Wednesday, February 10, 2021

#72வது_குடியரசு_தினம் ——————————— #ராஜேந்திர_பிரசாத்


———————————
———————————
இன்றைக்கு குடியரசு நாள், இந்தியாவின் முதல் குடியரசு தலைவராக பாபு ராஜேந்திர பிரதாத் இருந்தார். கற்றறிந்தவர், பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர்.
அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் நெருக்கமும் தொடர்பும் உண்டு, நாங்குநேரியில் வைணவ திவ்யதேச கோவிலும், வானமாமலை பெருமாள் கோவிலும் புராதனமான வைணவ மடமும் உண்டு. அந்த கோவிலில் உள்ள கிணற்த்து தண்ணீர் கொஞ்சம் அடர்த்தியான எண்ணெய் மாதிரி வரும், அதை ராஜேந்திர பிரசாத் வேண்டி விருப்பமாக கேட்டு தன்னுடைய கால் வலிக்கு தேய்த்துக்கொள்ள, அவர் இறுதி காலம் வரை நாங்குநேரியிலிருந்து அனுப்பப்பட்டது. நாங்குநேரி மடத்தின் கிளைகள் பீகாரிலும் அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து என்னுடைய ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன்.

மேலும் அவர் குடியரசு தலைவராக இருந்தபோது நடந்த ஒரு செய்தி,
இந்தியாவின் தலைநகரமான புதுடில்லியில், மே மாதத்தில் வெயில், அனல் பறந்து கொண்டிருந்தது. சாலையோரத்தில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் பூட்டிக் கிடந்தது. அப்போது, பேருந்து ஒன்று அந்தப் பக்கம் வந்து நின்றது. அதிலிருந்த பயணியர், குடிப்பதற்கு நீர் கிடைக்காமல் திண்டாடிக்கொண்டிருந்தனர். அச்சமயம், அங்கு வந்த ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத், தன் காரை நிறுத்தச் சொன்னார். காரிலிருந்து இறங்கியவர், டிரைவரிடம், தண்ணீர் பந்தலின் பூட்டை உடைக்க சொன்னார். உள்ளே சென்று பார்த்தார். அங்கு தண்ணீர் இருந்தது. உடனே, அந்த இடத்தில் அமர்ந்து, அரை மணி நேரம் பயணியர்களுக்கு தண்ணீர் வழங்கினார். வியந்து போன பயணியர், ‘நாட்டின் தலைமகன், இப்படி சாதாரண மனிதன் செய்யும் வேலையை செய்வதா…’ என்றனர். அதற்கு, ‘தாகத்திற்கு தண்ணீர் தருவது, ஜனாதிபதி பதவியை விட உயர்வானது…’ என்றார் ராஜேந்திர பிரசாத். இன்றும், நாம் அவரை நினைத்துப் பார்க்கிறோம் என்றால், அவரது பணியும், அந்த சேவை மனப்பான்மையும் தான் காரணம்.
கே.எஸ்.இராதா கிருஷ்ணன்
26.01.2021

No comments:

Post a Comment

Yoga day column by VP

  Yoga day column by VP @CPR_VP in Tamil Dinamani, today 20- 6-2026 @narendramodi @PMOIndia @AmitShah @nsitharaman @NitinNabin @...