முப்பத்து இரண்டு ஆண்டுகள் கடந்துவிட்டது. (04.08.1987)
————————————————-
இந்திய - இலங்கை அரசுகள் ஈழத் தமிழர்களின் பங்கேற்பின்றி உருவாக்கிய இந்திய - இலங்கை ஒப்பந்தத்தை ஏற்க முடியாது என்று சுதுமலையில் நடந்த மாபெரும் பொதுக்கூட்டத்தில் வே.பிரபாகரன்,அவர்கள் மக்கள் முன் அறிவித்த நிகழ்வு நாள்(04.08.1987).முப்பத்து இரண்டு ஆண்டுகள் கடந்த விட்டது.
ஈழத் தமிழர்களை ஒரு தேசிய இனமாகவும் அவர்களின் அரசியல் சுய நிர்ணய உரிமையையும் அடிப்படையாகக் கொள்ளாத எந்தத் தீர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒரு காலும் ஏற்காது என்று உறுதிபட முழக்கமிட்டார்.
இதே நாளில் சென்னை அண்ணாசாலை, சிம்சன் அருகில் உள்ள பெரியார் சிலையின் கீழ் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி மற்றும் எனது தலைமையில் இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தை தீயிட்டு கொளுத்தினோம்.இந்த சுவடுகளை எல்லாம் திரும்பி பார்க்கையில் நல்ல பணிகளை மேற்கொண்டோம் என கொஞ்சம் கம்பீரம் மனதில் ஏற்படுகிறது. அன்றைய செய்திதாட்களில் இந்த நிகழ்வு விரிவாக வந்தது. இதனால் நம்மால் அங்கீகாரம் பெற்று பயன்பெற்ற சிலரை அலட்சியப்படுத்தி தெம்போடு கடக்க முடிகிறது.
எவ்வளவு தடைகள், தடங்கல்கள், துரோகங்கள் இருந்தாலும்...
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
04-08-2019.
No comments:
Post a Comment