Friday, May 5, 2023

#பழநியப்பா பிரதர்ஸ் #Palaniappa Brothers

#பழநியப்பா பிரதர்ஸ் 
#palaniappa  brothers
———————————————
இன்று நீண்ட காலத்திற்கு பின்,பழநியப்பா பிரதர்ஸ் நிறுவனத்துக்குச் சென்றபோது அங்கிருந்த ரா.பி.சேதுப்பிள்ளை, பண்டிதமணி மு.கதிரேசஞ்செட்டியார், பழநியப்பா பிரதர்ஸின் நிறுவனர் ஐயன்பெருமாள் கோனார், பரமசிவ ஐயர் ஆகியோரின் பழைய படங்களைப் பார்க்க முடிந்தது. பழைய கால கட்டடம், கார்த்திகேயா என்ற பெயரில் அச்சகம் இன்றும் தொடர்கிறது. பழநியப்பா பிரதர்ஸ் நிறுவனம் நீண்ட காலமாக ஐயன்பெருமாள் கோனாரின் கோனார் நோட்ஸ் வெளியிடுகிறது மற்றும் அவரின் சிறந்த தமிழகராதியைத் தொகுத்து வழங்கியிருக்கிறது. கோனார் நோட்ஸ் மட்டும் ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் வரை அச்சாகிறது என்று அங்கே சென்றபோது கேள்விப்பட்டேன்.



#ஐயம்பெருமாள்_கோனார்

திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த ஐயம்பெருமாள் கோனார் பள்ளிப் பாடநூல்களில் தமிழ்ப் பாடநூல்களுக்கான கையேடுகளை உருவாக்கி வெளியிட்டு வந்தார். இந்த கையேடுகளைக் கோனார் தமிழ் உரை என்ற பெயரில் சென்னை, பழனியப்பா பிரதர்ஸ் நூல் வெளியீட்டு நிறுவனம் இன்றும் தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. பழனியப்பா பிரதர்ஸ் நிறுவனத்தின் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ள கட்டிடத்திற்கு இன்றும் "கோனார் மாளிகை" என்றுதான் பெயர்.
எந்த ஒரு தமிழ் உரை நூலையும் கோனார் உரை என்று பேச்சு வழக்கில் குறிப்பிடுவதுண்டு.







#பழநியப்பா_பிரதர்ஸ் 
#palaniappa_brothers

#கேஎஸ்ஆர்போஸட்
#ksrpost
5-5-2023


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...