Sunday, July 17, 2016

துருக்கி-Turkey

வரலாற்றில் அரிய தாக்கங்களை ஏற்படுத்திய வளமிக்க தேசம் என்ற பெருமை துருக்கிக்கு உண்டு . கடந்த 75 ஆண்டுகளில் மேற்கத்திய அடிமைகள் அந்நாட்டின் எழில்மிகு வரலாற்றை சேதப்படுத்தி , பாரம்பரிய உணர்வுகளுக்கு விரோதமாக ஆட்சி நடத்தி வந்தனர் . 

#துருக்கியின் இழந்த பெருமையை மீட்டு ; துருக்கியை சர்வதேச அரங்கில் உயர்த்திய பெருமை எழுச்சித் தலைவர் #ரஜப்_தையிப்_எர்துகானை சேரும் !

மக்களால் நேரடியாக ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்பான ஆட்சியை நடத்திவரும் அவர் , அமெரிக்க – இஸ்ரேலிய ஏகாதிபத்திய சக்திகளுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார் . 

அவருக்கு எதிராக நள்ளிரவில் இராணுவ சதிப்புரட்சி திடீரென நடைபெற்றது அதிர்ச்சியளிக்கிறது . இதற்கு பின்னால் சர்வதேச சதி இருக்கிறது என்பதில் ஐயமில்லை . 

இராணுவத்தில் ஒரு பிரிவினர் நடத்தியிருக்கும் இச்சதி மக்கள் ஆதரவோடு முறியடிக்கப்பட்டிருக்கிறது ஆறுதல் அளிக்கிறது . 

இதுபோன்ற தீய சக்திகளுக்கு எதிராக , சர்வதேச சமூகம் தங்களது கண்டனங்களை பதிவு செய்ய வேண்டும்

ராணுவத்தின் ஒரு பிரிவு நடத்திய சதிப்புரட்சிக்கு எதிராக, துருக்கி போலிசார் அரச விசுவாசத்தோடு நடத்திய துணிகர நடவடிக்கைகள் பாராட்டத்தக்கவை.

துருக்கி மக்கள் அதிபர் எர்துகானின் வேண்டுகோளை ஏற்று, சாலைகளில்  இறங்கி உண்மையான புரட்சியை நடத்திவிட்டனர்.

ஆயுதமற்று, ஆவேசத்துடன் கிளர்ந்து எழுந்த துருக்கி மக்களுக்கு  முன்பு, ஆயுதம் தரித்த துருக்கி ராணுவத்தினர் கைகளை உயர்த்தி சரண் அடைந்தது இதுவரை உலகம் காணாதது. தோட்டாக்களால் மக்களின் உணர்வுகளை நசிக்கிவிட முடியாது என்பது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. 

ராணுவ டாங்கிகளுக்கு முன்னால்,மக்கள் நெஞ்சை நிமிர்த்தி மோதி நின்ற காட்சிகள் , பாலஸ்தீன போராட்டத்தை கண் முன் நிறுத்துகின்றன.முன்பு சீனாவில் தியான்மென் சதுக்கத்தில், சீன படைக்கு எதிராக மாணவர்கள் இவ்வாறுதான் போராடினார்கள்.

அதிபர் எர்துகானின் மீது துருக்கி மக்கள் வைத்திருக்கும் அளவிட முடியாத அன்பு, உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
ராணுவ சதி புரட்சியை அடக்கிய மகிழ்ச்சியில் மக்கள் துருக்கி வீதிகளில் வெளிப்படுத்தும் கொண்டாட்டங்கள் ஜனநாயகத்துக்கு கிடைத்த வெற்றியாகும்.

இனி உள் நாட்டு அரசியலிலும், உலக அரசியலிலும் துருக்கி  துணிச்சலான பல முடிவுகளை எடுப்பதற்கு இந்நிகழ்வு எர்துகானுக்கு புதிய சக்தியை தந்திருக்கிறது.

..............................................................
17/07/2016துருக்கியில் தோல்வியுற்ற ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின்போது, அதிக எண்ணிக்கையிலான குடிமக்கள் உள்பட மொத்தம் 265 பேர் கொல்லப்பட்டுள்ளதாக துருக்கிய அதிபர் அலுவலகம் அறிவித்திருக்கிறது.
கொல்லப்பட்டோரில் 104 பேர் ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள்.
ஒரு நிமிட மௌன அஞ்சலியோடு துவங்கிய நாடாளுமன்றத்தின் சிறப்பு அமர்வில் துருக்கியின் நான்கு முக்கிய அரசியல் பிரிவுகளும் திட்டமிடப்பட்ட இந்த ஆட்சிக் கவிழ்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.
அவர்களின் இந்த கூட்டு நிலைப்பாடு துருக்கியின் ஜனநாயகத்திற்கு மதிப்பிட முடியாதது என்று அவர்கள் கூறியுள்ளனர்.
துருக்கியின் நாடாளுமன்ற கட்டடமும் டாங்கிளாலும், விமானங்களாலும் வெள்ளிக்கிழமை இரவில் தாக்குதலுக்குள்ளானது.
இந்த அதிரடி புரட்சி முயற்சியை தேசத் துரோக நடவடிக்கை என்று துருக்கி அதிபர் ரசீப் தையிப் எர்துவான் சாடியுள்ளார்.
மக்களை வீதியில் இறங்கி போராட தன்னுடைய டுவிட்டர் சமூக வலைத்தளம் மூலம் அவர் அழைப்பு விடுத்தார்.
அவருடைய அழைப்பை ஏற்ற பொது மக்களும் வீதிகளில் திரண்டு இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை முறியடித்துள்ளனர்.
இது துருக்கியின் ஜனநாயகத்தின் மீது படிந்த ஒரு கறுப்பு கறை என்று துருக்கி பிரதமர் பினாலி இல்திரிம் விவரித்துள்ளார்.
நாட்டின் விடுதலைக்காக 161 பொதுமக்கள் இறந்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியை தொடர்ந்து ராணுவத்தின் டாங்கிகள் மற்றும் ஹெலிகாப்டர்களை கைப்பற்றிய துருக்கி ராணுவத்தை சேர்ந்த 3,000 பேரை தடுத்து வைத்துள்ளதாக துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இந்த அமைதியின்மைக்கு ஃபாதுல்லா ஹியூலென் என்ற மதபோதகரை குறித்துகாட்டும் இணை அமைப்பு தான் காரணம் என்று துருக்கி அதிபர் எர்துவான் குற்றம் சுமத்தியுள்ளார்.
துருக்கியை விட்டு வெளியேறி பல ஆண்டுகளாக அமெரிக்காவில் வாழும் மத போதகரான ஹியூலென், துருக்கி ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கும் தனக்கும் எவ்விதப் பங்கும் இல்லை என்று மறுத்துள்ளார்.
75 வயதான அவர் இந்த ஆட்சி கவிழ்ப்பு முயற்சியை கடுமையாகக் கண்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் கிரேக்க நாட்டிற்குள் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தற்போது தெரிவித்துள்ளது.
அங்கு அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ள எட்டு பேரையும் துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
முன்னதாக, துருக்கியில் ராணுவத்தின் ஒரு பிரிவு அதிரடியாக ஆட்சியைக் கைப்பற்ற முனைந்ததை அடுத்து, நாட்டை அமைதிக் கவுன்சில் ஒன்று வழிநடத்துவதாகவும், நாடெங்கிலும் ஊரடங்கு உத்தரவும் ராணுவச் சட்டமும் பிறப்பிக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது.Israel reacted tersely to a thwarted coup in Turkey, saying it expected a new reconciliation deal between the two regional powers following a six-year rift to be implemented as planned.

Violence erupted in Turkey late on Friday after the start of the Jewish Sabbath, when most government business officially takes a break.

This allowed Prime Minister Benjamin Netanyahu time to consider his response on the move against Turkish President Tayyip Erdogan, long a critic of Israeli policies but now a key player in the rapprochement with Israel.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...