Tuesday, July 26, 2016

ஐரோப்பாவில் இடது சாரி அரசியல்

பிரான்சின் தற்போது இருக்கும் அதிபர் பிரான்கோய் ஹோலாந்தே சோசலிச கட்சியைச் சேர்ந்தவர். 2008-09 உலகப் பொருளாதார மந்த நிலைக்குப் பின் ஐரோப்பாவில் இடது சாரி அரசியல் கவனம் பெற ஆரம்பித்த பின் 2012-ல் அதிபரானவர். ப்ரான்ஸை தொடர்ந்து கிரீஸிலும் இடதுசாரிகள் ஆட்சியைப் பிடித்தனர்.

ஹோலாந்தேவின் பதவிக்காலம் அடுத்த வருடம் முடிவடைகிறது. அதாவது பிரான்சில் அடுத்த வருடம் தேர்தல் காலம். மீண்டும் இடதுசாரி அதிபரே வந்தால் அது முதலாளித்துவமே வளர்ச்சியின் தாரக மந்திரம் என்று ஓதும் கார்ப்பரேட் சாத்தான்களின் பிழைப்பில் மண் விழுவதாக அமையும்.

பிரான்சில் நடக்கும் தொடர் தாக்குதல்களில் தேயிஷ்ன் (ISIS) பங்கையும் தாண்டி கவனிக்க வேண்டியுள்ளது நிறைய உள்ளது. குறிப்பாக தேயிஷ் இதுவரை இஸ்ரேலை ஏன் தாக்கவில்லை என்பது உட்பட.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...