—————————————
நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சைவ ஆலயங்கள் மற்றும் சமய இலக்கியங்களிலும் ஏட்டுச் சுவடிகளிலும் வரலாறாகக் குறிப்பிடப்பட்டு வருகின்ற சைவ ஆலயங்கள் பலவற்றில் பௌத்த தொல்லியல் அடையாளங்கள் இருப்பதாக இலங்கை தொல்லியல் துறை கடந்த 10 ஆண்டுகளாக உரிமை கோரி வருகின்றது. அவற்றில் சில,
1. ஒட்டுசுட்டான் தான்தோன்றி ஈஸ்வரம் ஆலயம்
2. மாந்தைகிழக்கு பத்திரகாளி அம்மன் கோவில்
3. குமாரபுரம் சிறீ சித்திரவேலாயுதம் முருகன் கோவில்
4. குமுழமுனை ஆஞ்சநேயர் கோவில்
5. பாண்டியன்குளம் சிவன் கோவில்
6. வவுனிக்குளம் சிவபுரம் சிறீமலை கோவில்
7. குமுழமுனை குறிஞ்சிக்குமரன் கோவில
8. மன்னார் திருக்கேதீஸ்வரக் கோவில்
9. மயிலிட்டி போர்த்துக்கேயர் கோவில
10. ஒதியமலையில் வைரவர் கோவில்
11. முள்ளியவளை குமாரபுரம் முருகன் கோயில்
12. திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை
13. செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயம்
14. புல்மோட்டை அரிசி ஆலை மலை கோவில்
15. வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயம்
16. மூதூர், சூடைக்குடா மலைப்பகுதி முருகன் ஆலயம்
17. திருகோணமலை கோணேஸ்வரர் ஆலயம்
18.மூன்றுமுறிப்பு கண்ணகி அம்மன்,
19. சிவபுரம் சிவாலயம்,
20. மாந்தை கிழக்கு ஆதிசிவன் கோயில்
21. குஞ்சுமப்ப பெரியசாமி கோவில்
22. ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில்
23. கல்லுமலை பிள்ளையார் கோவில்
24. மட்டக்களப்பு தாந்தாமலை ஆலயம்
25. மட்டக்களப்பு கச்சக்கொடி சுவாமிமலை
26. குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில்
27. மட்டக்களப்பு, சித்தாண்டி முருகன் ஆலயம்
28. கன்னியா வெந்நீர் ஊற்று
29. உருத்திரபுரம் சிவன் கோவில்
30. குசலமலை சைவ குமரன் ஆலயம்
31. காங்கேசன்துறை சைவ ஆலயம்
32. வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலயம்
மேற்குறிப்பிட்ட ஆலயங்களில், திருகோணமலை, கோணேஸ்வரம் கோவிலில், நிர்மாணிக்கப்பட்டு வந்த சகல கட்டுமானங்களையும், தொல்பொருளியல் திணைக்களம் 2015 ஆம் ஆண்டு முதல் தடுத்து வருகிறது . குறிப்பாக இந்தக் கோவில் வளாகத்தில் இருக்கின்ற கட்டுமாணங்களில் 99 சதவீதமானவை, சட்டவிரோதமான முறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. என்றும் அந்த இடம் பௌத்த மதத்திற்கு உரியது என்றும் அறிவித்து இருக்கிறார்கள் அதே நேரம் கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் அவர்கள் திருக்கோணேஸ்வர ஆலயம் அனுராதபுர காலத்தில் கட்டப்பட்ட கோகண்ண விகாரை மீதே கட்டப்பட்டுள்ளது என்று உரிமை கோரி இருக்கிறார்.
அதே போல திருகோணமலை மாவட்டத்தில் ஸ்ரீ மலை நீலியம்மன் கோயில் அழிக்கப்பட்டு கோவில் வளாகத்தில் பாசன பப்பாத ராஜமஹா விகாரை (Pashana Pabbatha Rajamaha Vihara) என்கிற பௌத்த ஆலயம் அமைத்து இருக்கிறார்கள்
இது மட்டுமின்றி திருகோணமலை மாவட்டத்தில் முகத்துவாராம் பிரதேசத்தில் தமிழ் மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வந்த குஞ்சுமப்ப பெரியசாமி கோவில் முழுமையாக அழிக்கப்பட்டு அந்த கோவில் இருந்த இடத்தில இப்போது "லங்கா பட்டுன சமுத்திரகிரி" என்கிற பெயரில் புதிய விகாரை ஒன்று கட்டப்பட்டு இருக்கிறது.
திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேசபை நிருவாகத்தில் இருந்த கன்னியா வெந்நீர் ஊற்றுக்கள் மத்திய அரசின் தொல்லியல் திணைக்களத்துக்கு கீழ் கொண்டு வர பட்டு பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக உரிமை கோருகிறார்கள்
திருகோணமலை மாவட்டத்தில் திருகோணமலை தென்னமரவடி கந்தசாமிமலை ஆலயத்தில் வழிபாடு நடத்த தொல்லியல் திணைக்களம் தடை விதித்து இருக்கிறது. கந்தசாமி மலை பௌத்த மத பூமி என உரிமை கோரி இருக்கிறார்கள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள் . நீதிமன்ற உத்தரவுகளை மீறி கோவில் வளாகத்தில் புத்த பிக்கு ஒருவரின் இறுதி கிரியைகள் நடத்தப்பட்டன
வெடுக்குநாறி மலை ஆதிசிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடத்த தொடர்ச்சியாக தடைகள் ஏற்படுத்தப்பட்டு வருவதோடு ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்
குருந்தூர் மலை ஆதி ஐயனார் கோவில் சூலத்தை அக்ற்றியதோடு நீதிமன்ற உத்தரவுகளை மீறி பௌத்த விகாரை ஒன்றை நிறுவும் வேலைகளை தொடங்கி இருக்கிறார்கள். குறிப்பாக இந்த ஆலய சூழலில் குருந்த அசோகராம என்கிற புராதன பௌத்த ஆலயம் இருந்ததாக தொல்லியல் திணைக்களம் உரிமை கோருகின்றது
காங்கேசன்துறையில் உள்ள சைவ ஆலயம் ஒன்று இடிக்கப்பட்டு ஆலய சூழலில் கெமுனு விகாரை என்கிற பெயரில் பௌத்த விகாரை ஒன்றை நிறுவி இருக்கிறார்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தில் குசலமலை சைவ குமரன் ஆலய சூழலில் பௌத்த மத அடையாளங்கள் இருப்பதாக பௌத்த பிக்குகள் உரிமை கோரி வரும் நிலையில் குறித்த ஆலயத்தின் முன் கதவு , மூலஸ்தான விக்கிரம் என்பன அடித்து நொறுக்கப்பட்டு இருக்கின்றன
என தகவல்.

No comments:
Post a Comment