடிக்கை, பழக்கவழக்கங்கள் கொண்டு இயங்குகின்ற நாடுகள் பிரிட்டன், இஸ்ரேல், நியூஸ்லாந்து ஆகும். இந்த நாடுகளுக்கு என்று தனியாக அரசியலமைப்புச் சட்டம் என்று எழுதப்பட்ட சாசனம் கிடையாது. பிரிட்டனில் ‘மகா சாசனம்’ (Magna Carta) என்ற வரலாற்று ரீதியான மனித மற்றும் அடிப்படை உரிமையான பிரகரடனம் 1215ம் ஆண்டில் ரன்னிமேட்டில் ஜான் அரசரால் மக்களின் கடுமையான வலியுறுத்தலில் பேரில் நிறைவேற்றப்பட்டது. இந்த சாசனமே சட்டத்தின் ஆட்சிக்கு அடிப்படை.
 
இது ஒன்று தான் பிரிட்டனில் எழுதப்பட்ட சாசனம் ஆகும். ஜனநாயகம் என்ற முறை கிரேக்கத்தில் இருந்து பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வளர்ந்தோங்கியது. ரோமில் உதித்த குடியரசுத் தத்துவம், பிரான்சில் வளர்ந்தது. இந்தியா பிரிட்டனை பின்பற்றி நாடாளுமன்ற ஜனநாயக நாடாகும். இந்தியாவிற்கு குடியரசுத் தலைவர் இருந்தாலும் உண்மையில் இந்தியா குடியரசுத் தத்துவத்தை எழுத்தில் தான் வைத்துள்ளதே ஒழிய நடைமுறையில் தவிர்த்துவிட்டது. இதனால் முதல் இந்திய குடியரசுத் தலைவர் ராஜேந்திர பிரசாத்துக்கும், பண்டித நேருவுக்கும் இடையே சர்ச்சைகள் எழுந்து உச்ச நீதிமன்றம் ஆலோசனை சொல்லி குடியரசாக சொல்லிக் கொள்ளுகிற வகையில் இயங்குகிறது.
 
இரண்டுங்க்கெட்டான் நிலையில் தான் நம்முடைய அமைப்பு முறைகள் இருக்கின்றன. குடியரசா? ஜனநாயக நாடா? அடுத்து கூட்டாட்சியா? ஒற்றையாட்சியா? அல்லது இரண்டும் கலந்த கலவை முறையா? நமது அரசியலமைப்பு சட்டம் நெகிழும் தன்மையானதா? அல்லது திடமானதா? என்றும் சொல்ல முடியவில்லை. இந்திரா காந்தி காலத்தில் குடியரசு முறையை கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்படியான பல நிகழ்வுகளும் விடைகாண முடியாத வினாக்களும் நமது அரசியலமைப்பில் உள்ளன.
 
உலகத்திலேயே அதிக பக்கங்களுடைய நம் அரசியல் சாசனம். அதிகமான திருத்தங்களை 70 ஆண்டுகளில் பெற்ற அரசியல் சாசனமும் கூட. இந்தியஅரசியல்அமைப்பு சாசனத்தில் கடந்த 16/09/2016 வரை 102 மேல் சட்டதிருத்தங்களை கடந்த 69ஆண்டுகளில்(சாசனம் ஏற்றக்பட்ட ஆண்டுகள்)கொண்டுவந்துள்ளோம் ! 

சுதந்திர அமெரிக்காவின் அரசியல் சாசனம் 240 ஆண்டுகள்; வெறும் 25 பக்கங்களில்அடங்கிவிடும் .அமெரிக்காவில் இதுவரை ஒரு 20 க்கும் மேலான திருத்தங்கள் தான் என்பதும் குறிப்பிடதக்கது .

அப்படி என்றால் நமது அமைப்பு முறையில் இன்னும் தெளிவு ஏற்பட முடியவில்லை என்பது தான் புலனாகிறது.
 
http://ksradhakrishnan-ksrblogs.blogspot.in/2016/11/constitution-day.html?m=1

#குடியரசு
#ஜனநாயகம்
#democracy
#republic
#KSRadhakrishnanpostings
#KSRpostings
K.S.Radhkakrishnan
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
01-08-2017

OCT 18 2026

  Remember how foreign-funded activists like Medha Patkar tried their best to deprive the Kutch region of Narmada water until Modi called th...