Saturday, December 1, 2018

நீதித்துறை – சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்.

நீதிமன்றத்தின் மாட்சிமையானது நாளுக்குநாள் குறைந்து வருவதாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வேதனை தெரிவித்துள்ளார். இளம் வழக்கறிஞர்கள் பலர் நீதிபதியாக வர விரும்பாததற்கு இதுவும் ஒரு காரணம். கடந்த வியாழக்கிழமை ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப் அவர்களுக்கு உச்சநீதிமன்ற பார் கவுன்சில் சார்பில் பிரிவுபசார விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், முன்னாள் அட்டார்னி ஜெனரல் முகுல்ரோத்தகி உள்ளிட்ட மூத்த வழக்குரைஞர்கள், நீதிபதி குரியன் ஜோசப்பை வாழ்த்திப் பேசினர்.

சிறந்த நீதிபதிகளில் ஒருவரான குரியன் ஜோசப் ஓய்வு பெற்றுள்ளார். அவரைப் போன்ற சிறந்த நீதிபதியை தேடி நியமிப்பது என்பது உச்சநீதிமன்ற கொலிஜியத்துக்கு கடினமான பணியாகும். இப்போதுள்ள இளம் வழக்குரைஞர்கள் பலர், நீதிபதியாக பதவியேற்பதற்கு விரும்பவில்லை.
உச்ச நீதிமன்றத்தின் மேன்மையும், மாட்சிமையும் மெதுவாக மறைந்து வருவதும் இதற்கு முக்கியக் காரணம். நீதிமன்றத்தின் பெருமையை நிலைநாட்ட பார் கவுன்சில் உதவிக்கரமாக இருக்கவேண்டும். நீதிபதிகளுடன் நீங்கள் ஒத்துழைப்பதும், புரிந்து நடந்து கொள்வதும் நீதித்துறையின் மேன்மையை நிலை நாட்ட உதவும் என்றார்.
நிகழ்ச்சியில் நீதிபதி குரியன் ஜோசப் பேசியபோது, தேவையற்ற வகையில் தாக்கல் செய்யப்படும் மனுக்கள் நீதிமன்றத்தின் நேரத்தை வீணாக்குகின்றன. இந்த விஷயத்தில் வழக்குரைஞர்கள் மிகுந்த கவனத்துடன் செயல்பட்டு, பொது நல வழக்குகளை நீதிமன்றத்தின் முன்பு கொண்டு வர வேண்டும் என்றார்.Image may contain: 2 people, people smiling, suit
தற்போதுள்ள சூழ்நிலையில் நீதிமன்றங்களில் தகுதியற்ற நபர்கள் வழக்குரைஞர்களாகவும், நீதிபதிகளாகவும் வருவது அதிகரித்துள்ளது. நீதியை பரிபாலணம் செய்யும் பல்வேறு நீதிபதிகளின் மீதே சமீப காலங்களில் ஊழல், பாலியல் குற்றச்சாட்டுகள் போன்றவை அந்த பதவிக்குரிய மாண்பினை கெடுத்துவிடுகிறது.
மாவட்ட நீதிமன்றத்தில் வாதாடும் வழக்கறிஞர்கள் உயர் நீதிமன்றத்திற்கு வாதாடும் நிலையில் அதன் மரபுகள், நடைமுறைகள் ஆகியவற்றை பின்பற்றுவதில்லை. பல நீதிபதிகள் தாங்கள் பணி ஆற்றும் உயர் நீதிமன்றத்தில் வழக்குகளில் அந்த நீதிபதியின் வாரிசுகள் ஆஜராகும் நிலை அதிகமாக உள்ளது. இத்தகைய சூழலில் வழக்கின் தன்மை எவ்வாறு நியாயமாக இருக்கும். நீதிமன்ற உயர் பொறுப்புகளில் உள்ளவர்கள் பொதுவான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே செல்லவேண்டும். அதைவிடுத்து, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் பின்புலம் குறித்த விவரத்தை தெரிந்து கொள்ளாமல் அவர்களின் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கின்றனர். இந்த போக்கு சரியானதல்ல. ஒரு உச்ச நீதிமன்ற நீதிபதி தமிழகத்தில் உள்ள ஒரு நிகழ்ச்சிக்கு வருவதென்றால், அவருக்கான விமான டிக்கெட், தங்குமிடம் என பல்வேறு செலவுகள் உள்ளது. அவற்றை ஏற்பாடு செய்பவர்கள், வழங்குபவர்களின் பின்புலம் குற்ற பின்னணி கொண்டதாக இருக்கும் போது அந்த நீதிபதிகளின் மாண்பும் சீர்குலையும். எவ்வித தகவல்களும், தரவுகளும் இல்லாத பிரசுரிக்க தகுதியற்ற வகையில் பல நீதிபதிகள் தாங்கள் எழுதும் புத்தகங்களை வெளியிடவும் நிர்பந்திக்கின்றனர். இத்தகைய நிலைகள் மாற வேண்டும். நீதித்துற சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவளாக இருக்க வேண்டும்

No comments:

Post a Comment

கதைசொல்லி.

*கதைசொல்லி 34 ஆம் இதழ் விரைவில் வெளி வருகிறது*. *பொதிகை- பொருநை-கரிசல்* #* * #கேஎஸ்ஆர்போஸ்ட்  #ksrpost 15-5-2024.