Monday, July 25, 2016

செங்கல்தேரி, Tirunelveli

செங்கல்தேரி:
செங்கல்தேரி, களக்காட்டில் இருந்து 20 கி.மீ. தொலைவில் மலையுச்சியில் அமைந்துள்ளது.  இது கடல் மட்டத்தில் இருந்து 1000 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. #களக்காடு மலையில் வனவிலங்குகள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் செங்கல்தேரி பகுதியும் ஒன்று.  கண்ணுக்கெட்டிய தூரம் வரை பச்சை பசேலேன வனப்பகுதிகள், ஒங்கி உயர்ந்த மரக்கூட்டங்களுக்குள் தலை காட்டும் நீரோடைகள் என இதன் சிறப்புகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். இங்கு பலவேறு வகையான மூலிகைகள் இருக்கின்றன. இப்பகுதியில் யானை, காட்டெருமை, புலி, சிறுத்தைகள், சிங்கவால் குரங்குகள் என பல்வேறு வகையான விலங்குகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன.

இந்த இடத்திற்குச்  செல்ல வனத்துறையின் முன்அனுமதி பெற வேண்டும்.களக்காட்டில் இருந்து செங்கல்தேரிக்கு சாலைவசதி கிடையாது. ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்ட மலைப்பாதையே உள்ளது. 
செங்கல்தேரி,மலையுச்சியில் கருமாண்டி அம்மன் கோவில் உள்ளது. அங்கு சிறிய நுழைவாயிலை கொண்ட மிகப்பெரிய பழமையான குகை உள்ளது.   அந்த குகையில் 50 பேர் வசிக்கக்கூடிய அளவிற்கு உட்புறம் அமைந்துள்ளது.  பழங்கால சித்தர்கள் அதன்பிறகு வந்த மலைவாழ் காணி என்கிற வம்சத்தை சேர்ந்த மக்கள், அங்கே வாழ்ந்ததாக சொல்லப்படுகிறது.#tirunelveli

No comments:

Post a Comment

july 1

  Good and deep meaningful aspects…  @narendramodi @nsitharaman @PawanKalyan @EPSTamilNadu @NainarBJP @annamalai_k @BJP4TamilNad...