Tuesday, February 9, 2021

#Latest_Note_on_SriLanka_Tamils_question_and_India’s #Security...


இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மூன்று நாள் பயணமாக இலங்கைச் சென்றார். இலங்கை வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்த்தனாவின் அழைப்பின் பேரில் அங்கு சென்று அவரிடம் பல விடயங்களை விவாதித்தார். யாழ் பல்கலை கழகத்தில் முள்ளிவாய்க்கள் நினைவு உடைப்பு, மாகான கவுன்சில் ஒழிப்பு விடயங்கள் அங்கு இருந்தது. அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை அதிபர் கோத்தபயையும் சந்தித்துப் பேசினார். தமிழர்கள் பிரச்சனையில் 13-வது திருத்தம், மாகாண சபை முறையின் மாற்றம், தமிழர்களின் அரசியல் தீர்வு, ஜெனிவா மனித உரிமை ஆணையத்தில் தமிழினம் அழிப்பு தொடர்பான நீதிகேட்ட தீர்ப்பாணைகள், இந்தியாவின் கொரானா தடுப்பூசி இலங்கைக்கு வழங்குது குறித்தும் பேசப்பட்டுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனா இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது அந்த நிகழ்வில்,
"ஒருங்கிணைந்த இலங்கைக்குள் தமிழ் சமுதாயத்தின் நீதி, சமத்துவம், அமைதி மற்றும் கெளரவத்திற்கு இந்திய அரசு துணை நிற்கும்."
என்று இலங்கைப் பயணத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
இப்படித்தான் இந்திராகாந்தி மறைவுக்குபின் மத்திய அரசில் இருப்பவர்கள் தொடர்ந்து 35 ஆண்டுகளாக சொல்லிக்கொண்டே வருகிறார்கள், ஈழத்தமிழர்களுக்கோ எந்தத் தீர்வும் 40 ஆண்டுகள் எட்டப்படாமல் இருக்கிறது. இலங்கை இந்தியாவிற்கு எவ்வளவு தான் விரோதமாக நடந்துகொண்டாலும் இலங்கை ஆட்சியாளர்களுக்கு இந்தியா ஆதரவளிப்பது தொடர்ந்து நடந்து வருகிறது, அது மேலும் இந்தியாவிற்கு சிக்கல்களை உருவாக்கும் என்பதை இந்திய அரசு புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெய்சங்கர் உறுதியளித்தவாறு தடுப்பூசி ஏற்றுமதி இலங்கைக்கு தருவதில் ஒரு மனிதாபமான செயல் தான், இருப்பினும் இந்தியாவின் பங்களிப்புகளையும் உதவிகளையும் பெற்று இலங்கையில் பலத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன, அவை,
1. யாழ்பாணம் பலாலி விமான நிலையம் (தற்போது மூடப்படும் நிலை எனத்தகவல்)
2. காங்கேஸன் துறையில் தாது மண் திட்டம்
3. கொழும்பு யாழ்பாணம் இரயில் பாதையை சீர் அமைத்து தந்தது
4. வவுனியாவில் புது பெரும் மருத்துவமனை
5. சம்பூர் மின் உற்பத்தி திட்டம்
6. இந்திய இலங்கை சுற்றுலாத் திட்டத்தை விரிவுபடுத்துவது
7. சூரிய வெப்பத்தைக்கொண்டு இந்தியா உதவியால் மின் சக்தி ஒப்பந்தம் செய்வது
8. இலங்கையில் படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பும் தொழில் பயிற்சியும் இந்தியா அளிப்பது
9. கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையம் இந்திய இலங்கை கூட்டு நடவடிக்கை
10. எல்.என்.ஜி திரவ, இயற்கை எரிவாயுத் திட்டம்
11. ஈழத்தமிழர்களுக்கு வீடுகள் கட்டிக்கொடுத்தல்
12. நகர்புறத்தில் வீதிகளைச் சீர்படுத்தி தருதல்
13. விவசாய வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி, இலங்கைத் தமிழர்களுக்கு விவசாயத்திற்கு டிராக்டர் வழங்குதல்
14. ஈழத் தமிழ் பிள்ளைகளுக்கு பாடசாலை செல்ல சைக்கிள் வழங்கல்
15. திரிகோணமலை துறைமுகத்தளம் மற்றும் எண்ணெய் உற்பத்தி தொழில் ரீதியான ஒப்பந்தம்
16. இலங்கை இராணுவத்திற்கு பயிற்சி அளிப்பது உள்ள சிக்கல்கள். இந்தப்பயிற்சி யாருக்காக, இங்கிலாந்தில் சுமார் இரண்டு லட்சம் இராணுவ வீர்ர்கள் தான் இருக்கிறார்கள், இலங்கையில் சுமார் 3 லட்சம் இராணுவ வீரர்கள் இருக்கிறார்கள், இது எதற்கு, இந்தியர்களை அழிப்பதற்காகவா..? என்று இந்தியா உணரவேண்டும்.
17. இந்தியாவிற்கும் இலங்கைக்கும் 400 கோடி மதிப்பிலானா கட்டுமான பணிகள் ஒப்பந்தம்.
18. பெட்ரோல் எண்ணெய் கிணறுகள் குறித்தான ஒப்பந்தங்கள்.
19. இந்திய இரயில் மற்றும் பேருந்துகள் விற்பனை ஒப்பந்தங்கள்.
என சொல்லிக்கொண்டே போகலாம். இப்படி இலங்கைக்கு பலவகைகளில் இந்தியா உதவிக்கரம் நீட்டியுள்ளது. இவற்றில் பலவற்றை நிறைவேற்ற முடியாமல் இலங்கை அரசு சண்டித்தனமும் செய்கிறது.
இலங்கை இந்தியாவிடம் தொடர்ந்து உதவிகள் பெற்றுக்கொண்டு வருகிறது. முள்ளிவாய்க்கால் போர் முடிந்தவுடன் இலங்கைத் தமிழர் புணர் வாழ்வுக்கு இந்தியா நிதி வழங்கியும் அது சரியாக அங்குள்ள தமிழர்களுக்கு சேரவில்லை. இதில் இன்னொரு வேடிக்கை என்னவென்றால் கிடைத்த தகவலின்படி ராஜபக்சே தொகுதியின் பக்கத்தில் இலங்கையின் தென்முனையின் சிங்கள பகுதியில் காலேவில் ரயில்வே சந்திப்பு இரயில் நிலையம் இந்தியா கொடுத்த பணத்தில் கட்டினார்கள். அதையும் வெளியுறவுத்துறை அமைச்சர் மன்மோகன் சிங் காலத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா துவங்கி வைத்தார், இப்படியெல்லாம் பல குளறுபடிகள் இந்தியா கொடுத்த நிதியில் நடந்தன. மன்மோகன் சிங் அரசும் அதை கண்டுகொள்ளவில்லை.
சமீபத்தில் ஓராண்டுக்குள்ளே இந்தியாவிடமிருந்து இருமுறை நிதி உதவி இலங்கை பெற்றுள்ளது. ஆனால் இந்தியாவைக் காட்டி சீனாவிடமும் உதவிகளை பெறுகிறது. இந்தியாவிடம் ஒப்புக்கு உறவு வைத்துக்கொண்டு இலங்கை தன்னுடைய முழுமையான ஆதரவை சீனாவிற்கு கொடுப்பதை நாம் எப்போது சிந்திப்பது. இந்த நிலையில் அங்குள்ள தமிழர்களை இந்தியா அரவணைத்தால்தான் இலங்கை இந்தியாவைக் கண்டு அச்சப்படலாம். இலங்கை இந்தியா மீது பயமில்லாமல் போனதற்கு காரணம் ஈழத்தமிழர்களுக்கு எவ்வளவு தான் பிரச்சினை செய்தாலும். இந்தியா நம்மை கண்டிக்காது, ஒப்புக்கு அதிகாரம் வழங்கு என்று சொல்லும், அவ்வளவுதான் என எடுத்துக்கொள்ளும் மனபாங்கில் இலங்கை அரசு இருக்கின்றது. இதை இந்திய மத்திய அரசு உணரவேண்டும். ஈழத்தமிழர்களுக்கு இந்திரா காந்தி அணுகுமுறையின் படி நடவடிக்கை எடுத்தால் இலங்கை ஓரளவு தமிழர்கள் பிரச்சினைகளுக்கு நியாயத்தை வழங்கும். இப்படித்தான் இந்திரா காந்தி அணுகுமுறையைப் பார்த்து அச்சம் கொண்டார் ஜெயவர்த்தனா.

பெரும்பாலானோர் 1987ல்தான் இந்திய ராணுவம் அமைதிபடையாக இலங்கை வந்ததாக நினைக்கிறார்கள். ஆனால் 1971இலும் இந்திய ராணுவம் இலங்கை சென்றது என்பதை இவர்கள் அறியவில்லை. 1971ல் இந்திராகாந்தியின் ஆட்சி காலத்தில் 2000 இந்திய ராணுவத்தினர் இலங்கை வந்தனர். ஜே.வி.பி கிளர்சியை அடக்குவதாக கூறி அவர்கள் ஹெலிகொப்டர் மூலம் சுட்டதில் 6000 சிங்கள இளைஞர்கள் இறந்தார்கள். அடுத்து 1987ல் அமைதிப்படை என்று ஒரு லட்சத்து இருபதாயிரும் இந்திய ராணுவ வீரர்கள் இலங்கைக்கு வந்தார்கள். அமைதிப்படை வந்தபோது தென்னிலங்கைதான் தீப்பற்றி எரிந்து கொண்டிருந்தது. தென்னிலங்கையில்தான் பிரதமர் ராஜீவ் காந்தி துப்பாக்கியால் தாக்கப்பட்டார். வந்தது அமைதிப்படை என்றால் தென்னிலங்கையில்தான் அவை நிறுத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ஒரு லட்சத்து இருபதாயிரம் இராணுவத்தில் ஒரு வீரர் கூட தென்னிலங்கையில் நிறுத்தப்படவில்லை. அதேவேளை எதிர்ப்பே தெரிவிக்காத வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில்தான் 10 தமிழருக்கு ஒரு ராணுவ வீரர் என்ற விகிதத்தில் நிறுத்தப்பட்டார். அதுமட்டுமல்ல, இந்திய ராணுவம் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போர் 22 நாட்களே நடைபெற்றது. 1971ல் வங்கதேசத்தை உருவாக்கிய போர் 14 நாட்கள் மட்டுமே நடைபெற்றது. ஆனால் 1987ல் அமைதிப்படை ஈழத்தில் நடத்திய போர் இரண்டரை வருடங்கள் நடைபெற்றது. அதுவும் நாள் ஒன்றுக்கு 6 கோடி ருபா வீதம் 5400 கோடி ரூபா செலவு செய்து நடத்தியது. இந்தியாவில் ஒரிசா மாநிலத்தில் வரலாறு காணாத வரட்சியில் விவசாயிகள் செத்துக்கொண்டிருந்த வேளை இலங்கையில் இந்திய அமைதிப்படை 5400 கோடி ரூபா செலவு செய்து போர் நடத்தியது. இந்த இந்திய அமைதிப்படையினரால் 10000 மேற்பட்ட அப்பாவி ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்டனர். 800 அதிகமான பெண்கள் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டனர். பல கோடிக் கணக்கான ரூபா பெறுமதியான தமிழ் மக்களின் சொத்துகள் சேதமாக்கப்பட்டன.
இப்போது அங்குள்ள ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதை இந்தியா உணரவேண்டும். அதிகாரப் பூர்வமான பயணங்கள், பேச்சுவார்த்தை ஒருபக்கம் இருந்தாலும் கீழ்கண்டப் பிரச்சினையில் இந்திய அரசு கவனம் செலுத்தவேண்டும்,
1. வடக்கு கிழக்கு மாகாணங்களில் 2009 முள்ளிவாய்க்கால் போர் முடிந்து 10 ஆண்டுகள் மேல் ஆகியும், சிங்கள ராணுவம் தமிழர்களுடைய நிலங்களை அபகரித்து முகாம்கள் அமைத்து அங்குத் தமிழர்களை மிரட்டக் கூடிய வகையில் இருப்பதை ராணுவத்தினர் உடனே திரும்ப வேண்டும்.
2. மேலே குறிப்பிட்ட ராணுவ முகாம்கள் அமைக்கப்பட்ட நிலங்கள் தமிழர்களுக்கு சிங்களர்கள் விவசாய காணி நிலங்கள், வீடுகளை திரும்பவும் தமிழர்களின் உரிமையாளரிடம் ஒப்படைக்கவேண்டும், இதுகுறித்தான வழக்குகள் நிலுவையில் உள்ளன.
3. முள்ளிவாய்க்கால் போரின்போது கைது செய்யப்பட்டத் தமிழர்களை உடனே விடுதலை செய்யவெண்டும்.
4. கடந்த 2009 போரின் போது காணாமல் போனவர்களை அறிந்து அதுகுறித்தான வெள்ளை அறிக்கையும், அவர்களை கண்டுபிடித்து அவர்களின் உறவினர்களிடம் ஒப்படைக்கவேண்டும்.
5. ஈழத்தில் தமிழ் விதவைகள் மறுவாழ்வுக்கும் சரியான நடவடிக்கைகள் இல்லை.
6. இந்தியாவில் இருக்கும் ஈழ அகதிகள் குறித்தும் தெளிவானப் பார்வை சிங்கள அரசுக்கு இல்லை. இந்தியாவிலுள்ள அகதிகளை ஈழத்திற்கு திரும்பி அந்நாட்டு மக்களாக வாழ செயல் திட்டங்களையும் இந்தியா இலங்கையிடம் பேசவேண்டும். சிரிமா சாஸ்திரி ஒப்பந்தம் போல ஈழத்தமிழ் அகதிகள் பிரச்சனைகள் ஆகிவிடக்கூடாது. இந்தியாவிலிருந்து இலங்கை திரும்பும் அகதிகளுக்கு இங்கு தங்கிய கட்டணத்தை (Staying Charge) ரத்து செய்து, எந்தவித பயணக் கட்டணமும் இன்றி அவர்களை கப்பலில் அனுப்பிவைக்கவேண்டும். இலங்கை சென்றபின் இந்த அகதிகளின் வாழ்வாதாரத்தையும் பெற அனைத்து நடவடிக்கைகளும் செய்யவேண்டும்.
7. மாகாண கவுன்சிலை ஒழிப்பதற்கான சிங்கள அரசு இறங்கியுள்ளது, அது மேலும் சிக்கலை உருவாக்கும். மாகாண அரசுக்கு உரிய அதிகாரம் இந்தியா மாநிலங்களுக்கு வழங்கியது போல வழங்கப்பட்டால்தான் அங்குள்ளத் தமிழர்கள் அமைதியாகவும் சம அந்தஸ்துடன் வாழமுடியும், தேர்ந்தெடுக்கப்பட்ட மாகாண முதலமைச்சர்களுக்கோ, மாகாண சபைக்கோ உறுதியளிக்கப்பட்ட அனைத்து அதிகாரங்கள் வழங்கப்படவில்லை.
8. ஜெனிவா, ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள ஈழத்தமிழர்கள் இன அழிப்பு குறித்தான நியாயம் தமிழர்களுக்கு தீர்ப்பாணை மூலம் கிடைக்கவேண்டும்.
9. தமிழர்களுக்கு அரசியல் தீர்வுக்கு பொது வாக்கெடுப்பு (Referendum) அயலக பொறிமுறை கண்கானிப்பில் நடத்தவேண்டும்.
10. இன அழிப்புக்கான நியாயங்கள் கிடைக்க சர்வதேச சுதந்திரமான நம்பிக்கையான புலனாய்வும், நீதிவிசாரணையும் நடத்தவேண்டும்.
11. வடக்கு கிழக்கு மாநிலம் சைவ மதத்தின் கேந்திரப் பகுதிகளாகும். அங்குள்ளத் தமிழர்கள் வணங்கும் இந்து மத கோவில்கள் படிப்படியாக அழிக்கப்படுகிறது. தமிழர் கலாச்சாரத்தைப் பாதுகாத்து முறைப்படுத்தவேண்டும். கிடைத்த தகவலின் கோவில்களின் பட்டியல்,
Hindu Temples demolished in Sri Lanka
· In 1984, the Sinhalese who genocidally evicted the Tamils from the Thennamaravadi area in Trincomalee demolished the Murugan Temple on Kandasamy Hill. In 2010 resettled people rebuilt and worshipped. Once again, the temple idols have broken the Vail and banned worship.
· During the period between 1980-1990, the idols of Lord Siva in the Sivan Temple, which is said to have been built by Sage Agathiyar, were demolished in the Ganguveli Agathiyar Sacrifice area in Trincomalee. After 2009, the temple was being renovated, the Sinhalese soldiers and robbers broke the remaining Sivalingam and banned worship.
· Verukal Kalladi Hill Neeliyamman Temple has historical evidence. The temple was destroyed by Sinhala airstrikes in 2006. The resettled people renovated the temple in 2010 and worshipped it. Again Sinhalese, demolished the temple and set up a Buddhist temple. In 2016, the chapel of the temple was also set on fire.
· The Balamurugan Temple in Eechilampatru Ilankaiththurai Kunchithapaatha Hill is one of the oldest temples in Sri Lanka. Troops and Buddhist monks who occupied the area after the 2007 displacement destroyed the temple and set up shrines and monasteries in it to carry out Sinhala migration.
· The Department of Sinhala Archeology demolished the chapel (Annadana Madappalli) Sivalingam on the way to Trincomalee Koneswaram temple on 28-02-2019. It should also be mentioned that the reconstruction work of the Koneswarar temple has been blocked by the Archeological department.
· The Lord Sivan Temple and the Pillaiyar Temple in the Muttur Upparu area were demolished in 1990 and mosques were built and the Islamists settled there. At present Hindu Tamils are unable to live there.
· 2010-09 Statues of Thambalagamam Aathikoneswaram, Kallimedu Muthumari Amman Temple, Pattimedu Chintamani Pillaiyar Temple, Pudukudiyiruppu Oorikkadu Pillaiyar Temple were broken by Sinhalese.
· 2020-12-15 The statue of Muttur Thanganagar Nagapusani Amman temple was stolen by Sinhalese robbers. The statue was later found dumped in a pond in the woods. It is noteworthy that the Archaeological Department created problem by requesting the statue.
· 2014-10-11 Statues of Muttur Palathadichenai Murugan Temple were smashed by Islamists. It is noteworthy that the area is becoming an Islamic settlement.
· People who left the Sampur area in 2006 were resettled again in 2015. Everyone knows that there is a very old and special Bhattirakali temple here. The site was slightly damaged in a 2006 Sinhala Air Force bombing. The temple, which was later under military control, was allowed to worship once in 2010 and 2013 due to public pressure. In 2014, Sinhala forces declared the area as High Security Zone and completely destroyed the temple.
· The temple, which was worshipped by the people in the Muttur Pallikkudiyiruppu area, was destroyed by the Islamists. It is noteworthy that the Tamil people who went there were shocked and cried.
· The Kanniya hot springs have an epic history. The Sinhalese who demolished the Pillaiyar temple and the Sivan temple in the area are trying to set up a Buddhist shrine with the support of Buddhist monks and soldiers and are preventing them from performing rituals in the Kanniya hot springs.
· In 2016, Islamists smashed the Kalasam (inverted pot shape at the top of temple towers) of the Pathini Amman temple tower in Trincomalee.
· On the same day in 2016, the idols of the Koozhavadi Pillaiyar temple were smashed in Nilaveli and thrown in the street. It is noteworthy that the area is under Islamic domination.
· On 2020-03-13, the Nagammal temple in Pandian Aandamalai in the Ammannagar area of Trincomalee was demolished by the Islamists. It is noteworthy that the Islamist land grabbing has taken place since 2009
· The idol of the original Sivan temple at Kumburupity Sembi hill in Trincomalee has been broken and the Buddha statue has been placed there and the worship of Hindus has been banned there.
· The Pillaiyar Temple on the 3rd block hill in the 64th block area of Muttur in Trincomalee was earlier destroyed by the Islamists and the area came under Islamic occupation. Tamils resettled after 2009 rebuilt the temple. The Sinhala forces and Buddhist monks who broke it have erected a huge Buddha statue and set up a Buddhist monastery there. At present, Muslims and Buddhists are claiming the land. Hindus remain silent as they cannot speak anything.
· Trincomalee Sivan temple chariot burnt by Sinhalese robbers. The Sinhalese also cut off the hands of the chariot priests then, cut them down and burned them in the street.
· Kunrathur Murugan Temple, located on the Mattala Hills in the Muttur Aadaikkudaa, has a Chola history. The temple was destroyed by Tsunami and rebuilt and worshipped by people. After the 2006 displacement, the temple area became High Security Zone and the temple was demolished. Then, the resettled people set up a small temple and worshipped. Now again, worship has been banned by the Department of Archeology.
· Batticaloa Kusalananmalai Murugan Temple is an oldest temple. The statue of Lord Murugan was demolished in 2020-06. This is a historic temple located in Karadiyanaaru.
· The oldest Kasilingeswarar Temple is located on the temple island of Batticaloa. It was built and worshipped in the year 398 AD by Queen Ulakanachiyar which is destroyed by Portuguese in 1600. Back in 1980, when the temple was being renovated and worshipped, it was evicted by Sinhala forces during the war and the temple was demolished. Later the settlers built a small temple and built a statue of Ulakanachiyar. The Islamists broke this and established their settlements there and built mosques.
· In 2017-08, the idol of the goddess, which was worshipped under the Pattiruppu bridge, was broken by the Islamists and thrown into the river.
· 2012-01-10 Arayambathi Swami Vivekananda statue was smashed by Islamists in Batticaloa.
· The Islamists who broke the Kali temple in Oddamavadi Batticaloa have set up a fish market there. This is done by well known Muslim politician MLM. Gizbullah. It is noteworthy that he spoke proudly of this on a platform.
· 2016-05 Agora Mariamman Temple demolished in Sammanthurai. This was done by the Islamists in the area. The Pillaiyar temple in Sammanthurai was also demolished in the same month.
· Batticaloa Welikanda Vellimalai Pillaiyar Temple is the oldest temple. Since it is among the Sinhalese it is very distorted and is being prevented from being rebuilt.
· A Pillaiyar temple was demolished by Sinhala forces in Akkaraipattu. The temple is still in a state of disrepair.
· Batticaloa Veerancholai Hindu temple has been completely destroyed by Islamists in the area.
· Hindu religious charter was destroyed on a hill by Sinhala forces in Wellaveli, Batticaloa. At present the hill has been dug up by the Sinhala bosses and the charter is in a state of complete destruction.
· On 2018-09-19 Narasimhar Temple in Arayambathi, Batticaloa was demolished and the idols were broken by the Islamists. It is notable that this area is located on the border of Kaaththankudi Islamic Area.
· On 2015-10-23 the Batticaloa Gurus Monastery Krishnar Temple was broken by the Sinhalese and all the 13 idols there were smashed.
· 2015-10-23 The Ittiyadi Vazhipillaiyar temple in Waganeri was demolished and its Pillaiyar idol was smashed and thrown. This was done by the Sinhalese.
· On 2020-07-24, the Murugan temple on a hilltop in Batticaloa was demolished and the idol inside it was smashed. This was done by the Sinhalese and the Buddhist monks of the Archaeological Department.
· The Kurangumaalai Potta kal malai which is historically significant Hindu symbol completely broken and the stone is sold. This has been done by the Sinhalese.
· In 1992, devotees were massacred inside the Tellippalai Durgai Amman Temple and the temple was demolished.
· 1993/09 The temple was destroyed in the Bukhara air raid on the Nanthaavil Amman temple in Kokuvil.
· After 2009, a Hindu temple in front of the police station in Chavakachcheri was demolished and a huge Buddhist temple was erected there. It was conducted under the supervision of the police.
· A Hindu temple was demolished by Sinhala troops in 1984 in Marawanpulavu, Jaffna. The Sivan temple is said to be ancient.
· Troops break into a Hindu temple in Palaly, Jaffna. The temple is still in a dilapidated condition.
· In 1986, the largest chariot at the Thondaimanaru Selva Sannidhi Temple in Jaffna was set on fire by Sinhala forces. It is said to be the fourth tallest chariot in the world. (1986-04-20) Also the clock tower and its bell were destroyed in the shelling. This is the third tallest bell in the world.
· In 2014, monks placed a statue of Buddha in the sanctum sanctorum inside the Iyanar Temple in Navarkuli, Jaffna.
· On 16-10-1990 during the Kedaragauri fast at Jaffna Kirimalai Nakuleswaram temple, the Sinhala Air Force airstrikes completely destroyed all parts of the temple except the sanctum sanctorum.
· Mavittapuram Kandasamy Temple is a temple of historical significance. A Buddhist shrine has been set up by Sinhala forces near the temple on its premises.
· The Koottathaar Temple, the legendary historical temple of Jaffna, was destroyed by Sinhala forces.
· Many devotees were killed and the temple demolished in 1987 when Sinhala forces opened fire on the Alvai Wevilandai Muthumari Amman temple in Jaffna.
· On 2017-10-17, the Pillaiyar temple located on Mannar Thirukketheecharam Road was demolished and the Pillaiyar idol inside it was completely smashed. This was done by the Islamists.
· On 2019-03-03, Mannar Ketheecharam Temple Sivarathri, Pooja facade was demolished by Christians.
· On 2018-02, the Linkeswarar Temple on Talaimannar Road was vandalized by Islamists and all three idols inside it were vandalized.
· On 2018-02, the statue of Valippillaiyar near the Taladi airstrip was smashed and thrown. The Islamists were involved.
· On 2018-02, the statue of Pillaiyar at the temple at Mannar Lower Kirichandi was broken by the Islamists.
· 2017-11-02 Idols and pictures of Siddhi Vinayagar temple in Mudalikulam area in Vavuniya were smashed by Islamists.
· A Buddhist shrine has been set up by Sinhala soldiers on the outskirts of the Kanakambikaikulam Amman temple in Kilinochchi. Thus, the worship of the temple is in crisis.
· 2016 The Pillaiyar temple in Mullaitivu was demolished and the idols inside it were smashed. This was done by the Sinhalese.
· Mullaitivu Vavattimalai Sivan Temple is 1800 years old. The temple was damaged by Sinhala forces in the past war. The hill is currently being excavated as it was handed over to Sinhala employers for quarrying. As a result, the temple area is in a state of complete destruction and is under the study of the Archaeological Department.
· Mullaitivu Semmalai Niraviyadi Pillaiyar Temple is a historically an important temple. The temple was destroyed by Sinhala forces during the war and was rebuilt by the resettled people. Later it was renamed as Ganadevi Temple and a nearby Buddha Shrine (Vihara) was set up.
As the protests intensified it was again named as Niraviyadi Pillaiyar. But the shrine (Vihara) was expanded. Temple reconstruction work is currently being halted and worship is being restricted. The last few months have seen the cremation of the body of a monk who was brought from the south to be kept in the temple premises near temple’s pond (Theerthakeni). This was done with the protection of the soldiers in defiance of the court order.
· Worship at the Vedukunarimalai Sivan Temple on Mullaitivu has been banned. It is noteworthy that in the past, the temple was broken by Sinhalese forces and Sinhalese and the identities were destroyed.
· There is a Buddha statue along with the Pillaiyar temple at the Nedunkerni junction in Mullaitivu. And there have been crises for temple worship.
· In 1958, the Siri Kadirvelayutha Swami Temple in Panadura was set on fire by Sinhalese gangsters. Also, the priest of the temple was locked inside the temple and burnt alive.
· The Bhattirakali temple in Dambulla was demolished a few months ago and the idol inside was taken away by the Sinhalese.
· The Sinhalese robbers who broke into the Kaliamman temple in Galle have also broken its Kali idol.
· In 1983, when the Theruppillaiyar temple in Colombo was demolished and the idol of Pillaiyar inside it was smashed, Sinhala gangsters shouted 'Tamil Ganapati Deyo'.
· Boomari Amman temple demolished by Sinhalese in Colombo.
· 2020-06-04 Sinhalese who broke the Murugan temple in Valappana area have also broken its idol.
· They have set up a shrine in the premises of the temple at Rithigama and are conducting worship under the name of Varakkavelandu Vihara.
· The legendary Sivan Temple in Polonnaruwa has been destroyed by the Sinhalese in the past and is under the control of the Archaeological Department.
· A Hindu temple statue has been broken by Buddhist monks in Colombo's Grandpass. Those arrested by police were immediately released.
· Inside the Kadirgamak Kandan Temple, worship is performed by placing a Buddha statue beside the idol of Lord Murugan.
· The 150 year old Kali Temple in Dambulla has been completely demolished and a Buddha Vihara has been erected on top of it.
· In 2012, MP Yogeswaran stated that 1477 temples had been demolished in Sri Lanka.
· A 2014 article on the website Keerthu claimed that 2,076 Hindu temples had been destroyed.
· In 2013, Karunanidhi reported that 367 temples had been demolished.
· At the 2012 London conference, Arjunan Sampath of the Hindu People's Party mentioned that Hindu temples had been demolished and Buddhist temples erected.
· In his speech in 2013, Vaiko noted that the Sri Lankan parliament had agreed to the destruction of 1607 temples.
· Kantharodai - Changed the name as Kathurokoduwa
· Delft - Vedi Arasan Kottai - Adopted under Archeology dept & Change the name as Old Budda fort
· In Mathakal Sampil Thurai - Changed as Jambukola Pattina
· KKS - Cement Fatory, Harbour & Hottel area
· Keerimalai (Sadiyama Samathi) - Gust house for President
· Ponalai Thiruvadi Niliyam Beach area - By Naval base
· Allaipeddy - For Miltry Camp
· Velanai & Mandathivu - Beach area
· Vasavilan & Near to Palaly area
· Maveerar Thuyilum illam all over the Districts of North & East
· Pallikuda - Kilinochchi beach area
· Nandhi Kadal area in Mullaithivu
· Mullikulam Village in Mannar
· Uppukulam Sea side Vadi area used for settlment by Muslim Politicians
· Public lands used for Buddist temple in Thirukethesvaram in Mannar
· Samanankulam village name changed as Sabumalpuran & Singala new settelmemts in Vavuniya
· Solar period Temple call Rendam Sivalivam sivan temple in Polanaruwa - Going to destroyed.
12. இந்து மகா சமுத்திரம் அமைதி மண்டலமாகவும் இந்தியாவின் ஆளுமைக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். ஆனால் அங்கே இன்றைக்கு உள்ள சூழல் என்னவென்றால் சீனா இலங்கையை தன் கையில் வைத்துக்கொண்டு இந்திய பெருங்கடலில் தன் வியாபாரத்தை பெருகிகொள்ள, ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, நாடுகளுக்கு வணிகம் செய்ய இந்து மகா சமுத்திரத்தை ஆக்கிரமித்துள்ளது. அதுமட்டுமல்ல ஹம்பன்தொட்டை துறைமுகத்தை 99 ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துள்ளன. சீனாவின் போர்கப்பல்களுக்கு இந்து மகா கடலில் என்ன வேலை, கடல் மார்க்கமாக எரிவாயு பாதைகளை அமைக்கவும், எண்ணெய் ஆராய்ச்சி செய்யவும் திரிகோணமலை, கச்சத்தீவுகள் வரை சீனாவின் ஆதிக்கம் எட்டிவிட்டது, அதுமட்டுமல்லாமல் திரும்பவும் டிகோகர்சியா அமெரிக்க ஏவுதளத்தை அமைத்துவிட்டது, ஜப்பான் இலங்கையின் ஆதரவோடு இந்திய பெருங்கடல் எண்ணெய் வள ஆய்வை நடத்துகிறது, பிரான்ஸும் இந்தியா பெருங்கடலில் ஆதிக்கம் செலுத்த முனைந்துள்ளது, இப்படிப்பட்ட பதற்றமான சூழ்நிலையில் அமைதி மண்டலமாக இருந்த இந்திய பெருங்கடலை மாற்றியதற்கு காரணமாக இருந்தது இலங்கை தான். இது எதிர்காலத்தில் பாதுகாப்பிற்கான சிக்கல்களை உருவாக்கும் என்பதை மத்திய அரசு உணரவேண்டும்.
இந்து மகா சமுத்திரம் குறித்த குறிப்புகள் வருமாறு.
1. இந்திய பெருங்கடலின் பெரும்பகுதியை சீனாவின் தூண்டுதலால் சிங்கள அரசு கைப்பற்றத் துடிக்கிறது. இதுகுறித்தான ஆவணங்கள் தற்போது வெளிவந்துள்ளன. ஐ.நா.வில் சிங்கள அரசு, இந்து மகா சமுத்திரத்தின் பெரும்பகுதியை தன் நிலத்திற்கு சொந்தமென உரிமை கோரி மனு அளித்துள்ளது. இந்திய பெருங்கடலில் இலங்கையின் ஆதிக்கம் தற்போது ஏறத்தாழ 200 மைல்கள் உள்ளதை 350 மைல்களாக அதிகரிக்க வேண்டி ஐ.நா.மன்றத்தில் முறையிட்டுள்ளது. இதை கடுமையாக எதிர்க்க வேண்டிய இந்தியாவோ வாய்மூடி மௌனியாகவே இருந்து வருகிறது. இப்படியான சிக்கலில், ஏதாவதொரு போர் மூளும் அபாயம் ஏற்பட்டால் நேரடியாக கேரளம், தமிழகம்; குறிப்பாக குமரி முனையிலிருந்து இராமேஸ்வரம் நாகைவரை உள்ள கடற்கரைப் பகுதிகளுக்கும், நாட்டின் பாதுகாப்பில் பாதகம் ஏற்படும். இது தமிழகத்தின் வாழ்வாதார, பாதுகாப்பு பிரச்சினை. இலங்கையின் இந்த கோரிக்கை விசாரிக்கப்பட்டு, இறுதித் தீர்ப்புக்காக அடுத்த ஐ.நா அமர்விற்கு தள்ளிப்போட்டுள்ளது. இதே மாதிரியான மனுவை இந்திய அரசும் ஒருமுறை ஐ.நாவில் கொடுத்ததாக தகவல்கள் உள்ளன. சிங்கள தேசம் கைப்பற்றத் துடிப்பது குமரிக்கண்டத்தின் இந்திய பெருங்கடலின் பெரும் நீர்பரப்பையே.
2. இலங்கையில் கடந்த சில மாதங்களாக அதிபர் மைத்ரிபால சிறிசேனே ஆடிய ஆட்டங்களுக்கு அளவில்லை. அதை கண்டித்த உலக நாடுகளுக்கு மத்தியில் இந்தியா அந்த பிரச்சனைகளை கவனித்து வருவதாக கூறியது அதிர்ச்சியைத் தந்தாலும் இந்த விடயத்தில் இந்தியா கமுக்கமாகவே உள்ளது. ஏற்கனவே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டு, இலங்கை ராணுவத்தால் தமிழக மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டும், கைது செய்யப்பட்டும் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்தார்கள். இப்போது இலங்கை, இந்தியாவின் பாதுகாப்புக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தும் வகையில் சீனாவின் துணையுடன் இந்து மகா சமுத்திரத்தில் தனது ஆளுமையை ஏறத்தாழ 350 மைல்களுக்கு விரிவாக்க வேண்டி முறையிட்டுள்ளது. வழக்கமாக சர்வதேச கடல் பகுதியில் ஒரு நாட்டின் ஆளுமையானது 200 மைல் தொலைவுக்கு தான் இயங்க முடியும். இது சர்வதேச சட்டங்களுக்கு விரோதமானது. இந்த நிலை எதற்கு என்றால் இந்தியப் பெருங்கடலில் இந்தியாவை அச்சுறுத்தவே சீனா இலங்கையை பகடைக் காயாக பயன்படுத்துகிறது.
3. அமைதி மண்டலமான இந்து மகா சமுத்திரத்தில் சீனாவின் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
4. ஒரு பக்கத்தில் சீசல்ஸின் டீகோகார்சியா பிரிட்டன் மூலமாக அமெரிக்கா குத்தகைக்கு எடுத்து ராணுவத் தளம் அமைக்க இருக்கிறது. பிரான்சும், ரஷ்யாவும் இந்த கடலில் தனது ஆதிக்கத்தை செலுத்த திட்டங்களை தீட்டியுள்ளது. பெயருக்குத் தான் இந்தியப் பெருங்கடல். நம்முடைய கண்காணிப்பையும் மீறி இலங்கையின் தயவால் அமெரிக்காவும், சீனாவும் வியாபாரத்திற்காகவும் (Silk Road), தனது போர்க்கப்பல்களை எல்லாம் அங்கு நிறுத்தவும் மட்டுமல்லாமல் கடற்படை பயிற்சிகள் நடப்பதாக செய்திகள் வருகின்றன. கச்சத்தீவு வரை சீனாவின் தேசியக் கொடிகள் பறந்தன. தற்போதைய நிலையில் நமது அண்டை நாடுகளான பாகிஸ்தான், மியான்மர், நேபாளம், இலங்கை, வங்காளதேசம் போன்றவற்றுடன் நல்ல ஒருங்கிணைப்பான உறவுகள் இந்தியாவிற்கு இல்லாமல் இருப்பது அனைவரும் அறிந்ததே. மாலத்தீவு மட்டும் இந்தியாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சூழலுக்கேற்றவாறு நடந்து கொள்கிறது.
5. இந்தியப் பெருங்கடல் என்று பெயர் இருந்தாலும், நமது கட்டுப்பாட்டையும் மீறி நாளுக்கு நாள் அயலார்களுடைய அத்துமீறலும் வல்லரசுகளின் வல்லாதிக்கமும் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
6. அமைதி மண்டலமாக இருந்த இந்த கடல் அயல்நாடுகளின் ஆதிக்கத்தால் எதிர்காலத்தில் புவி அரசியலில் பெரும் குழப்பங்களை உருவாக்கும் கடல் மண்டலமாக ஆகிவிடுமோ என்ற ஐயப்பாடு ஏற்படுகிறது.
7. நேரு காலத்தில் வடக்கேயும், வடகிழக்கிலும் சீனாவுடன் போர் நடந்தது. அவர் காலத்திற்குபின் வடமேற்கில் பாகிஸ்தானுடன் போர் நடந்தது. தெற்கே இந்து மகா சமுத்திரத்தில் இம்மாதிரியான நெருக்கடியில் போர் மூளும் என்ற அச்சம் தற்போதுள்ள சூழலில் ஏற்படுகின்றது. அப்படி போர் மூண்டால் கூடங்குளம், மகேந்திரகிரி, தும்பா, ஐஎன்எஸ் கட்டபொம்மன், தூத்துக்குடி ஆலைகள், கல்பாக்கம் வரை தாக்குதல் நடத்தினால் பெரும் துயர விளைவுகள் ஏற்பட்டுவிடலாம். எனவே இதை முன்கூட்டியே தடுக்கக் கூடிய வகையில் இந்து மகா சமுத்திரத்தில் இந்தியாவின் இறையாண்மை காக்கக் கூடிய நிலையில் அயல்நாட்டுடைய அத்துமீறலை கண்காணித்து உரிய நடவடிக்கைள் எடுக்க வேண்டும். இல்லையென்றால் தென் மாநிலங்களுக்கு பெரும் ஆபத்து எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய சூழல் வரலாம்.
8. பண்டித நேரு அவர்கள் தென் தமிழகம் அமைதியான பகுதி என்று நினைத்துதான் இராணுவத் தளவாடங்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளை தென்மாநிலங்களில் அமைத்தார். ஏனெனில் வடமாநிலங்களுக்கு பாகிஸ்தான், சீனா ஆகியவற்றால் போர் பிரச்சனை ஏற்படும் என்று எண்ணினார். ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி இந்து மகா சமுத்திரத்தால் இந்தியாவிற்கு கேடுகள் வரக்கூடிய அபாயங்கள் கண்ணில்படுகின்றன. இத்தகைய ஆபத்துகள் ஏற்படாமல் தற்காத்துக் கொள்வது அவசரமும், அவசியமான பணியாகும். டீகோகார்சியா தீவில் பிரிட்டன், அமெரிக்காவும் ராணுவ தளங்களை அமைக்க வேண்டும் என்று 1969லிருந்து முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் இந்தியா, சோவியத் நாட்டின் ஆதரவுடன் கடுமையாக எதிர்த்ததால் இராணுவ தளங்கள் அமைக்க முடியவில்லை.
9. அப்போது, அமெரிக்கா, தனது ராணுவத் தளத்தை அமைப்பதற்காக, டீகோகார்சியா தீவில் வசித்துக் கொண்டிருந்த 2,000க்கும் மேற்பட்ட மொரீசியஸ் நாட்டினர் வெளியேற்றப்பட்டனர். அந்தத் தீவுக்கு மொரீசியஸ் உரிமை கொண்டாடி வரும் நிலையில், அமெரிக்காவுடனான குத்தகைக் காலம், சமீபத்தில் காலாவதியானது. எனினும், அமெரிக்காவுடனான குத்தகையை, வரும் 2036-ஆம் ஆண்டு வரை பிரிட்டன் புதுப்பித்துள்ளது.இதனால், அதிர்ச்சியடைந்துள்ள மொரீசியஸ் அரசு இந்த விவகாரத்தை சர்வதேச நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்ல முடிவெடுத்துள்ளது. இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்க கொள்ளைக்காரர்களின் நடமாட்டமும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் அரபிக்கடலிலும், வங்கக் கடலிலும் பாதுகாப்பற்ற, மோசமான புவியரசியல் நிலை ஏற்படும். இந்தியப் பெருங்கடல் பிரச்சனையில் இயற்கை துறைமுகமான திரிகோணமலை துறைமுக சிக்கலையும் நாம் கவனித்தாக வேண்டும்.
10. திரிகோணமலை துறைமுகம் தென்கிழக்கு ஆசியாவின் ஒரு கேந்திர மையமாகும். ஆழ்கடல், வர்த்தகம், தொழில் போன்றவைகளுக்கு ஆஸ்திரேலியாவின் சிட்னி துறைமுகம் போல இந்த திரிகோணமலை துறைமுகம் அமைந்துள்ளது. அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா போன்ற நாடுகள் திரிகோணமலை துறைமுக்த்தில் இடம்பெறத் துடிக்கிறது. ஏற்கனவே அமெரிக்கா 1970களில் வாய்ஸ் ஆப் அமெரிக்காவும், எண்ணெய் கிடங்குகளும் அமைக்க, இந்த துறைமுகத்தை கைப்பற்ற கழுகுப் பார்வையில் இருந்தது. ஜப்பானும் இந்த துறைமுகத்தின் மேல் ஒரு கண் வைத்திருந்தது. இதற்கான நிலஅமைப்பை கொண்ட திரிகோணமலை எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும். இந்திரா காந்தி காலத்திலிருந்து திரிகோணமலை துறைமுகத்தையும் நிலஅமைப்பு ரீதியாக கவனித்தும் வருகிறது. இந்த துறைமுகத்துடன் இந்து மகா சமுத்திரத்தின் பாதுகாப்பையும் உள்ளடக்கியதாகும்.
11. இத்தோடு இலங்கையில் உள்ள ஹம்பன்தொட்டா துறைமுக விவகாரத்தையும் இந்தியா கவனிக்க வேண்டிய கடமைகள் உள்ளது. தென் இலங்கையின் ஹம்பன்தோட்டா துறைமுக 85% பங்குகள் சீனாவிற்கு விற்க ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இலங்கை இறுதி யுத்தத்திற்கு பிறகு தற்போது அங்கு செய்யப்பட்டு வரும் கட்டுமான வேலைகள் சீனாவின் முதலீடு அதிகளவில் உள்ளது. ஹம்பன்தோட்டா துறைமுக கட்டுமான பணிகளுக்கு சீனாவின் முதலீடு தொடர்பாக இரு நாடுகளும் பேச்சுவார்த்தை நடத்தியதன் விளைவாக ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் சீன அரசின் துறைமுக வணிக குழுமத்திற்கு அம்பான்தோட்டா துறைமுகத்தின் 70 சதவீத பங்குகளை குத்தகை அடிப்படையில் 99 வருடங்களுக்கு இலங்கை அரசு அளிக்கிறது. இந்த ஒப்பந்தத்தின்படி ஹம்பன்தொட்டா துறைமுகம் சார்ந்த பணிகளில் 1.1 பில்லியன் டாலர்கள் (6,500 கோடிகளை) சீனா முதலீடு செய்கிறது. ஏற்கனவே இந்த துறைமுகத்தில் சீனாவின் ஆதிக்கம் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுமென்ற இந்தியாவின் கவலையை மீறி, இலங்கை துறைமுகம் மற்றும் கப்பல் போக்குவரத்து துறை மந்திரி மற்றும் இலங்கைக்கான சீன தூதர் ஆகியோர் முன்னிலையில் முறைப்படி ஒப்படைக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி துறைமுக பாதுகாப்புக்கு இலங்கை கடற்படையே பொறுப்பு எனவும், அங்கு தளம் அமைக்க எந்த வெளிநாட்டு கடற்படைக்கும் அனுமதி இல்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சீனாவின் நீர்மூழ்கி கப்பல்களும், போர்க்கப்பல்களும் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறது. அதே போல மேலை நாட்டு போர்க்கப்பல்களின் நடமாட்டங்களும் இந்து மகா சமுத்திரத்தில் இருப்பதாக செய்தி வருகிறது.
12. “HSBC World in Forecast 2050” நடத்திய கணிப்பில், 2050இல் ஆசியாவின் 19 நாடுகளே உலகின் பொருளாதாரத்தை ஆளுகை செய்ய இருக்கிறது என்றும், 2017இல் வெளியான Price Water House Coopers (PWC) அறிக்கையில் இந்தியா, சீனா, மலேசியா உள்ளிட்ட நாடுகளே இந்தியப் பெருங்கடலை நோக்கிய பொருளாதாரத்தில் ஆளுகை செலுத்தும் எனவும் சுட்டிக் காட்டப்பட்டிருந்தது. உலகமயமாக்கல் என்ற நிலையில் எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பல்வேறு நாடுகளின் கேந்திரப் பகுதியாகும் பட்சத்தில் பெரும் அபாயங்கள் நேரலாம்.
13. அமெரிக்காவும், இந்தோ-பசிபிக் கட்டுப்பாட்டு மையத்தை மாற்றி இந்தியப் பெருங்கடலை அதோடு 2018இல் இணைத்து இந்தியாவை தன் வலைக்குள் போட்டுக்கொண்டது. இந்தியப் பெருங்கடலில் 13 முக்கிய கேந்திரத் துறைமுகங்கள் உள்ளன. கடல்சார் வணிக போக்குவரத்து, எண்ணெய் உற்பத்தி போன்ற பணிகளுக்கு உலக நாடுகளிடையே இந்த கடலில் போட்டிகள் உள்ளன.
14. தற்போதைய நிலையில் இந்தியா எதிரிகளால் சூழப்பட்டுள்ளது. நமக்கு நம்முடைய அண்டை நாடுகளான பாகிஸ்தான், சீனா, நேபாள், மியான்மார், வங்காள தேசம், இலங்கை என யாருடனும் சுமூகமான நட்புறவு இல்லை. இத்தகைய நிலையில் மாலத்தீவில் மட்டும் சுமூகமான உறவுள்ளது. இந்திய பிரதமர் மோடி மாலத்தீவு வளர்ச்சிக்கு வழங்கிய கடனும் ஒரு காரணமாக இருக்கலாம்.இப்படியான முக்கியத்துவம் வாய்ந்த இந்தியப் பெருங்கடலை இந்தியா கவனிக்காமல் புறக்கணித்தால் என்ன செய்ய…… ?
வல்லரசாக வேண்டும். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் ஆகவேண்டும் என்று நினைக்கும் நாம் நம் நாட்டின் தெற்கெல்லையில் உள்ள நமது கடல் ஆதிக்கத்தை இழக்கலாமா?
இதை எல்லாம் இந்திய அரசு கவனத்தில் கொண்டு இலங்கையில் பேசவும் மட்டுமல்லாமல் ஈழத்தமிழர்களின் உரிமை, இந்தியாவின் பாதுகாப்பை, இந்து மகா கடலில் இந்தியாவின் உரிமையை நிலை நாட்டவேண்டும். வெறும் பயணங்கள், பேச்சுவார்த்தை சம்பிரதாயங்கள் கடந்த நாற்பது ஆண்டுகளாக நடப்பதில் எந்தப் பயனும் இல்லை.
———————————————————-
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை சென்று திரும்பி நான்கு நாட்கள் தான் ஆகிறது. முள்ளிவாய்க்காள் நினைவு தூபி உடைப்புக்கு பின்,இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை கம்யூனிஸ்ட் தொழிற்சங்கங்கள் சந்தித்தப்போது கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்கப்படுவதை இன்று தெளிவில்லாமல் குழப்பமான பதிலைச் சொல்லியுள்ளார். இதற்க்கு காரணம் சீனா.
கடந்த 10 வருடங்களாக கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை இந்தியாவிற்கு வழங்க பேச்சுவார்த்தைகள் நடந்தன. இப்பொழுது அதிபர் கோத்தபயவின் நிலைப்பாடு சந்தேகமாக உள்ளது. இந்த கொழும்பு துறைமுகம் கிழக்கு முனையத்தை அடைய சீனா, அமெரிக்கா, ஜப்பான் நாடுகளும் போட்டியில் நிற்கின்றனர். இந்தியாவிடமிருந்து நிதி உதவியும் பெற்றுக்கொண்டு, இலங்கையில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிக்கொண்டும் நம்மை எளிதாக இலங்கை நினைப்பது வேதனையான விடயம்.
இந்தியாவைக் காட்டி சீனாவிடம் பணம் மட்டுமல்ல, பல உதவிகளையும் இலங்கை பெறுகின்றது. உளப்பூர்வமாக சீனாவிடம் நட்பு கொண்டு நம்மை ஏமாற்றுகின்றது. இதுதான் இலங்கையின் நிலைப்பாடு. இதை இந்திய அரசு உணரவேண்டும்.
Lankan President says Eastern Container Terminal will be a JV between Lanka, India and other parties
President Gotabaya Rajapaksa assures trade unions that the ECT will not be sold or leased out but will be a Joint Venture.
••••
P.k. Balachandran
India's preference is joint venture with the govt entities in a G2G cooperation. But who are the 'other parties'. I guess Chinese projects are new projects so no vested 'trade unionist' interest. What was the reaction of these groups when Southern container terminal was built?
••••
There is opposition to India and now the US also in this regard due to China .....
Japan is also in.The Lanka President did not mention Japan because he was concentrating on the main issue which was to clarify that it is not a sale or a lease but a JV and that SLPA, Adanis plus others are the investors in the JV. Others includes Japan and possibly also some local companies.
••••
இந்திய நாட்டுக்கும், உலகின் பல நாடுகளுக்கும், இடையில் நடைபெறும் கொள்கலன் -கப்பல் மூலமான ஏற்றுமதி, இறக்குமதி பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் வருமானத்தால்தான், கொழும்பு துறைமுகம் இலாப வருமானம் பெறுகிறது.
பல பத்தாண்டுகளாக, பெரிதும் வெளிவராத, உண்மை கதை இதுவாகும். கொழும்பு துறைமுகத்தில் சுமார் 70%க்கு குறையாத கொள்கலன் பரிமாற்றம் இந்திய நாட்டுக்கு போவதும், வருவதும்தான்.
பெரும் கொள்கலன்களை சுமந்து வரும் பெரிய கப்பல்கள் பொதுவாக தமது பயணத்தில் ஒருசில துறைமுகங்களுக்குதான் போகும். எல்லா துறைமுகங்களிலும் நின்று போவது, வர்த்தக ரீதியாக பெரிய கப்பல்களுக்கு சரிபட்டு வராது.
இந்நிலையில் தென் இந்தியாவில் ஆழமான துறைமுகங்கள் இல்லாததால், இந்தியாவுக்கு வரும் பெருந்தொகை கொள்கலன்களை, கொழும்பில் இறக்கி விட்டு, பெரிய கப்பல்கள் தொடர்ந்து பயணிக்கின்றன. அவற்றை பின்னர் சிறிய இந்திய கப்பல்கள் வந்து, ஏற்றிக்கொண்டு இந்தியாவுக்கு செல்கின்றன.
இதுதான் பல ஆண்டுளாக நடக்கின்றது. இதனால்தான் கொழும்பு துறைமுகமே இயங்கிறது . கொழும்பு துறைமுக வருமானத்தால்தான் நாட்டின் ஏனைய துறைமுகங்களும் (காங்கேசன், ஹம்பந்தோட்டை, திருகோணமலை...) செயல் படுகின்றன. பல் ஆயிரக்கணக்கானவர்களுக்கு வேலைவாய்ப்புகளும் கிடைக்கின்றன.
இந்நிலையில் இந்தியாவும் தென்னிந்தியாவில் தங்களுக்கு என்று ஒரு ஆழமான பெரிய கப்பல்கள் வந்து போகக்கூடிய துறைமுகங்களை அமைக்காமல் இலங்கைக்கு இந்தியா நேரு காலத்திலிருந்து விட்டுக்கொடுத்து கொண்டு இருக்கிறது.
இலங்கை அரசு, எப்போதாவது ஒருநாள் தமக்கு முழுமையான ஆதரவு நாடாக மாறும் என்ற எதிர்பார்பில் உள்ள இந்தியாவின் 50 ஆண்டுக்கால “இலவு காத்த கிளி இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை”, ஆகி விட்டது.
புதிய இலங்கையையே தம் உழைப்பால் உருவாக்கிய மலையக தமிழரை, சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் செய்து, நாடு கடத்த இந்தியா, இலங்கையை சந்தோஷப்படுத்தும் ஒரே காரணத்துக்காக, இணங்கியது. இது இலங்கை வாழ் மலையக தமிழருக்கு இந்திய மத்திய அரசு செய்த பெரும் வரலாற்று துரோகமாகும். இதனால், இலங்கையில் தமிழரின், மலையக தமிழரின் ஆக இரு தமிழ் பிரிவினிரின் அரசியல் பலம் குன்றியது. அதை தொடர்ந்து, கச்சத்தீவை, தமிழகத்தின் எதிர்ப்பை கவனத்தில் எடுக்காமலேயே இலங்கைக்கு கொடுத்தது.
விடயம் என்னவென்றால், இவ்வளவு செய்தும், இலங்கை, இந்தியாவுடன் உண்மை நட்பு கொள்ளவில்லை.
இப்போதும், இந்தியாவின் “இலங்கை கொள்கை” காரணமாக, ஒரு பிராந்திய துறைமுகமாக, இந்திய பொருட்களை ஏற்றி இறக்கியே, கொழும்பு துறைமுகம், இந்திய துறைமுகங்களை விட சிறப்பாக செயற்படுகிறது.
இந்நிலையில் இப்படி பொருளாதரத்தில் பலமடங்கு பெரிய நாடான இந்தியாவுடன் சேர்ந்து வளர வேண்டிய வாய்ப்பை இன்னமும் வளர்க்க வழி தேடாமல், மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகள், “பிராந்திய களஞ்சிய துறைமுகம்” என்பதை விட, கொழும்பை “உலக களஞ்சிய துறைமுகமாக” மாற்றும் யோசனையை சீனாவுடன் சேர்ந்து முன்னெடுக்க திட்டம் போடுகிறார்கள். இதை இந்தியா அரசுக்கு இப்பனும் புரிதல் இல்லை.
இலங்கையை தாண்டி தெற்கு இந்து சமுத்திரத்தில் உலகெங்கும் போகும் வணிக கப்பல்களை, “தங்கள் பொருட்களை இங்கே இறக்கி விட்டு போங்கள், நாங்கள் இங்கே இருந்து அவ்வந்த நாடுகளுக்கு அனுப்புகிறோம்” என்று சொல்லும், இலங்கை-சீனா கூட்டு கனவு திட்டம் இதுவாகும்.
அதாவது, இன்றுவரை வருமானம் தேடி தரும் இந்தியாவை புறக்கணித்து விட்டு, இந்த கனவு திட்டத்திற்காக சீனா ஆதரவுடன் கொழும்பு துறைமுகத்தை விரிவாக்கம் செய்யலாம் என்பது இவர்களின் நோக்கம். (இதில் சீனாவின் நோக்கம் என்னவென்பது சீனாவுக்கு மட்டுமே தெரியும்.)
இதற்காக, கொழும்பு துறைமுகத்தின் இன்றைய மிகபெரிய முனையமான South Asian Gateway Terminal (SAGT) என்பதை முழுமையாக சீனாவுக்கு கொடுத்து விட்டு, பக்கத்தில் துறைமுக நகரையும் (Port City) சீனாவின் ஆளுமைக்கு கீழ் கட்டுகிறார்கள். எதிர்காலத்தில் SAGT முனையத்தில் இருந்து துறைமுக நகருக்கு கொள்கலன்களை நேரடியாக இறக்கும் வாய்ப்பு கூட எதிர்காலத்தில் அவசியமானால் ஏற்படலாம்.
SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கப்பட்ட போது, அமைதியாக இருந்த அரசு சார்பு அரசியல் தொழிற்சங்கங்கள், இப்போது, இலங்கை அரசுக்கு 51%, ஜப்பான் நிறுவனத்துக்கு 29%, இந்திய நிறுவனத்துக்கு 20% என்ற கிழக்கு முனைய ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்கிறார்கள்.
முதல் SAGT முனையம் முழுமையாக சீனாவுக்கு கொடுக்கபட்ட போது அமைதியாக இருந்தவர்கள், இப்போது "இந்தியாவுக்கு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையம் விற்கப்படுகிறது" என கூச்சல் எழுப்புகிறார்கள்.
ஆகவே இங்கே அப்பட்டமாக இந்திய எதிர்ப்புதான் தெரியுது. இந்நிலையில், இன்று இந்தியா பொறுமையின் விளிம்பில் இருக்கிறது.
இததனை பத்தாண்டுகளாக கொழும்பு துறைமுகத்துக்கு இலாபம் பெற்றுக்கொடுத்ததையும் மறந்து, சீனாவுடன் இலங்கை உறவாடுவதையும், இந்திய தென் கோடி எல்லைக்கு அண்மையில், கொழும்பு துறைமுகத்தில் சீனாவுக்கு கேந்திர இடம் கொடுக்கப்படுவது இந்தியாவிற்க்கு நல்லது அல்ல.
தமிழகத்தின் தென்கோடியில் குளச்சலில் புது துறைமுகம் ஒன்றை கட்டும் திட்டத்தில் இந்தியா இன்று இருக்கிறது. மேலும் கேரளத்திலும், அந்தமானிலும் புது துறைமுகங்கள் கட்டவும் முனைகிறது.
இவை உருவாகிவிட்டால் இந்திய கப்பல் -கொள்கலன்கள் கொழும்பு வர தேவையில்லை. இது இலங்கைக்கு பெரும் பொருளாதார சரிவை ஏற்படுத்தும்.
அதுமட்டுமல்ல, இலங்கை கனவு காணும் இந்து சமுத்திரத்தில் பயணிக்கும் ஏனைய பெரிய கப்பல்களையும் இந்த இந்திய துறைமுகம் இறக்கி வைத்து, அவ்வந்த நாடுகளுக்கு அனுப்பும். குறிப்பாக சீன எதிர்ப்பு நாடுகளான ஜப்பானின், தென் கிழக்கு ஆசிய நாடுகளின், கொரியாவின் பெரிய கப்பல்களும் கொழும்பை விட, தென்னிந்திய துறைமுகத்தையேயே விரும்பும்.
தூரத்து உறவுகாரனை நம்பி, பக்கத்து வீட்டு அண்ணனை பகைக்கும் மெத்த படித்த இலங்கையின் இனவாத சீனா சார்பு அரசியல்வாதிகளினால் இலங்கை, முட்டாள்தனமான நடக்கிறது.
இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-லிருந்து நேரு காலம் முதல் இன்று அவரை நாம் இப்பிரச்சினையில் இலங்கைக்கு விட்டுக்கொடுத்துக்
கொண்டிருக்கிறோம். நம்மிடமிருந்து வளங்களை, பல திட்டங்களை, நிதி என பெற்றுக்கொண்டு இலங்கை நம்மை ஏமாளியாக நினைக்கிறது. இந்தியா எப்போது இதை உணரும்…?
Date: 18.01.2021
K.S.RadhaKrishnan,
Political activist,
Arbitrator
Advocate
****
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
-

No comments:

Post a Comment

மூடி மறைக்க முடியாத யதார்த்தம்....

  மூடி மறைக்க முடியாத யதார்த்தம்.... கடந்த 5 ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தமிழகத்தில் மிக சிக்கலான சூழ்நிலை நிலவுகிறது. இதை நாம் ஒவ்வொருவரும்...