——————————————————-
பிக்பாஸ் 105 நாட்களில் சுமார் 200கோடி90லட்சம் மேலான வாக்குகள் தமிழ் மக்கள் வழங்கியுள்ளனர். ஆனால் தேர்தலில் தகுதியானவர்களுக்கு வாக்களிப்பது என்ற உணர்வு நம்மிடம் இல்லை. ஓட்டை விற்றுவிட்டு தகுதியற்ற அரசியல் வியாபாரிகளை எம்.பி மற்றும் எம்.எல்.ஏ போன்ற பதவிகளை கொடுத்தால் நாடு எப்படி இருக்கும். பிக்பாஸ் போன்ற கேளிக்கைகளைப் பாருங்கள் தவறில்லை, அரசியலையும் கேளிக்கையாக பார்க்காதீர்கள்.
போராடுங்கள், போராடுவதில் நியாயத்தோடு போராடுங்கள்;தன் இருத்தல் வெளிச்சம் உண்டாகக்க அல்ல என நிலை வேண்டும்.இதுதான் யதார்த்த நிலை. தியாகமும் உழைப்பும் பொது வாழ்வில் இல்லாமல் கையில் சில்லறை இருந்தால் தேர்தலில் வெற்றிப்பெற்றுவிடலாம் என்ற தைரியம் யாரால் வந்தது. மக்களின் நலமும், களமும், தளமும் சரியாக இருந்தால்தான் நாடு பீடுநடை போடும். பெரும்பான்மையோர் ஒரு தீங்கை ஆதரித்துவிட்டால் அது நல்லதாகி விடாது. 100 சதவீதத்தில் 20 சதவீதம் பெற்று வெற்றி பெறுவோரை மக்கள் பிரதிநிதியாக எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும். மீதம் 80 சதம் நிலை? நாடு எப்படியானால் என்ன, நமக்கான சுயவிருப்புகள் நிறைவேறினால் போதும் என்ற நிலை இருந்தால் நாடு எப்படி முன்னேறி செல்லும்.
இதுதான் நாம் கொண்டாடுகிற இன்றைய ஜனநாயகம்.
(படம்)ஆதியில் ஜனநாயகம் பிறந்த ஏதென்ஸ் நகரம். அதன் தொட்டில் கிரேக்க நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமுமாகும். இது கிரேக்க புராணத்தில் வரும் பெண்கடவுளான ஏதீனா என்ற பெயரிலிருந்து பெறப்பட்டது. உலகின் தொன்மையான நகரங்களில் ஒன்றான ஏதென்ஸ், சுமார் 3400 ஆண்டு கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1896 மற்றும் 2004ஆம் ஆண்டுகளில் கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் இங்கு நடைபெற்றன.தமிழ்
அரசர்கள் சிலரும் ஜனநாயகத்தை போற்றினர். (எ-கா) உத்திரமேரூர்.

No comments:
Post a Comment