பிகாரில் ஸ்டாலின்..
Thursday, October 8, 2026
Nov 14, 2025 ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
ராஜாக்கள் மாளிகையும் காணாத இன்பமடா
நாலுகால் மண்டபம்போல் நாங்கள்கொண்ட சொந்தமடா ரோஜாவின் இதழ்களைப் போல் தீராத வாசமடா நூறாண்டு வாழவைக்கும் மாறாத பாசமடா முத்துக்கு முத்தாக, சொத்துக்கு சொத்தாக அண்ணன் த்ம்பி பிறந்து வந்தோம் கண்ணுக்கு கண்ணாக அன்பாலே இணைந்து வந்தோம் ஒன்னுக்குள் ஒன்னாக
Nov 14, 2025 பீகாரில் காங்கிரஸ் படுதோல்விக்கு காரணம் இது தான்..
பீகாரில் காங்கிரஸ் படுதோல்விக்கு காரணம் இது தான்.. K.S.Radhakrishnan Detailed Analysis | ProvokeNews
Nov 15, 2025 என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஒரு தலைவரின் அணுகு முறையாகவும் இருந்தது.
என்ன செய்ய வேண்டும் என்பதை புரிந்து கொண்ட ஒரு தலைவரின் அணுகு முறையாகவும் இருந்தது. மலையைப் புரட்டுவேன் மணலைக் கயிறாகத் திரிப்பேன் என்கிற புரட்டு வாக்குறுதிகளை அள்ளி வீசாமல் தன்னால் என்ன செய்ய முடியுமோ அதை நிச்சயமாகச்செய்வேன் அதற்காகத்தான் இந்தத் தலைமைப் பதவிக்கு நான் வந்துள்ளேன் என்று மக்கள் மொழியில் சொல்லி மிகப் பண்பாகவும் உண்மையாகவும் மக்களிடையே அவர் இந்தப் பயணத்தை மேற்கொண்டார்.
மதிப்புறு தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் அந்தந்த மாவட்ட பிரச்சனைகளை கேட்டு அறிந்ததும் அதற்கான ஆலோசனைகளைச் சொல்லி மக்களை சந்தித்த வீடியோகள் இணைக்கப்பட்டுள்ளது. அதுபோக பொது மேடைகளில் கூட்டங்களில் நயினார் நாகேந்திரன் அவர்கள் உரையாற்றியதும் இன்றைய ஆளும் கட்சியினுடைய போக்குகளை விமர்சித்ததுமான இரண்டாவது ஒளிப்படக் காட்சியும் அதன் வீடியோவும் இத்துடன் இணைக்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் தமிழகத் தலைவராக வளர்ந்து வரும் நயினார் நாகேந்திரன் திருநெல்வேலியைச் சார்ந்தவராக இருந்தாலும் கூட மக்கள் பேசும் மொழியில் குறிப்பாக கிராமப்புற எளிமையான மொழிகளில் மக்களைத் தொடர்பு கொண்டு அவர்களுடன் இணக்கமாக இந்த பயணத்தில் தொடர்ந்து வந்தது மிக அருமை.தமிழகத்தின் எல்லா பகுதிகளிலும் இந்தப் பயணத்தை மேற்கொண்ட போது தனது பொறுமையாலும் அறிவாற்றாலாலும் உண்மையை பேசுதலின் பொருட்டு அவர் மிகுந்த வசீகரமாக இருந்தார். அவருடன் நான் இந்த நாட்கள் முழுக்க பயணித்த போது இந்த பயணம் முழுமையான வெற்றியை அடையும் என்று மனப் பூர்வமாகத் தோன்றியது. அவருடன் பயணித்த இந்த குறைந்த நாட்களை வைத்து அந்த வெற்றியை நோக்கி பயணமாக இதை உறுதியாக என்னால் சொல்ல முடியும். ராபர்ட் ப்ராஸ்ட் எனும் கவிஞர் சொல்வது போல பயணம் தீராததுதான். இன்னும் வெகு தூரம் செல்ல வேண்டும் தான். ஆனால் அது எவ்வளவு நெடுந்தூரம் செல்லக்கூடியதாக இருந்தாலும் மக்களுக்கு நம்பிக்கையான உத்தரவாதங்களை கொடுப்பவராக அவர்கள் மீது உண்மையான அக்கறை உள்ளவராக நமது தமிழ்நாட்டு பாரதிய ஜனதா தலைவர் நயினார் நாகேந்திரன் மிகுந்த நிதானத்துடன் விளங்குகிறார். என் அனுபவத்திலிருந்து அதுவும் இந்த அரசியலில் 54 ஆண்டு காலம் பலரையும் பார்த்த வகையில் இவர் நிச்சயமாக மக்களின் மத்தியில் ஒரு நிறைவான நம்பிக்கைக்குரிய இடத்தைப் பெறுவார்.! தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல வழிகாட்டியாக மாற்றுகளை உருவாக்கக்கூடிய தலைமை பண்புடன் இந்த அரசியலில் வலம் வருவார் என்று எனக்குத் தோன்றியது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து மட்டுமல்ல. அவர் மக்களிடைய பெறும் வரவேற்பையும் வைத்துத் தான் கூறுகிறேன். காரில் பயணிக்கும் போது காரை விட்டு இறங்கி மக்களிடம் கை கொடுக்கும் போதும் அவர்களிடம் பெயர் சொல்லி பொறுமையாகக் குறைகளை கேட்டு அறிந்த போதும் ஒரு பக்குவமான முகத்தோற்றத்துடன் அதில் ஒரு உண்மையான அக்கறையும் இருந்ததை நான் வெகுவாக ரசித்தேன். ஏற்கனவே அரசியல் பொறுப்புகளில் இருந்தவராதலால் அமைச்சராகவும் இருந்து வந்தவர் என்பதனால் அவர் மக்களின் நாடி என்னவென்பதை அறிந்தவராகவே இருக்கிறார். ஒவ்வொரு பகுதிக்கு செல்லும் பொழுதும் முன்கூட்டியே அந்தப் பகுதியில் என்ன குறை நெடுநாளாக தீர்க்கப்படாமல் இருக்கிறது என்பதை அறிந்தவராகவும் அதே சமயம் அந்த பகுதியில் பயணிக்கும் போது முன்னர் தானும் தன்னையும் அறிந்த அடிமட்டத்தொண்டர்களையும் பெயரைச் சொல்லி அழைத்து நலமாக இருக்கிறீர்களா என்று அவர் விசாரித்த ஞாபக சக்தியும் கண்டு நான் ஆச்சரியப்பட்டேன். கடந்த காலங்களில் நான் காமராஜர், கலைஞர்,வைகோ வுடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டது கலைஞருடன் பயணங்களில் கலந்து கொண்டது. இன்னும் சொன்னால் காமராஜரோடு பழகிய காலத்தில் இருந்து அவருடனான பயணங்களிலும் கூட நான் இளைஞர் காங்கிரஸில் இருந்தபோது செயல்பட்டு இருக்கிறேன். அந்தப் பயணங்களின் நோக்கம் எவ்வாறு மக்களின் குறைகளை தெரிந்து கொள்வதற்காக இருந்ததோ அதேபோலத்தான் நமது அன்பிற்குரிய தமிழக பாரதிய ஜனதா தலைவர் திரு நயினார் நாகேந்திரன் அவர்களின் அணுகுமுறையும் இருந்ததை எண்ணி மனமகிழ்ந்தேன். அவரும் ஒவ்வொரு மாவட்டத்திலும் அங்குள்ள தொழிலாளர்கள் விவசாயிகள் சிறு தொழில் செய்யும் வணிகர்கள் பலரையும் சந்தித்தும் இதுவரை நிறைவேறாமல் கிடக்கும் கோரிக்கைகளையும் பொறுமையாகக் கேட்டு அறிந்து கொண்டார். பலதரப்பு மக்களையும் இந்த பயணத்தில் தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்கள் சந்திப்பதில் உற்சாகமாக இருந்தார். யாரையும் கீழ்த்தரமாக விமர்சிக்காமல் எல்லோரையும் அரவணைத்துக் கொண்டும் குறைகளை நிறைவேற்றாமல் இருக்கக்கூடிய இன்றைய அரசின் மெத்தனங்களையும் அவர் அறிந்து கொண்டார். ஒரு அருமையான என்நீண்ட கால நண்பராகிய நயினார் நாகேந்திரன் அவர்களுக்காகவும் மோடி,அமித்ஷா அவர்கள் அரவணைப்பாலும் அவர்கள் செய்து கொண்டிருக்கும் உண்மையான மக்கள் நோக்கங்கள் குறிப்பாக இந்தியா முழுமைக்கும்2/3Nov 15, 2025 #தமிழகம்தலைநிமிரதமிழனின்பயணம்_21 #கோவில்பட்டி
#தமிழகம்தலைநிமிரதமிழனின்பயணம்_21
#கோவில்பட்டி ———————————————— தொடர்ந்து இன்று 21வது நாளாக தமிழகம் தலைநிமிரும் பயணத்தில் தமிழ் மாநில பாரதிய ஜனதாக் கட்சியின் தலைவர் மரியாதைக்கும் அன்பிற்கும் உரிய திரு நயினார் நாகேந்திரன் அவர்களோடு கலந்து கொண்டதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன். இத்தகைய ஏக போகத்துக்கு எதிராகத் தமிழகம் தலை நிமிரும் பயணத்தில் பாரதிய ஜனதா தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்களுடன் இணைந்து செய்கின்ற சுற்றுப்பயணம் மூன்றாவது கட்டத்தில் எனது #கரிசல்மண்ணில் கோவில்பட்டியி்ல்வந்து நல்லபடியாக முடிகிறது. பல ஊர்களில் பல பகுதிகளில் தொகுதிகளில் பாரதிய ஜனதாத் தலைவர் பேசுகிறபோது மக்களிடம் இடைவெளி இல்லாமல் பேசி நெருங்கி அரவணைத்தும் அங்கு நடக்கக்கூடிய இருக்கக்கூடிய குறைகளைக் கேட்டு அறிந்தும் ஏற்கனவே தனக்குத் தெரிந்த இந்த அரசால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைப் பற்றி பேசியும் அவற்றை எல்லாம் சீர் செய்து தர வேண்டிய அவசியம் இருப்பது குறித்தும் விவசாயிகளிடமும் மக்களிடம் விரிவாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் மக்களிடையே பேசும்போது மோசமான விமர்சனங்கள் தாக்குதல்கள் எதையும் பயன்படுத்தாமல் அநாகரிகமான வார்த்தைகளால் யாரையும் சாடாமல் கண்ணியமாக நாகரிகமாக தனது உரைகளை மக்கள் கேட்டு உணரும்படி ஒரு அரசியல் பக்குவத்துடன் பேசினார். ஏற்கனவே அமைச்சராகவும் எம்எல்ஏ ஆகவும் பல பதவியில் இருந்தபடியால் அவரது பேச்சு மக்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் உண்மையான பிரச்சனைகளை நோக்கி மக்களை உசுப்புவதாகவும் கவர்ச்சி அரசியல்களை மீறி இந்தத் தமிழகம் தலைநிமிர இன்னும் என்ன என்ன பணிகள் இருக்கின்றன என்பதையும் அவர்களுக்கு ஞாபக மூட்டியது. அங்குள்ள நிலம் உற்பத்தி வணிகம் எதிர்காலம் தொழில் முதலீடுகள் சார்ந்து விரிவாகவும் அவர் பேச்சு அமைந்தது. அவரது எதார்த்தமான பேச்சால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். யாரால் எதைச் செய்ய முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆணித்தரமான பேச்சாக அமைந்தது. இன்னும் 40 நாட்கள் 67 மாவட்ட மையங்கள் என்பதாகத் இந்தச் சுற்றுப்பயணம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்குக் கிடைக்கும் சிறப்பான வரவேற்பு பாரதிய ஜனதாவின் எதிர்காலத்திற்கும் வெற்றிக்கும் நம்பிக்கைக்கும் கட்டியம் கூறியது என்றால் மிகை இல்லை. இத்தகைய ஏக போகத்துக்கு எதிராகத் தமிழகம் தலை நிமிரும் பயணத்தில் பாரதிய ஜனதா தலைவர் மதிப்பிற்குரிய நயினார் நாகேந்திரன் அவர்களுடன் இணைந்து செய்கின்ற சுற்றுப்பயணம் மூன்றாவது கட்டத்தில் எனது கரிசல் மண்ணில் வந்து நல்லபடியாக முடிந்தது. பல ஊர்களில் பல பகுதிகளில் தொகுதிகளில் பாரதிய ஜனதாத் தலைவர் பேசுகிறபோது மக்களிடம் இடைவெளி இல்லாமல் பேசி நெருங்கி அரவணைத்தும் அங்கு நடக்கக்கூடிய இருக்கக்கூடிய குறைகளைக் கேட்டு அறிந்தும் ஏற்கனவே தனக்குத் தெரிந்த இந்த அரசால் நிறைவேற்ற இயலாத வாக்குறுதிகளைப் பற்றி பேசியும் அவற்றை எல்லாம் சீர் செய்து தர வேண்டிய அவசியம் இருப்பது குறித்தும் விவசாயிகளிடமும் மக்களிடம் விரிவாகப் பேசிக்கொண்டு வந்தார். அவர் மக்களிடையே பேசும்போது மோசமான விமர்சனங்கள் தாக்குதல்கள் எதையும் பயன்படுத்தாமல் அநாகரிகமான வார்த்தைகளால் யாரையும் சாடாமல் கண்ணியமாக நாகரிகமாக தனது உரைகளை மக்கள் கேட்டு உணரும்படி ஒரு அரசியல் பக்குவத்துடன் பேசினார். ஏற்கனவே அமைச்சராகவும் எம்எல்ஏ ஆகவும் பல பதவியில் இருந்தபடியால் அவரது பேச்சு மக்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் உண்மையான பிரச்சனைகளை நோக்கி மக்களை உசுப்புவதாகவும் கவர்ச்சி அரசியல்களை மீறி இந்தத் தமிழகம் தலைநிமிர இன்னும் என்ன என்ன பணிகள் இருக்கின்றன என்பதையும் அவர்களுக்கு ஞாபக மூட்டியது. அங்குள்ள நிலம் உற்பத்தி வணிகம் எதிர்காலம் தொழில் முதலீடுகள் சார்ந்து விரிவாகவும் அவர் பேச்சு அமைந்தது. அவரது எதார்த்தமான பேச்சால் மக்களிடையே மிகுந்த வரவேற்பையும் மகிழ்ச்சியையும் பகிர்ந்து கொண்டார். யாரால் எதைச் செய்ய முடியும் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதே அவரது ஆணித்தரமான பேச்சாக அமைந்தது. இன்னும் 40 நாட்கள் 67 மாவட்ட மையங்கள் என்பதாகத் இந்தச் சுற்றுப்பயணம் தொடர்ந்து நடக்க இருக்கிறது. செல்லுமிடத்தில் எல்லாம் அவருக்குக் கிடைக்கும் சிறப்பான வரவேற்பு பாரதிய ஜனதாவின் எதிர்காலத்திற்கும் வெற்றிக்கும் நம்பிக்கைக்கும் கட்டியம் கூறியது என்றால் மிகை இல்லை. இந்த பயணத்தில் சென்ற இடங்களில் எல்லாம் மக்கள் கூடுதலாக வந்திருந்து தலைவர் நயினார் நாகேந்திரன் அவர்களை உற்சாகமாகச் சந்தித்தார்கள். பல இடங்களில் கூட்டம் அதிகமாக வந்து நிறைந்தது. நயினார் நாகேந்திரன் அவர்களின் பேச்சு மக்களிடையே மிகுந்த கவன ஈர்ப்பாகவும் எதார்த்தமாகவும் தமிழ்நாட்டு மக்களுக்கு1/3Nov 16, 2025 இன்றைய எங்கள் #கரிசல்மண்ணில் #கோவில்பட்டியில்…
இன்றைய எங்கள் #கரிசல்மண்ணில்
#கோவில்பட்டியில்…
15-11-2025.
Quote
Nainar Nagenthran
@NainarBJP
·
"தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்", 22-ஆம் நாள் இன்று கோவில்பட்டியில்...
கோட்டைக்குள் நுழைந்து, கொடியேற்றும் வாய்ப்பினை கொடுக்க காத்திருக்கிறது கோடிக்கணக்கான தமிழக வாக்காளப் பெருமக்களின் மனசாட்சி...
நிச்சயம் அது நடக்கப்போகிறது
என்பதற்கு இந்த கோவில்பட்டி மண்ணில் திரண்ட மக்களே
Nov 16, 2025 இன்றைய பிஹார், 1977 ஆம் ஆண்டுகளின் மேற்கு வங்காளத்தை ஒத்து இருக்கிறது.
இன்றைய பிஹார், 1977 ஆம் ஆண்டுகளின் மேற்கு வங்காளத்தை ஒத்து இருக்கிறது.
நக்சல்பாரி எழுச்சியின் முதல் அலை குருதியாலும், நெருப்பாலும் அடக்கி ஒடுக்கப்பட்ட காலம் அது. ஆனால் நக்சல் எழுச்சிக்கு வித்திட்ட அடிப்படை காரணங்கள் அப்படியே இருந்தன. ஜோதி பாசு தலைமையிலான சிபிஐ எம் கட்சி நக்சல் எழுச்சிக்கு காரணமான உழுபவர்களுக்கே நிலம் என்பதை அடிப்படை முழக்கமாக முன்வைத்தது. பாதி உறுப்பினர்களை நக்சல் பிளவிலும் அடுத்து வந்த சண்டைகளிலும் இழந்து இருந்தாலும் cpim இந்த அரசியலைக் கொண்டு தன்னை மறுசீரமைத்துக் கொண்டது. இழந்திருந்த அறிவாளி வர்க்கத்தின் ஆதரவை திரும்பப் பெற்றது. காங்கிரசின் ஆயுதம் தாங்கிய குண்டர் படைகள், மாநிலம் முழுக்க குவிக்கப் பட்டிருந்த அரசு படைகள், எல்லா வற்றையும் கடந்து சிபிஐ எம் வென்றது. பின்பு ஆப்பரேஷன் பார்க்கா தொடங்கப் பட்டது. குத்தகை விவசாயிகளின் உரிமைகள் பாதுகாக்கப் பட்டது, கிராம வறுமையும், நிலப்பிரபுத்துவ கொடுமைகளும் பெரிய அளவுக்கு ஒழிக்கப் பட்டது வரலாறு. வங்கத்தை விட வலிமையான நக்சல் இயக்கம் பீகாரில் இருந்தது. இப்போது பலவீனப் பட்டு இருந்தாலும் அதே சமூக நிலை நீடிக்கிறது. அடிப்படை பிரச்சினை நில உரிமையும், விவசாயிகள் மீது நிகழ்த்தப் படும் சுரண்டலும் தான். ஆனால் காங்கிரசு மற்றும் ஆர் ஜே டி இதைத் தொடவே பயந்தன. எனவே சவசவத்துப் போன பழைய முழக்கங்களை முன் வைத்தன. மதம், சாதி, பணம், தேர்தல் தந்திரங்கள் அனைத்தையும் பயன்படுத்தும் அதிதீவிர வலது சாரிகளும், பிற்போக்காளர்களுமான NDA வை இப்படி அரை மனதான முயற்சிகளால் எதிர் கொள்ள முடியாது.
Subscribe to:
Posts (Atom)
-
*In an unawakened state, your power is fully externalized*. Your faith is placed disproportionately on the systems, regulations, and structu...
-
Indian Army's Shameful Treatment of Women Recruits If someone were to ask new Defence Minister Manohar Parrikar what the top brass ...
-
#அன்றைய மெட்ராஸ்ராஜதானி, #சென்னை ராஜதானி, #பின்சென்னை மாகாணம் என்றும்; #இன்றைய தமிழ்நாடு 68* தமிழகம்அமைந்தநாள் #நவம்பர்1 தமிழ்நாடு நாள் ...