Wednesday, July 20, 2016

ஏரி வண்டல் மண் ,உழவர் உரிமை .

ஏரி வண்டல் மண் ,உழவர் உரிமை .
--------------------------------

 முன்பு ,ஏரி, குளங்கள் வற்றும்போது அந்தந்தப்பகுதி விவசாயிகளே நீர்நிலைகளில் உள்ள வண்டலை எடுத்து வயல்களில் இட்டுக்கொள்வர். இதனால், நீர்நிலைகளும் முறையாகத் தூர் வாரப்பட்டு வந்தது. நிலங்களும் வளமாயின. காலம் காலமாக இருந்து வந்த இந்த நடைமுறையை மாற்றி, நீர்நிலைகளில் உள்ள மண்ணை அரசே எடுத்துக்கொள்ளும் முறை வந்த பிறகுதான்... நிலைமை தலைகீழாக மாறியது. முறையாகத் தூர் வாரப்படாததால் நீர்நிலைகள் தூர்ந்துபோனதோடு, வண்டல் மண்ணை விவசாயிகள் பணம் கொடுத்து வாங்கவேண்டிய நிலைமையும் உருவானது. 

ஏரி, குளங்கள்தான் விவசாயத்துக்கு ஆதாரமானவை. அவற்றை முறையாகத் தூர்வாரி வந்தால், ஆழப்படுத்தி தண்ணீரைச் சேமிக்க முடியும். தூர்வாரும் போது கிடைக்கும் வண்டலைப் பயன்படுத்தி, நிலங்களை வளமாக்க முடியும். வண்டல் மண்ணை வயலில் கொட்டும்போது, வயல் வளம் பெறும். ஆனால், சிறு கனிமங்கள் என்ற பட்டியலில் ஏரி, குளங்களில் உள்ள #வண்டல்மண்ணையும் வகைப்படுத்தி, விவசாயிகள் வண்டல் எடுக்க அரசு தடைவிதித்தது. இதனால், விவசாயிகளுக்கு ஏராளமான இழப்புகள். தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான #ஏரி, #குளங்கள் தூர்ந்து கிடக்கின்றன. அதனால், பாசனத்தை இழந்து... ஏராளமான நிலங்கள் தரிசாக மாறிக் கொண்டு வருகின்றன. இந்நிலையில், ‘வண்டல் எடுக்க அனுமதிக்க வேண்டும்’ என சில ஆண்டுகளாக #விவசாய சங்கங்கள் கோரிக்கை எழுப்பி வந்தன.

இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு கனிமவளச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது தமிழக அரசு. ஒரு தனிநபர் விவசாயத் தேவைக்காக, 30 கன மீட்டர் வரை இலவசமாக வண்டல் எடுத்துக்கொள்ள கட்டணம் இல்லை. அதற்கு மேல் கட்டணம் செலுத்தி, வண்டல் எடுத்துக்கொள்ளலாம் என விதிகள் உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது. 

அதன் அடிப்படையில்தான் கடந்த மே மாதம், விவசாயிகள்  300 கன மீட்டர் வரை வண்டல் எடுத்துள்ளனர். ஒவ்வொரு விவசாயியும் 30 கனமீட்டர் அளவுள்ள வண்டலை கட்டணம் இல்லாமலும்; அதற்கு மேல் ஒரு கன மீட்டருக்கு 25 ரூபாய் வீதம் கட்டணம் .
தமிழக விவசாயிகளும் தங்கள் பகுதிகளில் உள்ள ஏரிகள், குளங்கள், கண்மாய்கள், ஊருணிகளில் இருந்து வண்டல் எடுத்து பலன் பெற முடியும். வண்டல் எடுக்க விருப்பப்படும் விவசாயி முதல்கட்டமாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், பொதுப்பணித்துறை அல்லது ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் அடங்கிய குழு, சம்பந்தப்பட்ட நீர்நிலையில் எந்தப் பகுதியில் எவ்வளவு வண்டல் எடுக்கலாம் என ஆய்வுசெய்து அனுமதி அளிப்பார்கள். விவசாயி மனு அளித்த 30 நாட்களுக்குள் நடவடிக்கை விளைநிலங்களில் வண்டல் பயன்படுத்தினால், மண் வளமாக மாறுவதோடு மட்டுமில்லாமல், மண்ணின் நீர்ப்பிடிப்புத் தன்மை அதிகரிக்கும். மேல் மண்ணின் காற்றோட்டத் தன்மையும் அதிகரிக்கும். அடுத்த மூன்று மாதங்களில் ஏரி, குளம், கண்மாய், ஊருணிகளில் வண்டல் எடுத்தால், வடகிழக்குப் பருவமழை மூலம் நீர்நிலைகளில் அதிகளவில் தண்ணீர் சேமிக்க முடியும்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...