———————————————————-
“Educating the mind without educating the heart is no education at all.”
― Aristotle.
ஜேஎன்யு-வை குட்டி இந்தியா என்று சொல்வார்கள். ஆனால் குட்டி உலகம் தான். கடந்த 1970 களில் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படித்தக் காலத்தின் நினைவுகளை பல முறை பதிவு செய்துள்ளேன். ஆரம்ப கால கட்டத்தில் வடஇந்திய மாணவர்கள் அதிகமாக படித்தார்கள். பின் படிபடியாக இந்தியா முழுவதும் தெற்கே குமரி முனை, கேரளாவில் இருந்தும் மாணவர்கள் கல்வி கற்க வந்ததுண்டு. பல்வேறு நாடுகளிலிருந்தும் மாணவர்கள் இங்கே கல்விக்காக வந்துள்ளனர்.
இந்த பல்கலைக்கழகத்தின் முதல்
துணை வேந்தர் ஜி.பார்த்தசாரதி தமிழகத்தைச் சேர்ந்தவர், இந்திரா காந்திக்கு மிகவும் நெருங்கிய வட்டாரதில் இருந்தவர். இலங்கைப் பிரச்சினையில் 1983-ல் தமிழர்கள் சாகடிக்கப்பட்டபோது இந்தியப் பிரதிநிதியாக இலங்கை சென்று பலமுறை தமிழர்களுக்காக அன்றைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனாவுடன், பிரதமர் இந்திரா காந்தி சார்பில் இதய சுத்தியோடு பேச்சு வார்த்தை நடத்தியவர். இலங்கை பிரச்சினையில் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்கவேண்டும் என்ற அக்கறையோடு பாடுபட்டவர். அவரை வேலுப்பிள்ளை பிரபாகரனோடும் நெடுமாறனோடும் அப்போது சந்தித்து உண்டு. இந்தப் பல்கலைக்கழகம் நிர்மாணிக்க பிரதமர் இந்திரா காந்தி ஆலோசனையின் பெயரில் அன்றைய கல்வி அமைச்சர் எம்.சி.சாக்ளா நாடாளுமன்றத்தில் இது குறித்தான சட்டத்தை 1964-ல் கொண்டு வந்து ஜேஎன்யு நிறுவப்பட்டது. வி.எஸ்.ஜா, மத்திய அமைச்சர்களாக இருந்த திரிகுணசிங், வி.கே.ஆர்.வி.ராவ், ஜி.எஸ்.பதக் போன்றவர்கள் எல்லாம் இந்தப் பல்கலைக்கழகம் அமைய பிரதமர் இந்திரா காந்திக்கு துணை நின்றனர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி ஜாமியா மில்லியா, வாரணாசி பானரஸ் இந்து பல்கலைக்கழகம்(BHU), தாகூரின் சாந்தினி நிகேதன் (விஸ்வ பாரதி) என்பதெல்லாம் முன்னோடியாக இருந்த பல்கலைக்கழகங்கள்.அடியேன் 1970 களில் மாணவர் அரசியலில் இருந்த காலத்தில் இங்கெல்லாம் சென்று வந்ததுண்டு. கல்வி, அரசியல் என்பதெல்லாம் ஜனநாயக கலாச்சாரமாக பரவி விசாலமாக இந்தப் பல்கலைக்கழகத்தில் காண முடிந்தது. ஜேஎன்யுவில் அச்சடித்த சுவரொட்டிகளை விட கையால் வரையப்பட்ட சுவரொட்டிகள் தான் அதிகமாக தென்படும்.
வாக்குவாதங்கள், எதிர்வினைகள், போராட்டங்கள், போன்ற வினைகளின் நாற்றங்கால் ஜேஎன்யு. அருமையான பேராசிரியர்கள் என உள்ளடக்கிய பாடத்திட்டங்கள் பல்வேறு மொழிகள் இங்கே கலந்து அகண்ட பாரதமாக இந்த பல்கலைக்கழகம் தென்படும்.
பிரிட்டன் போனால் வாய்ப்பிருந்தால் அடிக்கடி கேப்பிரிட்ஜ், ஆக்ஸ்போர்டு சென்றுவிட்டு வருவதுண்டு. தமிழ்நாட்டில் அண்ணமலை பல்கலைக்கழகம் இதே போன்று பல்வேறு மாநிலத்தைச் சார்ந்தவர்கள் வந்து படிக்கக்கூடிய அளவில் உருவாக்கி இருக்கவேண்டும். ஆனால் இல்லாமல் போய்விட்டது ஏன் என்று தெரியவில்லை. ஜேஎன்யுவில் சிந்தாந்த கொள்கை கோட்பாடுகளை விட்டுவிடாமல் பிடிவாதமாக முன்னிருத்துவம் நல்லதில்லை என்று மனதில் படுகிறது.
பிரதமர் இந்திரா காந்தி காலத்தில் ஒரு வித்தியாசமான பார்வையில் மாறுபாட்ட அணுகுமுறையில் ஆக்கப்பூர்வமான கல்வி தரத்தை தரவேண்டுமென்ற நிலையில் 1960களில் திட்டமிட்டு இந்த ஜேஎன்யு துவக்கப்பட்டது. இங்கு ஒரு பக்கம் பொதுவுடைமை கொள்கைகள், left right centre என்று மட்டுமல்லாமல் மதம் சார்பாக சில குழுக்களும் உள்ளார்ந்து இருக்கின்றன.
இந்த நிலையில், சமீபத்தில் ALEPH BOOK COMPANY வெளியிட்ட “JNU STORIES – THE FIRST 50 YEARS” என்ற புத்தகம் கையில் கிடைத்தது. இந்த நூல் ஜேஎன்யு பற்றிய 50 ஆண்டுகளில் நடந்த சில நிகழ்வுகளை Neeladri Bhattacharya, Kunal Chakrabarti, S.Gunasekaran, Janaki Nair மற்றும் joyL.K.Pachuau ஆகியோர் தொகுத்து வழங்கியுள்ளனர். அற்புதமான படிக்கத் தூண்டும் ஒரு நூலாக உள்ளது.
சிகப்பு கலரில் அமைந்த பெரிய கட்டிடங்கள்,காடுகள் சூல இந்த பல்கலைக்கழகம் தன்னுடைய இயற்கை தன்மையை தொடர்ந்து பாதுக்காக்கவேண்டும் இதன் தனித்தன்மையை போற்றவேண்டும்.

No comments:
Post a Comment