Tuesday, July 26, 2016

மவுண்ட் ரோடு

சென்னையின் முதல் 14 மாடிக் கட்டடமான எல்ஐசி, இந்து பத்திரிகை அலுவலகம், ஹிக்கின்பாதம்ஸ், ஆயிரம் விளக்கு மசூதி என இந்த சாலையில் இருக்கும் ஒவ்வொரு கட்டடத்திற்கும் ஒரு வரலாறு இருக்கிறது.

'தி மெயில்' பத்திரிகை அலுவலகம், சிதிலமடைந்த பாரத் இன்ஷூரன்ஸ் கட்டடம், பி.ஆர் அண்டு சன்ஸ் கடிகார கம்பெனி, ஒருகாலத்தில் எலெக்ட்ரிக் தியேட்டராக இருந்த இன்றைய பொது தபால் நிலையம் ஆகியவை மவுண்ட் ரோட்டின் பழமையை பறைசாற்றியபடி நின்று கொண்டிருக்கின்றன. 

கோடு போட்டால் ரோடு போடுவது என்று கேள்விப்பட்டிருப்போம். ஆனால் ரோடு போட்டால் ஒரு நாட்டிற்கே மேப் போடுவது என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அந்த வேலையை மவுண்ட் ரோடு செய்திருக்கிறது. 
இந்தியாவின் தற்போதைய வரைபடத்திற்கு ஆணிவேரே மவுண்ட் ரோடுதான்.

இந்தியாவின் நீள அகலத்தை அளப்பதற்காக 1802ஆம் ஆண்டு தொடங்கிய 'இந்தியாவின் பெரும் முக்கோணவியல் அளவீடு' (The Great Trigonometrical Survey of India) மவுண்ட் ரோட்டில் இருந்துதான் தொடங்கப்பட்டது. புனித ஜார்ஜ் கோட்டையை செயிண்ட் தாமஸ் மவுண்டுடன் இணைக்கும் 7 மைல் நீளம் கொண்ட நேர்க் கோட்டை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை ஆரம்பமானது. அப்படியே நீண்டு கொண்டு இமயம் வரை சென்ற இந்த பணியின் நிறைவாகத் தான், உலகின் உயரமான சிகரமான எவரெஸ்ட் கண்டுபிடிக்கப்பட்டது.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...