———————————————————-
மதுரை நகரில் கரிமேடு கருவாயன் நடுப்புறப் பாடல் சிலர் பாடி கேட்டதுண்டு. கருவாயன் ராமநாதபுரம் மாவட்டம் புனவாசல் கிராமத்தில் பிறந்து மதுரை கரிமேட்டில் வாழ்ந்து, மதுரை பாண்டியன் மில்லில் வேலை செய்தார், பெரிய ரவுடி என்றும் இவரை சொல்வதுண்டு. கருவாயனை மதுரை தேவி திரையரங்கம் வழியேப் பிடிக்க போலீஸார் முனைந்தபோது குமாரகத்தில் கருவாயனைப் பிடிக்க முடிந்தது. பிடித்து, காவல்துறை கைது செய்து வந்த பொழுது மங்கம்பிள்ளை சாப்பாடு கடையில் மதியம் சாப்பிட்டப்பொழுது தப்பிவிட்டார். 1951-ல் சோழவந்தான் சினிமாக் கொட்டகையில் போலீசார் அவரைப் பிடித்து கைது செய்தபோது தப்பி ஓடினார். அவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றனர். ராணுவத்திலும் இவன் வேலை செய்தான் என்று குறிப்புகள் உள்ளன. மதுரை நாட்டுபுறத் தரவுகளில் ஒரு முக்கியான விடயமாகும்.
“கொளுத்த உடம்புமில்லே குஸ்திபயில் வானுமில்லே
குட்டையா இருப்பார் வளத்தியு மில்லே – நல்ல
கருத்த மனுசன் தாண்டி கவட்டை வில்லெடுத்தடிச்சா
கச்சிதமா வச்சகுறி மாறாது புள்ளே…”

No comments:
Post a Comment