Friday, May 31, 2024

இப்படி தரவுகள், என் பணிகளை தலைவர் கலைஞர் அங்கிகரித்து என்னை அனபாக நடத்தினர். கலைஞருக்கு பின் ஸ்டாலினுக்கு இது எல்லாம் புரியல… தெரியல.. #DMKFails #திமுக- KSR

இப்படி தரவுகள், என் பணிகளை தலைவர் கலைஞர் அங்கிகரித்து என்னை அனபாக நடத்தினர். கலைஞருக்கு பின் ஸ்டாலினுக்கு இது எல்லாம் புரியல… தெரியல..

#DMKFails #திமுக
#everyonehighlights
#everyonefollowers
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-5-2024.

(Picture முரசொலி, 25-12-1961)


என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு #விவசாயிகளின்சோகம் தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்- புதூர் அருகே.

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு
#விவசாயிகளின்சோகம்
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம்- புதூர் அருகே..

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
31-5-2024.


*எனது சுவடு பகுதி 59* இந்திரா காந்திக்கு எதிராகத் திரண்ட சக்திகள்- Emergency-KSR

#*எனது சுவடு பகுதி 59* 

இந்திரா காந்திக்கு எதிராகத் திரண்ட சக்திகள்

#dmk, #indiragandhi, #siddharthashankarray, #rajaji, #indiraghandi, #cpi,  #nehru #kamarajar #emergency #dmk, #congress 
youtu.be/Q1sjvpIH_Vw?si…

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-5-2024.

ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்..

எது வேண்டுமானாலும் பேசலாம். குப்பையை கிளறி புழுதி பறக்க வேண்டும். புழுதி பறக்கிற செய்தி பரபரப்பாக மீடியாக்களில் தங்களை பற்றி வந்து கொண்டே இருக்க வேண்டும். ஊடக வெளிச்சம் தனக்கு வரனும் அவ்வளதான்…

சரி தவறு பற்றி கவலை இல்லை. அறங்கள் தர்மங்கள் குறித்து அக்கறையும் இல்லை, ஏதோ பேசப்பட்டு கொண்டு இருக்க வேண்டும் இதுதான் அவர்கள் போர் திட்டம் … குறிக்கோள் …நோக்கம்…..

இப்படியான ‘தொழில்’ மற்றும் தொழில் மாடல்கள் மாறி கொண்டே இருக்கும் 

இன்று இருக்கும் இந்த தொழில் 20 வருடங்களில் இல்லாமல் போகலாம் !!!!

ஆடியிலே காற்றடித்தால் ஆயிரமாய் இலையுதிரும்..

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
 31-5-2024.


*Nothing in life is to be feared, it is only to be understood. Now is the time to understand more, so that we may fear less*.

*Nothing in life is to be feared, it is only to be understood. Now is the time to understand more, so that we may fear less*. When it is obvious that the goals cannot be reached, don't adjust the goals, adjust the action steps.  If you have no confidence in self, you are twice defeated in the race of life, With confidence you have won before you have started...... 

#ksrpost
31-5-2024.


Thursday, May 30, 2024

தியானம்

#*தியானம்*
—————-
தியானம் உண்மையிலே மிக எளிதானது. தியானம் என்பது தன்னை அறியும் மெளன உரையாடல்…அமைதி- tranquility மொழி.

தியானம் என்பது சில நன்மைகளை உணர அல்லது மனதின் உள்ளடக்கத்தை அறியாமல் அதனை ஒப்புக் கொள்ள, அல்லது தியானத்தையே ஒரு முடிவாக நினைத்து ஒரு நபர் மனதை இயக்குதல் அல்லது பயிற்றுவித்தல், அல்லது உணர்வு நிலையைத் தூண்டுதல் மூலம் செய்யப்படும் நடைமுறையாகும்.

உங்கள் தினசரி தியானப் பயிற்சியின் மூலம், நீங்கள் சிறப்பாக கவனம் செலுத்துவது மட்டுமல்லாமல், மன அழுத்த சூழ்நிலைகளை நன்கு நிர்வகிக்கவும் முடியும், அதேபோல உங்கள் மன தைரியத்தின் உற்பத்தித்திறன் உயர்வதையும் காணலாம். சில நிமிட தியானம் கூட மன அழுத்தத்தைக் குறைக்கவும், உள் அமைதியை உணரவும் உதவும். இது தூக்கமின்மைக்கு நன்றாக வேலை செய்கிறது மற்றும் பாரம்பரிய சிகிச்சைகளுக்கு ஒரு நல்ல மாற்றாக இருக்கும்.

தியானத்தின் குறிக்கோள் உங்கள் எண்ணங்களைக் கட்டுப்படுத்துவது அல்ல, அவை உங்களைக் கட்டுப்படுத்த நினைப்பதை தடுப்பது.

நாம்  அதைக் கடினமாக்குகின்றோம் அதனைச் சுற்றி எண்ணங்களால் ஒரு வலை பின்னுகின்றோம். அது இதானென்றும், அதுவல்ல வென்றும்... ஆனால் தியானம் அப்பொருட்களில் ஏதுமில்லை. அது மிகவும் எளிதானதாயிருப்பதனால்  தான் நாம் அதைக் கிரகித்துக் கொள்ளச் சிரமப்படுகின்றோம். நம்முடைய அறிவு குழம்பிக கிடப்பதினால், காலம் என்பதால் வீணடைவதால் , காலத்தின் அடிப்படையிலேயே சுழல்வதனால் தான் இந்த தியானத்தை நாம் சரி வரப் புரிந்து கொள்வதில்லை. அதனால் தான் வருகின்றன நம் தொல்லைகள். ஆனால் தியானமோ,சர்வசாதரணமாக வியக்கத்தக்க எளிமையுடன், நீங்கள் நடக்கும் போதோ, ஜன்னல் வழியாக வெளியே பார்க்கும் போதோ, பிரம்மாண்டமான மலைச் சரிவுகளைக் காணும் போதோ, இயல்பாக வெளிப்படுவது. நாம் ஏன் கண்களில் நீரும் உதட்டில் பொய்ச் சிரிப்புடனும் நம்மை நாமே துன்புறுத்திக் கொள்ளும் மனிதர்களாக இருக்கின்றோம். நீங்கள் மட்டும் இந்த மலைகள் இடையே அல்லது கோப்பினுள்ளே அல்லது நீண்டு கிடக்கும் மணல் சரிவிலே தனியாக நடந்து பார்த்தீர்களானால், அத்தகைய தியான நிலை என்ன என்பதை உணர்வீர்கள்.

தியானம் என்பது தளர்வு, உள் சக்தி அல்லது உயிர் சக்தியை (கி, ரெய்கி, பிராணா, போன்றவை) உருவாக்குதல் மற்றும் இரக்கத்தை வளர்த்துக் கொள்ளுதல்,அன்பு, பொறுமை, தாராள குணம் மற்றும் மன்னிப்பு ஆகியவற்றை ஊக்குவிக்க வடிவமைக்கப்பட்டுள்ள நுட்பங்கள் போன்ற பரந்த பல்வேறு நடைமுறைகளை குறிக்கிறது. குறிப்பாக ஒரு இலட்சிய வடிவம் தியானம் ஒற்றை-குறியிடப்பட்ட செறிவை சிரமமின்றி தொடர்ந்து நோக்குகிறது. இது அதன் பயிற்சியாளரை எந்தவொரு வாழ்க்கை செயல்பாட்டில் ஈடுபடும் போதும் ஒரு அழிக்கமுடியாத நல்வாழ்வு உணர்வை அனுபவிக்க உதவுகிறது.

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone

#தியானம்
#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
30-5-2024.


சேதுக்கால்வாய் #sethusammudracamel

*எனது ‘சேதுக் கால்வாய்- ஒரு பார்வை’ விரிவான மூன்றாம் பதிப்பு வெளி வருகிறது*.

#சேதுக்கால்வாய் 
#sethusammudracamel
#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
30-5-2024.

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone


*When you’re broken, do not fight the pain embrace and accept it. Live it*

*When you’re broken, do not fight the pain embrace and  accept it. Live it*. Don’t rush the process, you don’t have to be positive all the time. It’s perfectly okay to feel sad, angry, annoyed, frustrated, scared, or anxious, having feeling doesn’t make you a negative and  you need to swim in the deep for a while to build your muscles. Learn , keep swimming you will become stronger to grow and it makes you human ....

.. வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான ஒன்று!; உனக்கான நேரம் வரும் வரை பிறர் தரும் வலியைப் பொறுத்துக் கொள்வது

 #MotivationalQuotes | #Quotes | #PTQuotes | #Motivation

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone 

#ksrpost
 30-5-2024.


Wednesday, May 29, 2024

என்நிலைப்பாடு இப்படியாக முகநூலில் தொடங்கியவர்கள் மட்டுமல்ல எனது அத்யந்த நண்பர்கள் என்னிடம் பலமுறை தொலைபேசியில் பேசி உங்களை வஞ்சித்தவர்களைப் பற்றி நீங்களும் மோசமாக விமர்சித்து கடுமையாகத் திட்டி எழுதுங்கள் இன்று ஆதங்கம் தாளாமல கூறுகிறார்கள்.

#என்நிலைப்பாடு

இப்படியாக முகநூலில் தொடங்கியவர்கள் மட்டுமல்ல எனது அத்யந்த நண்பர்கள் என்னிடம் பலமுறை தொலைபேசியில் பேசி உங்களை வஞ்சித்தவர்களைப் பற்றி நீங்களும் மோசமாக விமர்சித்து கடுமையாகத் திட்டி எழுதுங்கள் இன்று ஆதங்கம் தாளாமல கூறுகிறார்கள்.

தன் தகுதிக்கும் கீழே இறங்கி விமர்சிப்பவர்களை
நான் எப்போதும் பொருட்படுத்த மாட்டேன். நான் யார் மனதையும் புண்படுத்தி எதையும் சாதிக்க மாட்டேன். 
தடித்த கடினமான சொற்களால் விமர்சனம் செய்யவும் மாட்டேன்.

ஒருவர் பேசுகிற சொற்கள் மூலம் அவர் தன் தகுதியைத் தான் வெளிப்படுத்துகிறார். ஆகவே முகநூலிலோ யூ ட்யூபிலோ பத்திரிகைகளிலோ என் கருத்தை எழுதும் போது அதன் கண்ணியத்தை கருதி அது விமர்சன பூர்வமாக இருந்தாலும் கூட மரியாதைக்குரிய வார்த்தைகள் மூலமாகத்தான் நான் என் கருத்தை வெளிப்படுத்துவேன். மானங்கெட்ட தனமாக அநாகரிகமாக பேசுபவர்கள் எதற்காக அப்படி பேசுகிறார்கள் என்று எனக்கு தெரியும் ! என்னைப் பற்றி பலரும் இந்த அரசியல் வாழ்க்கையில் அசிங்கமாக பலவாறாகப் பேசியிருக்கிறார்கள் அதற்கான ஆதாரங்களைக் கூட நான் வைத்துள்ளேன். ஆனால் என்றும் என் எழுத்தில் பேச்சில்  நாகரிகத்தைக் 
 மட்டுமே கடைப்பிடிப்பது
என் வளர்ப்பு முறை. என் அன்பு நண்பர்களுக்கு சொல்லிக் கொள்வதும் இதுதான்.

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone 
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட
29-5-2024.


திரள்மணி கதிர்கள் வீசி திசை ஆளும் ஆதவன்….கன்னியாகுமரி.

திரள்மணி கதிர்கள் வீசி திசை ஆளும் ஆதவன்….


குமரித்தாய்..

1940s :: Rock In Kanyakumari Where Swami Vivekananda Meditated For 3 Days ( 25th December to 27 December-1892)

முக்கடல் சங்கமமாம்  நீலத் திரைக் கடல் அலைகள் பொங்கும் இந்து மகா கடலின் ஊராம் கன்னியாகுமரியில் எடுத்த 1940 இன் காட்சிகள்!

ஒருபுறம்  அக்காலத்தில் இங்கே வந்து விவேகானந்தர் தியானம் செய்த பாறை அதன் மேல் அவர் பெயராலே அமைந்துள்ள நினைவு மண்டபம். இன்னொரு புறம் தலைவர் கலைஞர் அவர்கள் அய்யன் திருவள்ளுவர் சிலையை வான் உயர கம்பீரமாக 2000 இல் அமைத்துள்ள காட்சி. .

இங்கே இணைக்கப்பட்டிருக்கிற புகைப்படம் 1940ல் என் தந்தை யார் தனது காமிராவில் கன்னியாகுமரி கடற்கரையைக் கருப்பு வெள்ளையாகப்  பிடித்து சேகரித்து வைத்திருந்த ஒன்று.

பாருக்குள்ளே நல்ல நாடு என்று பாரதி தமிழ்நாட்டை பாடினான் யாமறிந்த மொழிகளிலே தமிழைப் போல் இனிதாவது எங்கனம் காணேன் என்றான். விவேகானந்தரும் நூறு தமிழ்நாட்டு இளைஞர்களை என்னிடம் கொடுங்கள் நாட்டை வேறு வழியில் நான் மாற்றி காட்டுகிறேன் என்று சொல்லி தமிழ்நாட்டின் மீது அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.

அந்த வகையில் இந்தியாவைப் பொறுத்து தமிழகம் ஒரு தனித்த வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் தனி அடையாளமாகவும் இன்றுவரை இருந்து வருவதை  யாரும் மறுக்க முடியாது. இங்கு பிரதமர் மோடி இங்கு வருகிறார் என்பது செய்தி.

https://youtu.be/qlaxmXlBaGM?si=Cd83rWo6LLDwSobc

#kanyakumari #கன்னியாகுமரி

#கேஎஸ்ஆர்போஸ்ட
#ksrpost
29-5-2024.

#highlightseveryone
#everyonehighlights
#everyonefollowers
#highlight #life #likeforlikes
#everyone

𝗦𝗶𝗹𝗲𝗻𝘁 𝗩𝗮𝗹𝗹𝗲𝘆 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗣𝗮𝗿𝗸

🔴 𝗦𝗶𝗹𝗲𝗻𝘁 𝗩𝗮𝗹𝗹𝗲𝘆 𝗡𝗮𝘁𝗶𝗼𝗻𝗮𝗹 𝗣𝗮𝗿𝗸

🔸𝑺𝒊𝒍𝒆𝒏𝒕 𝑽𝒂𝒍𝒍𝒆𝒚 𝑵𝒂𝒕𝒊𝒐𝒏𝒂𝒍 𝑷𝒂𝒓𝒌 𝒊𝒔 𝒍𝒐𝒄𝒂𝒕𝒆𝒅 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝑵𝒊𝒍𝒈𝒊𝒓𝒊 𝑯𝒊𝒍𝒍𝒔 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝑴𝒂𝒍𝒂𝒑𝒑𝒖𝒓𝒂𝒎 𝒅𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕, 𝑲𝒆𝒓𝒂𝒍𝒂, 𝒂𝒏𝒅 𝑵𝒊𝒍𝒈𝒊𝒓𝒊𝒔 𝒅𝒊𝒔𝒕𝒓𝒊𝒄𝒕 𝒐𝒇 𝑻𝒂𝒎𝒊𝒍 𝑵𝒂𝒅𝒖. 𝑻𝒉𝒆 𝒑𝒂𝒓𝒌 𝒍𝒊𝒆𝒔 𝒘𝒊𝒕𝒉𝒊𝒏 𝒕𝒉𝒆 𝑵𝒊𝒍𝒈𝒊𝒓𝒊 𝑩𝒊𝒐𝒔𝒑𝒉𝒆𝒓𝒆 𝑹𝒆𝒔𝒆𝒓𝒗𝒆.

🔸𝑩𝒉𝒂𝒗𝒂𝒏𝒊 𝑹𝒊𝒗𝒆𝒓 (𝒂 𝒕𝒓𝒊𝒃𝒖𝒕𝒂𝒓𝒚 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝑲𝒂𝒗𝒆𝒓𝒊 𝑹𝒊𝒗𝒆𝒓) 𝒂𝒏𝒅 𝑲𝒖𝒏𝒕𝒉𝒊𝒑𝒖𝒛𝒉𝒂 𝑹𝒊𝒗𝒆𝒓 (𝒂 𝒕𝒓𝒊𝒃𝒖𝒕𝒂𝒓𝒚 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝑩𝒉𝒂𝒓𝒂𝒕𝒉𝒂𝒑𝒑𝒖𝒛𝒉𝒂 𝑹𝒊𝒗𝒆𝒓) 𝒐𝒓𝒊𝒈𝒊𝒏𝒂𝒕𝒆 𝒊𝒏 𝒕𝒉𝒆 𝒗𝒊𝒄𝒊𝒏𝒊𝒕𝒚 𝒐𝒇 𝒕𝒉𝒆 𝒑𝒂𝒓𝒌. 𝑻𝒉𝒆 𝑲𝒂𝒅𝒂𝒍𝒖𝒏𝒅𝒊 𝑹𝒊𝒗𝒆𝒓 𝒂𝒍𝒔𝒐 𝒐𝒓𝒊𝒈𝒊𝒏𝒂𝒕𝒆𝒔 𝒊𝒏 𝒕𝒉𝒊𝒔 𝒑𝒂𝒓𝒌.

🔸𝑽𝒆𝒈𝒆𝒕𝒂𝒕𝒊𝒐𝒏: 𝑹𝒂𝒊𝒏𝒇𝒐𝒓𝒆𝒔𝒕𝒔, 𝒕𝒓𝒐𝒑𝒊𝒄𝒂𝒍 𝒎𝒐𝒊𝒔𝒕 𝒆𝒗𝒆𝒓𝒈𝒓𝒆𝒆𝒏 𝒇𝒐𝒓𝒆𝒔𝒕 𝒂𝒏𝒅 𝒔𝒉𝒐𝒍𝒂 𝒇𝒐𝒓𝒆𝒔𝒕𝒔.

🔸𝑴𝒂𝒋𝒐𝒓 𝑭𝒂𝒖𝒏𝒂: 𝑰𝒕 𝒊𝒔 𝒉𝒐𝒎𝒆 𝒕𝒐 𝒕𝒉𝒆 𝒍𝒂𝒓𝒈𝒆𝒔𝒕 𝒑𝒐𝒑𝒖𝒍𝒂𝒕𝒊𝒐𝒏 𝒐𝒇 𝒍𝒊𝒐𝒏-𝒕𝒂𝒊𝒍𝒆𝒅 𝒎𝒂𝒄𝒂𝒒𝒖𝒆𝒔 (𝑬𝑵). 𝑶𝒕𝒉𝒆𝒓 𝒎𝒂𝒋𝒐𝒓 𝒇𝒂𝒖𝒏𝒂: 𝑴𝒂𝒍𝒂𝒃𝒂𝒓 𝒈𝒊𝒂𝒏𝒕 𝒔𝒒𝒖𝒊𝒓𝒓𝒆𝒍, 𝑵𝒊𝒍𝒈𝒊𝒓𝒊 𝒕𝒂𝒉𝒓, 𝑻𝒓𝒂𝒗𝒂𝒏𝒄𝒐𝒓𝒆 𝒇𝒍𝒚𝒊𝒏𝒈 𝒔𝒒𝒖𝒊𝒓𝒓𝒆𝒍.

🔸𝑴𝒂𝒋𝒐𝒓 𝑨𝒗𝒊𝒇𝒂𝒖𝒏𝒂: 𝑵𝒊𝒍𝒈𝒊𝒓𝒊 𝒘𝒐𝒐𝒅-𝒑𝒊𝒈𝒆𝒐𝒏, 𝑴𝒂𝒍𝒂𝒃𝒂𝒓 𝒈𝒓𝒆𝒚 𝒉𝒐𝒓𝒏𝒃𝒊𝒍𝒍, 𝑵𝒊𝒍𝒈𝒊𝒓𝒊 𝒇𝒍𝒚𝒄𝒂𝒕𝒄𝒉𝒆𝒓.

🔸𝑻𝒉𝒓𝒆𝒂𝒕𝒔: 𝑳𝒊𝒗𝒆𝒔𝒕𝒐𝒄𝒌 𝒈𝒓𝒂𝒛𝒊𝒏𝒈 𝒂𝒏𝒅 𝒇𝒐𝒓𝒆𝒔𝒕 𝒇𝒊𝒓𝒆𝒔, 𝒊𝒍𝒍𝒆𝒈𝒂𝒍 𝒑𝒍𝒂𝒏𝒕𝒂𝒕𝒊𝒐𝒏𝒔 𝒐𝒇 𝒄𝒂𝒏𝒏𝒂𝒃𝒊𝒔.

#ksrpost
29-5-2024.

#everyone #likeforlikes #life #highlight #everyonehighlights #highlightseveryone #everyonefollowers #everyoneactive


*Success isn’t always about greatness. It's about confidence and consistency*

*Success isn't always about greatness. It's about confidence and consistency*. Confidence is nothing more than believing in yourself about doing the things that you once didn't believe you could do. Consistent hard work leads to success and greatness is, the harder you work for something the greater you’ll feel when you achieve it. what you'll discover will be yourself and its will be wonderful... 

#ksrpost
29-5-2024.


Tuesday, May 28, 2024

உளி விழும் போது வலின்னு நினைச்ச எந்த கல்லும் சிலை ஆகமுடியாது.

உளி விழும் போது வலின்னு நினைச்ச எந்த கல்லும் சிலை ஆகமுடியாது. 
———————————————————-
நாம் புழங்குகிற ரூபாய் நோட்டு பலவகையில் புதியதாகவும் அழுக்காகவும் மாறிப் பலரின் கையிலும் பயணிக்கிறது. அந்த ரூபாய் நோட்டு நல்லதற்கும் லஞ்ச லாவண்யத்திற்கு பிச்சைக்கும் விபச்சாரத்திற்கும் கூடப்
பயன்படுகிறது. காரணங்கள் எதுவாக இருந்தாலும் பணத்தின் மதிப்பு மட்டும் மாறுவதில்லை.

தங்கமும் அப்படித்தான்! நெருப்பிலிட்டு உருக்கி அடிக்க அடிக்க மின்னுகிறது. கல்லில் உளியை வைத்து அடித்துச் செதுக்க செதுக்கத்தான் சிற்பமும் உருவாகிறது. இப்படி உளி விழும் போது வலின்னு நினைச்ச எந்த கல்லும் சிலை ஆகமுடியாது. ஏறு ஆழ உழும் போது கஷ்டம்னு நினைச்ச எந்த நிலமும் விளைவிக்க முடியாது,

அதுபோல அடிக்க அடிக்க சிரமங்களும் கஷ்டங்களும் வேதனைகளும் வலியும் வந்தால் அதை தாங்கி நிற்பவர் சிறப்பான மனிதராக ஆகிறார். அப்படி உருவாகி வருபவர்களை தான் ஒரு ஆளுமையாக மாண்பு உடையவராக நாம் கருத வேண்டும்.

அப்படி இல்லாமல் குறுக்கு வழியில் 
ஆடம்பரம் பண்ணிக்கொண்டு காரில் ஏறி வந்து பதவிகளையும் வாய்ப்புகளையும் பெற்றுக் கொள்பவர்கள் உண்மையான ஆளுமைகளாக ஏற்க முடியாது.

வாழ்க்கையில் அடிபட்டு அதை ஏற்று வாழ்ந்தவர்கள் எளிதாக நினைத்து விடாதீர்கள். பந்து அடிக்க அடிக்க உயரே எழும்புவதைப் போல அவர்கள் மற்றவரிடம் அதிகமான மதிப்பையும் மரியாதையும் பெறுவார்கள் என்பதுதான் எக்காலத்திற்குமான உண்மை.

எளிதாகச் சென்று ஓர் இடத்தில் போய் அமர்ந்து கொள்பவர்கள் வீரியமானவர்கள் அல்ல. அவர்களது பேச்சும் சிரிப்பும் ஏதோ அதிர்ஷ்டம் கிடைத்தவர்கள் போலத் தான் அற்பமாக இருக்கும். அவர்கள் சோம்பேறித்தனமான பலவீனமான ஆட்கள்.

வாழ்வில் ஆழ்ந்த அனுபவங்கள் பட்டு பல்வேறு சாதனைகள்  வழியாகப் பேர் பெற்று நிமிர்ந்தவர்களே பலமானவர்கள். அவர்கள் உச்சியில் இருந்தாலும் பள்ளத்தாக்கில் இருந்தாலும் வலிமையானவர்கள். (உம்) காந்தி, நேத்தாஜி, பகத்சிங், வஉசி,ஜேபி என பலர் உண்டு.

அவர்களைக் குறைவாக எடை போட்டு
விடக்கூடாது…
இன்னும் பலர் நம்மிடை வாழ்கின்றனர்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
28-5-2024.


#முல்லைபெரியாறு #MullaiPeriyar

#*முல்லைபெரியாறு சிக்கல்*….. 
*சிபிஎம் - திமுக சேட்டன்களின் மன சீக நட்புகள் வேறு*
———————————

கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லைப் பெரியாறு அணை 1886 இல் கட்டப்பட்டது. அப்போதைய திருவிதாங்கூர் சமஸ்தானத்திடம் போட்ட ஒப்பந்தத்தின்படி 999 வருடங்களுக்கு  தமிழகத்திற்கு அந்த அணை குத்தகைக்குத் தரப்பட்டு அதை ப் பராமரிக்கும் பணியும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் இன்றைய கேரளா அரசு முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கீழாக 1200 அடிக்குக்கீழ் புதிய அணையை கட்டவும் முல்லைப் பெரியாறு அணையை இடிக்கவும் திட்டமிட்டு வந்து கொண்டிருப்பது நாம் அறிந்தது தான். அதற்கான வழக்குகளும் தாவாக்களும் தொடர்ந்து நடந்து கொண்டு இருக்கிறது.

எத்தனையோ நிபுணர் குழுக்கள் நேரில் வந்து இடுக்கி யின் முல்லைப் பெரியாறு அணையை பரிசோதித்து அது மிகவும் உறுதியாக இருக்கிறது என்று சொன்ன பின்பும் 142 அடிகளுக்கு மேல் நீரை தேக்க முடியாது என்றும் 
தேக்கினால் அணை தகர்ந்து விடும் என்றும் அவர்கள் பொய்யான ஒரு பரப்புரையை எப்போதும் மேற்கொண்டு கேரள ஆட்சியாளர்கள் வருகிறார்கள்.

எதிர்கால நலன்களின் பேரில் ஏறக்குறைய அப்பகுதி விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்த நீண்ட காலத்திட்ட மதிப்பீட்டின்படி கட்டப்பட்ட அந்த அணை ஏறக்குறைய 15 ஆயிரத்துக்கு மேலான ஹெக்டேர்களுக்கு நீரை வழங்கி விவசாயத்தை மேம்பட செய்கிறது என்பதை இன்றைய கேரள அரசியல்வாதிகள் வசதியாக மறந்து விடுகிறார்கள்.

தற்போது புதிதாகக் கட்டப்பட இருப்பதாகக் கேரள அரசு  மனு கொடுத்துள்ள புள்ளி விவரங்களின்படி புதிய அணையும் இடிக்கப் பட இருப்பதாகச் சொல்லும்  பழைய அணையும் அமைந்துள்ள மலைப்பகுதி  மத்திய அரசின் புலிகள் சரணாலயமாகவும் இருப்பதால் புதிய அணை கட்டுவதற்கோ பழைய அணையை இடிப்பதற்கோ அவர்கள் மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும்

இவை ஒருபுறம் இருக்க 2014ல் உச்ச நீதிமன்றம் அணையை கட்டுவதற்கும் இடிப்பதற்கும் தமிழகத்திற்கும் கேரளாவுக்கும் இடையே ஒப்புதல்கள் நிகழ வேண்டும் என்று சட்டம் இயற்றி இருக்கிறது.

இப்படியான நிலையில் கேரள அரசு புதிய அணையை கட்டவும் இடிக்கவும் மனு போட்டிருப்பது எந்த விதத்தில் நியாயமாக இருக்கும்! போக தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் இந்த விஷயத்தில் என்ன விதமாக முடிவெடுக்கிறார்கள்!

இந்திய கூட்டணியில் மாநில உரிமைகளுக்கு அதிகம் குரல் கொடுக்கும் இவர்கள் தங்களது பிரச்சனைகளை நல்ல புரிந்துணர்வுடன் அண்டை மாநிலங்களோடு ஏற்படுத்திக் கொள்ள தங்களுக்குள்ளே மறுக்கிறார்கள்.  அப்படியானால் அது என்ன விதமாக ஆன கூட்டணி? என்ன விதமான ஒற்றுமை? சிபிஎம் - திமுக சேட்டன்களின் மன சீக நட்புகள் வேறு

இந்த அணை கட்டப்பட்டு பழைய அணை இடிக்கப்பட்டாலும் கூட வழக்கமான நீர் தமிழகத்திற்கு தரப்படும் என்று சொல்லுகிறார்களே இதுவரையும் வழக்கமான நீர் வந்து கொண்டு தான் இருக்கிறது இதில் இவர்களுக்கு என்ன பிரச்சனை? கேரளாவின் நதிகளில் எவ்வளவு நீர் வீணாகக் கடலில் கலக்கிறது. பல நாடுகளில் நதிநீரை முறையாகப் பயன்படுத்துகிறார்கள் அந்த புதிய தொழில்நுட்பங்கள் எல்லாம் வேண்டியது இல்லையா? இன்னொரு பக்கம் சிலந்தி அணை…

நான் தொடர்ந்து குறிப்பிட்டு வந்திருப்பது போல இம்மாதிரி விவகாரங்களை பொதுநல வழக்காக ஆக்கி அதில் ஈடுபட்டவன் என்கிற முறையில் சொல்லிக் கொள்வதெல்லாம்
எப்போதுமே தாமதமாக எல்லா விவகாரகத்திலும் தலையிடும் தமிழக அரசு இந்த விஷயத்தில் முந்திக் கொள்ள வேண்டும் என்று தான் ஞாபகமூட்டுகிறேன். ஏனென்றால் இது பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்களின் வாழ்வாதார பிரச்சனை! இது வேறு விடியல் திமுக மாடல் ஆட்சி.⁉️.      

#முல்லைபெரியாறு
#MullaiPeriyar
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
28-5-2024.


*Maturity is the way you maintain two powerful tools, i.e silence and smile

*Maturity is the way you maintain two powerful tools, i.e silence and smile*.Smile is the way to solve many problems and silence is the way to avoid many problems. Maturity doesn't come with age, it's deeper than age. It's the way you see and understand things.The way you consider and  communicate with others.The way you react.The things you value and entertain.The way you represent yourself. Everyone grows old, but all aren't matured. Maintain silence and smile  be matured...

#ksrpost
28-5-2024.


Monday, May 27, 2024

#FamilyPolitics | #வாரிசால்வந்தசோதனைகள்சாதனைகள்

*வானத்தின் மீதே பறந்தாலும்
காக்கை குயிலாய்மாறாதுகோட்டையின் மீதே நின்றாலும்
*ஏழையின் பெருமை உயராது*

*அதிகாரம் நிரந்தரமில்லை.. ஆணவத்துல ஆடுறவன் எல்லாம் ஓடி ஒளிந்து உக்காரும் காலம் வரும்*..! 

#FamilyPolitics | #வாரிசால்வந்தசோதனைகள்சாதனைகள் | Times of India #சமயம்Tv 
youtu.be/1mUVnDtTCwI?si…

இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை; அடிமையே தகுதி.

#*தன்னிலை செய்தி*…..
————————————
என்னை பொருத்தவரையில் அரசியல் என்பது எனது சுவாசம். இயங்கி கொண்டு இறுதிவரை நீடிக்கும் அறத்தின் பாதை. 52 ஆண்டுகளாக இந்த அரசியல்ப்பயணத்தில் கால் கொண்டுள்ளேன்.

எனது அரசியல் பார்வை என்பது முற்றிலும் வேறானது. பகுத்தறிவு மற்றும் தன்மானம் சார்ந்தது. யாராக இருந்தாலும் மரியாதையாக அணுகுவதும் அவருடன் நடத்தையில் நாகரிகத்தை கடைபிடிப்பதும் தான் எனது பார்வை! மாறாக  அடிமையாக பதவிக்கு யாரின் கால்களிலோ விழுவது எனது நிலைப்பாடு அல்ல!

இதைச் சிலர் பரிகாசமாக கூட என்னை பார்க்கலாம். எதையும் அனுசரித்துப் போகாமல் வீணாகிப் போனவராய் இருக்கிறாரே என்று கூட நினைக்கலாம். அதனால் ஒன்றும் குடி முழுகிப் போகாது பரவாயில்லை! 

இந்த உலகமயமாக்கில், எனது பார்வையில் தமிழ் தேசியம் விசால இந்தியா என்கிற பார்வை உண்டு. நான் தமிழன் அல்ல தெலுங்கன் என்று சிலர் கூறுவார்கள். தமிழ் பேசும் தெலுங்கன் தான். இதை நான் மறுக்கவும் இல்லை மறைக்கவும் இல்லை.!

ஆனால் மற்றவர்களைப் போல பிழையாகவோ தவறாகவோ நான் எப்போதும் நடந்து கொண்டதில்லை.
எனக்கான கொள்கைகள் அதன் நெறிமுறைகள் வேறு. இக்காலத்து அரசியலுக்கு இவர் ஒத்துவர மாட்டார் என்று பிறர் நினைப்பது என்னை எப்படிப் பாதிக்கும்? அது என் விருப்பம் எனது தேர்வு. அதுதான் என் பலமும் பலவீனமும். இதைக்  குறை சொல்பவர்கள் சொல்லிக் கொண்டே இருக்கட்டும்!

இப்படியான என் நிலைப்பாட்டில் யாருக்கும் எந்த பாதகமும் இல்லை பல நன்மைகள் பிறருக்குதான் விளைந்திருக்கிறது. பலரையும் நான் தூக்கிச் சுமந்து இருக்கிறேன் என்னால் உதவி பெற்றவர்கள் குறிப்பாக முக்கியமான சிரமமான நேரங்களில் என்னை பயன்படுத்திக் கொண்டவர்களிடம் நான் ஒன்றும் எதிர்பார்க்கவில்லை . என்னை யாரு ம் தூக்கி சுமக்க வேண்டாம்.ஆனால் 
அதற்கான நன்றி காட்டுகிற முகபாவனையாவது அவர்களுக்கு
இருந்தால் போதும் என்று தான் விரும்புகிறேன். 

இன்றைய அரசியலைப் பொறுத்தவரை ஜனநாயகம் குடியரசு என்கிற மாண்புகள் அறவே இல்லை. ஓட்டளிக்க பணம் வாங்கிக்கொண்டு விற்கும் மக்களுக்கும் இதைச் சிந்திக்க நேரமில்லை. மது போதையிலும் வெவ்வேறு வகையான போதைப் பொருட்களை உபயோகிக்கும் கேளிக்கைகளிலும் மனம் திரும்பிக் கிடக்கும் இந்தச் சமுதாய சீரழிவிற்குள் எனது அரசியல் தெளிவாகவே இருக்க விரும்புகிறது! இந்த போக்குகள் ஒரு சமூக அடிப்படையை ஒரு போதும் மெய்மையாக உருவாக்காது.

எல்லா இடங்களிலும் பொருளாதாரமே மேலோங்கி இருக்கிறது. பணமே மூல மந்திரம் என்று தன் குடும்ப வாரிசு ரத்த பாசங்களோடு இணைந்து குலவிக் அரசியல் களத்தில் நெறியற்ற கொட்டமடித்துக் கொண்டிருக்கும் இந்தச் சூழலில் சட்டம் நீதி போன்றவை அனைத்தும் கடைச்சரகாகி ஆகிவிட்டது.

இப்படியான சூழலில் சம நீதி என்பது கனவாகி போய்விட்டது. இந்த சூழலைத்தான் அனுசரிக்க வேண்டுமா இல்லை என்றால் அவர்கள் ஒவ்வாதவர்களாக ஆகிவிடுகிறார்களா?

உண்மையும் உழைப்பும் புறக்கணிக்கப்படும் போது நன்மைக்கும் நீதிக்கும் நாட்டில் இடம் இல்லை. வேறு என்ன சொல்ல? இங்கு  இன்றைய அரசியல் சதுரங்கத்தில் தகுதியே தடை;
அடிமையே தகுதி.

உண்மை நிலைத்திருக்கும் 
அ ளவுக்குத்தான் பொய்யும் நிலைத்திருக்க முடிகிறது. அதாவது  இரண்டுக்கும் கிட்டத்தட்ட  சம ஆயுள்.

உண்மையில் மனித சமுதாயத்திற்கு பாதுகாப்பு எதில் அடங்கி இருக்கிறது?

தன்னை உணர்வதிலும், தன் வன்முறை குணத்தை கவனித்து கைவிடுவதிலும். ஏனெனில் ஒவ்வொரு மனிதனுகுள்ளும் ஒரு போராளி ஒளிந்து இருக்கிறான். இது ஜே.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் உரையில் வருவது…..

நீங்கள் போலியான ஏமாற்றி பிழையான வெற்றிக்கு ஆசைப்பட்டால் தோல்வியடைவீர்கள். நீங்கள் ஒருபோதும் இம் மாதிரி வெற்றியை விரும்பவில்லை என்றால் உங்களை யாரும் தோல்வியடையச் செய்ய முடியாது.

என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கிறதோ அது நல்லது. அலட்டிக் கொள்ளாதீர்கள்.

இது இப்படியே இருக்கப் போவதில்லை. இதுவும் கூட மாறும். ஆனால் அதை மாற்றுவதற்கு நீங்கள் எந்த முயற்சியும் செய்யாதீர்கள். வாழ்க்கையிடமே அதை விட்டு விடுங்கள்.

இதைத்தான் நான் நம்பிக்கை என்கிறேன். வாழ்க்கை உங்களை விட புத்திசாலி. உங்களுடைய வளர்ச்சிக்குத் தேவையான எல்லா வாய்ப்புகளையும் அது தரும்.

கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
27-5-2024.


*Without rain, nothing grows. Learn to embrace the storms in your life*

*Without rain, nothing grows. Learn to embrace the storms in your life*.  After all this is over you're going to come out stronger than ever before  You're about to overcome something you've been dealing with. Your mind and heart will soon be at peace again.What you have been through does not define you. What defines you is that you fought through incredibly tough times and made it out on top. Be patient. Everything will be okay. Keep going... 

#ksrpost 
27-5-2024.


Sunday, May 26, 2024

*கடந்த 15 ஆண்டுகளில் எனது முகநூல் பக்கம் முகநூல்ச் சுவர் profile-wall மற்றும் பக்கம் -page இதுவரை மூன்று முறை முடக்கப்பட்டது*.

*கடந்த 15 ஆண்டுகளில் எனது முகநூல் பக்கம் முகநூல்ச் சுவர் profile-wall மற்றும் பக்கம் -page  இதுவரை மூன்று முறை முடக்கப்பட்டது*.

இப்போது புதிதாக  இது, நான்காவது முறையாக முகநூல் பக்கத்தைத் தொடங்கி இருக்கிறேன். இதற்கு முதலில் பக்கம் page இல் ஒரு லட்சம் நண்பர்கள் இணைந்திருந்தார்கள்! எனது முகநூல் சுவற்றில் 15 ஆயிரம் மேல்  நண்பர்கள்  follows  தொடர்ந்து இருந்தனர்!

எதற்கு முடக்கம் என்றால் ஈழப் பிரச்னை பற்றி நான் முகப்பக்கத்தில பதிவிட்டதுதான் காரணம். இது நான்காவது முறையாகவும் நடக்கிறது.

இதுதான் முகநூலின் அழகா, லட்சணமா என்று தெரியவில்லை.

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
26-5-2024.


*எங்கே விழுந்தாலும் எழுந்தாக வேண்டும் என திடம் இருந்தாக வேண்டுமெனும் நினைப்பிருந்தால்*...!

*ஆண்டவன் அறிய நெஞ்சில்* 
*ஒரு துளி வஞ்சம்* 
*இல்லை* 
*அவனன்றி எனக்கு வேறு ஆறுதல் இல்லை*…..

*குடை அன்று மறந்தது என்னை*
*வெயிலுக்கு ஒதுங்க* 
*மரத்தடி இருந்தது  எனக்கு*… 
*இன்று நான் யாரோ*⁉️
*நலம் பெறுக*….



#ksrpost
26-5-2024.

கனவாகிப் போன கச்சதீவு

*இன்றைய (26-5-2025) தினத்தந்தியில்*
‘*கனவாகிப் போன கச்ச தீவு’ நூல் மதிப்புரை*….

#கனவாகிப்போனகச்சதீவு


*Truth is life only guarantees you, "limited time" and you are going face many challenges*

*Truth is life only guarantees you, "limited time" and you are going face many challenges*. Believe if you are trying your best every day,  trust that you have the strength to move forward. Understand life is tough, but you will always be tougher, believe that no matter how hard it gets, you will always find a way to get through it. So live everyday with gratitude, spend as much time with the people you love and care for and   start appreciating your life, start appreciating yourself, start loving life and life will love you back....

#ksrpost
26-5-2024.


Saturday, May 25, 2024

அவமானம்..

#*

*! 
அவமானம் தாங்கப் பழகு…

"வாழ்க்கையில் உயர்வும் தாழ்வும் வெகு சகஜம். நல்லதொரு உயர்வின் மகிமையை அறிந்து கொள்ள தோல்வி என்கிற அனுபவத்தையும் பெறுவது நல்லது. 

வெற்றி என்றதும் பிறரால் அவமானப்படுத்துவது என்பதும் வரும். 

இது மிகப்பெரிய பாடங்களை நமக்கு சொல்லிக் கொடுத்துவிடும்.

அடுத்தவரின் உண்மையான முகம் நாம் அவமானப்படும்போது தெரியும்.

யார் நண்பர்,
யார் நண்பர் அல்லாதார்,
யார் நல்லவர், 
யார் கெட்டவர், அவருடைய உண்மையான முகம் எது? 
என்ற விஷயங்களெல்லாம் மிகத் தெள்ளத்தெளிவாகத்  தெரியும்.

நமக்கு ஏற்பட்ட நிறைய அவமானப்படுத்துதலுக்கு நமது வெற்றிகளே காரணமாக இருக்கும். 

வெற்றிகளை பொறுக்க முடியாதவர்களே நம்மை வெகு வேகமாக அவமானப்படுத்த முயற்சிப்பது தெரியவரும்.

நம்மை அவமானப்படுத்த செயல்படும் பலபேர் இவைகளை மிக ரகசியமாகவே செய்கிறார்கள். 

வேறு யாரையாவது முன்னிறுத்தி பின்னால் நின்று இயக்குகிறார்கள்.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் நம்மோடு வாழ்ந்த மனிதர்கள் நம்முடைய உயர்வு கண்டு பொறாமைப் படத்தொடங்குகிறார்கள்

அநேகமாக அவர்கள் பொறாமை மிகுதியால் அவமானப் படுத்துகிறார்கள். 

எப்போதும் வாழ்க்கையில் நம்மை சுற்றி இருப்பவர்கள் தான் எதிரிகள். எதிரிகள் என்று எவரும் தனியாக உருவாவது இல்லை.

என்கூட பம்பாயில் பிளாட்பாரத்துல வியாபாரம் பண்ணிட்டு இன்னிக்கு ஒரு கடைக்கு முதலாளியாயிட்டா விட்டுருவோமா? உதைப்போம். 

உன்னப் போய் முதலாளின்னு  கூபிடுறாங்களே  எனக்கு வயிறு எரியுது என்று சண்டை போட்ட மனிதர்களை நான் அறிவேன்.

கடைக்கு முதலாளி ஆனவனுடைய உழைப்பும் கம்பீரமான காத்திருத்தலும் பிளாட்பாரத்தில் விவரம் கெட்டத்தனமாய் அலைகிறவனுக்குப் புரியவில்லை.

நன்றாக வளர்ந்த பிறகும் ஒரு வம்பு சண்டைக்காரனுடன் மல்லுக்கு நிற்க வேண்டியது இருக்கிறது. 

அதை வேடிக்கை பார்க்கும் நாலு பேருக்கு பதில் சொல்ல வேண்டியது இருக்கிறது.

ஆனால் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜம். 

இம்மாதிரியான மனிதர்களை நாம் எதிர்கொள்ளத்தான் வேண்டும். ஆனால் இந்த அவமானத்திற்கு பயந்து விடக் கூடாது.

என்ன செய்ய வேண்டும் ?

கோபப்படவேண்டும் நிதானமாகக் கோபப்பட வேண்டும்.

பாரதி ரௌத்திரம் பழகு என்று சொல்கிறார். 

ரௌத்திரம் என்ற வட சொல்லுக்கு வெஞ்சினம் என்று பொருள் கொள்ளலாம்.

வெறும் சினம் அல்ல. மிகக் கடுமையான சினம். 

காரியமாற்றும் சினம். பதிலுக்கு என்ன செய்வது என்று திட்டமிட்டு அவமானம் செய்தலை எதிர்க்கும் சினம்.

அவமானம் நண்பர்களால் ஏற்பட்டாலும் உறவுகளால் ஏற்பட்டாலும் அந்நியர்களால் ஏற்பட்டாலும் நெல்முனையளவும் கவலை கொள்ளாதீர்கள்.

எதனால் இது ? 
எங்கு தவறு ? வேண்டுமென்றே செய்யப்படுகிறதா? அல்லது விவரமில்லாத விஷயமா ? என்பதை யோசித்து மிக வேகமாக ஒரு முடிவு எடுங்கள்.

எதிர்க்க முடியாத சூழலில் எதிர்ப்பைக் காட்ட முடியாத நிலையில் கூட உங்களுக்கு கடும் அவமானம் ஏற்படும். 

அப்போது அவமானத்தை நன்கு அனுபவியுங்கள். 

அவமானப்படுத்துதலை  புரிந்து கொண்டு அதற்கு அழாது கண்ணீர்விட்டு கதறாது உள்ளே இறுக்கிக் கொள்ளுங்கள். 

மா கவி பாரதியின் வரிகளை நினைவில் கொள்ளுங்கள். 

"பாதகம் செய்பவரைக் கண்டால்  நீ பயம் கொள்ளலாகாது பாப்பா;
மோதி மிதித்துவிடு பாப்பா"

அவருக்கு எதிரே வெற்றி பெற்று சிரித்து சிலாகித்து நில்லுங்கள். அவர் தானாகக்  குன்றிப்  போவார்.

அவருக்கு முன் ஜெயித்து நலமா ? என்று விசாரியுங்கள் அவர் மனம் உடனே செத்துப் போகும்.

பழி  வாங்குதலில் மிகச் சிறந்த விஷயம் நீங்கள் திரும்ப  திரும்ப வெற்றி காண்பதே.

வாழ்வில் வெற்றி வேண்டுமெனில் அவமானப்படுங்கள்.

அவமானத்திற்கு அஞ்சாதீர்கள்.  அவமானம் ஒரு  உரம், கடுமையான உரம், காரமான உரம்.

"அதனாலென்ன உரம் தானே...?"..

தனிமனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு போருக்கும் பொறுப்பாளிகள் - நமது சொந்த வாழ்க்கையின் ஆளுமைத்தன்மை, தேசியவாதம் கொள்கைகள், சுயநலம், கடவுள்கள், கருத்து சேகரிப்புகள், இலட்சியங்கள் காரணமாக; இவை அனைத்தும் நம்மை பிரிக்கின்றன.

நாம் மாறாவிட்டால், தனிமனிதர்களான நீங்களும் நானும் மாறாவிட்டால், இந்த உலகம் மாறாது. 

இதுதான் உண்மை - நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும்.

அனைவரனது வாழ்விலும் காயங்கள் இருக்கும் அந்த காயத்துடனும் சிரிப்பது அவ்வளவு எளிதல்ல..

காயங்களுடன் சிரிக்க ஒரு சிலரால் தான் முடிகின்றது..

அப்படி சிரிக்க பழகிக் கொண்டால் எந்த காயமும் அவ்வளவு பெரிதல்ல..
நாம் கடந்து சென்ற அனைத்தும் வாழ்க்கைக்கான பாதைகள் அல்ல..

கடந்து வந்ததில் கற்றுக் கொண்ட பாடங்கள் தான் வாழ்க்கைக்கான பாதைகள்.ஒருவர் உங்களுடன் பேச நேரம் இல்லை என்றால் நம்பாதீர்கள்..

அவர்களின் முன்னுரிமை பட்டியலில் நீங்கள் இல்லை என்பதே அர்த்தம்..

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
25-5-2024.

1952 Elections

1)Ballot Boxes Used In Loksabha and State Assembly Elections From 1952 Till 1996.
Stage and year wise….

2)

 in New Delhi 

( Election Museum , Delhi )

#ksrpost
25-5-2024.


*‘கனவாகிப் போன கச்ச தீவு’

*இன்றைய (25-5-2024) இந்து* *தமிழ் திசை யில்*….
*‘கனவாகிப் போன கச்ச தீவு’ புத்தக மதிப்பரை*.




#கனவாகிப்போனகச்சதீவு

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
25-5-2024.

Life is never going to be perfect. You will not get everything you want in life.

Life is never going to be perfect. You will not get everything you want in life. Remember, just because you had a bad past it doesn't mean that you have a bad life.The truth is, you will never live a positive life if you are always thinking negatively. Be grateful for everything that you have and thank yourself for everything that you've achieved so far. Be strong, be patient, don't aim for a perfect life, aim for a happy life and believe your good days are coming... 

#ksrpost
25-5-2024.


Friday, May 24, 2024

*சவுக்கு சங்கர் வழக்கு - நீதிபதிக்கு அழுத்தமா*? *யார் அந்த அதிகாரமிக்க நபர்* ? *பிறிதொரு நீதிபதியின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்*.

*சவுக்கு சங்கர் வழக்கு - நீதிபதிக்கு அழுத்தமா*? 

*யார் அந்த அதிகாரமிக்க நபர்* ? 

*பிறிதொரு நீதிபதியின் நிலையைச் சிந்தித்துப் பாருங்கள்*.

கடந்த காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் ஞாபகம் இருக்குமேயானால் நீதிபதியான ஜி.ஆர். சுவாமிநாதன் அவர்களுக்கு எதிராக மதுரை உயர் நீதி மன்ற கிளையில்  தன் மீதுதான வழக்கின் போது சவுக்கு சங்கர் 
எதிர்வினை ஆற்றியது எல்லோருககும் தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

இன்றைய சவுக்கு சங்கர் வழக்கில் அதே நீதிபதியான ஜி. ஆர். சுவாமிநாதன் அவர்கள் சவுக்கு சங்கரை விடுதலை செய்துள்ளார்.

இன்னா செய்தாரை 
ஒறுத்தல் அவர் நாண நன்னயம் செய்துவிடல்.

#சவுக்குசங்கர்
#Sowkusankar


#காங்கிரஸ்காரர்களுக்கு ஒருதகவல் #அன்றையகாங்கிரஸ் இதழ்கள்

#காங்கிரஸ்காரர்களுக்கு ஒருதகவல்
#அன்றையகாங்கிரஸ் இதழ்கள்




இன்றுள்ள காங்கிரஸ் காரர்களுக்கு தெரியுமோ தெரியாதோ; 

கோவை மத்திய முன்னள் அமைச்சர் பிரபுவுடைய தந்தை பி ஆர் ராமகிருஷ்ணன் நடத்திய ‘நவ இந்தியா’ 

சென்னை(மயிலை கல்லுக்காரன் தெரு)- மதுரையில் (குருவிகாரன் சாலை)வெளிவந்த செய்தி பழ நெடுமாறனின் 
‘செய்தி’ . பின் நாட்களில் சின்னக்குத்தூசி அழைக்கப்பட்ட திருவாரூர் தியாகராஜன் இதில் பணி செய்தார்.

திராவிட இதழ் என துவக்கப்பட்ட வேலூர் நாராயணன் ஆசிரியராய் இருந்த ‘அலை ஓசை’ இவ்விதழ் 1992 வரை வெளிவந்தது. இவ்விதழில் ஜெயகாந்தன், நா. பார்த்தசாரதி, கண்ணதாசன், பழ. நெடுமாறன், முரசொலி அடியார், வலம்புரி ஜான், விருதுநகர் சீனிவாசன், அறந்தை நாராயணன் எனப் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் எழுதியுள்ளனர்.







ஜெயகாந்தன் போன்றவர்களின் எழுத்துகளை எடுத்து வந்த திருவிகாவின் ‘நவசக்தி’

கவிஞர் கண்ணதாசனின் ‘தென்றல்’

கனிமொழி விடயத்தை முதலில் வெளிச்சத்துக்கு கொண்டு வந்த அண்ணாச்சி விருதுநகர் எம்கேடிஎஸ்யின் ‘ஜவகரிஸ்ட்’
ஜெயக்கொடி, ஜெயபேரிகை என பல காங்கிரஸ் ஏடுகள் வந்தன.

இந்த  பத்திரிகைகள் காங்கிரஸிற்கு வலிமை ஊட்டவும் செழுமையாக அவற்றை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கவும் இயங்கிக் கொண்டிருந்த போது அவற்றில் நான் எனது சில கட்டுரைகளையும் எழுதி உள்ளேன்.
அவற்றை எல்லாம் இன்றுள்ள காங்கிரஸ் காரர்கள் அறியாதது மட்டுமல்ல! தேர்தல் கூட்டணியில் தங்களது சுகவாழ்வை அனுபவிக்க முயன்ற  பிற்போக்குத் தன்மை கொண்ட எந்த அறமும் அற்ற நில உடமையாளர்களின் அதிகாரமாகத் தான் அவை நீடித்தன. 
இதன் அடிப்படையில் காங்கிரஸ் திமுக என்கிற அதிகாரக் கூட்டணியைப் புரிந்து கொள்ள வேண்டும்.

#காங்கிரஸ்_இதழ்கள்
#TamilNaduCongressCommittee
#congressdailypapers_tamilnadu

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-5-2024.

#*FAMILY DYNASTICPOLITICS* # *வாரிசு அரசியல்*

#*FAMILY
DYNASTICPOLITICS*
# *வாரிசு அரசியல்* 
••••••
நியுயார்க் டைம்ஸ் ஆங்கில பத்திரிகைச் செய்திகளை இணையத்தில் வாசித்த போது அதில் உலக மற்றும் இந்திய அரசியல் நிலைமைகள் குறித்த அவதானங்களை
வெளியிட்டு இருந்தார்கள்.

பெரும்பாலும் இந்திய அரசியல் தலைவர்கள் தங்களது வாரிசுகளை தங்களின் குடும்பத்தின் 
பொருட்டோ சில நம்பிக்கைகளின் பொருட்டோ தாங்கள் பதவிவில் இருக்கும் போதே அவர்களை முன்னிலைக்கு கொண்டு வந்து நிறுத்துகிறார்கள்.

அது தகுதி அடிப்படையில் இருந்தால் கூட பரவாயில்லை . உண்மையில் அது வாரிசு அடிப்படையிலேயே தான் குடும்பச் சுயநலமாய் நிகழ்கிறது. என்பது ஒருபுறம் இருக்க 

இப்படியான வாரிசு அரசியல் களால் இந்திய அரசியலின் ஸ்திரத்தன்மை பாதிக்கப்படுகிறது என்பதோடு இந்திய அரசியல் கட்டமைப்புக்கு பலவகையான கோளாறுகள் ஏற்பட்டு விடுகின்றன. 
ஏனெனில் இந்த வாரிசு அரசர்கள் ஏதோ 
தாங்களுக்கு வாழ கிடைத்த தன்னுடைய சுயநலத்திற்கு கிடைத்த பதவி என்றும் அதிர்ஷ்டம் என்றும்
 அதைக் கருதுகிறார்கள். அதன் அடியில் மனம் போன போக்கில் சில ஏக போக முடிவுகளை எடுத்து அதற்கான சட்டம் அரசு போன்றவற்றையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அவர்களை முன்னெடுத்துக்கொண்டு வந்த அவர்களது தந்தைமார்களின் வாழ்க்கையில் பெரும் சிக்கலை உண்டாக்குகிறது.(உ-ம் தேவ கவுடா,  மு.க. அழகிரி என பலர் ……)
இது பொதுவாக வெளியில் தெரிவதில்லை. 

சில நேரம் இந்த வாரிசுகள் தங்கள் தந்தைகளையே வீட்டு சிறையில் வைத்து தான் சொன்னபடி தான் கேட்க வேண்டும் என்கிற அதிகாரச் சிக்கலையும் உண்டாக்குகிறார்கள். .நான் பெயரைச் சொல்ல விரும்பவில்லை உத்தரப்பிரதேசத்தில் 
இப்படித்தான் நடந்தது.

காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதுதான் அரசியல் நிலைமை.

இப்படியான குடும்ப சிக்கல்கள் கிடையே இந்தியா முழுக்க 

 இருக்கக்கூடிய மாநிலங்களில்
 உள்ள தலைவர்கள் எப்படி நாட்டை வழி நடத்துவார்கள். இத்தகைய வாரிசு அரசியல் போக்குகள் தான் இந்தியாவின் பெரும் அரசியல் நோயாக சீரழிவாக மாறிக்கொண்டிருக்கிறது.

அத்தனை குடும்ப அரசியலும் மிக அவலமாக இப்போது வெளிவந்து கொண்டிருக்கிறது.  அந்த குடும்பங்களில் மகிழ்ச்சி இல்லை..

 
*FAMILY & DYNASTIC POLITICS*
The patriarchs of most political parties in India routinely anoint their sons and daughters as their successors. While this creates some displeasure and even rebellion among the rank and file even eroding the party's cadre strength in the short term, such acts also upset the unity in their houses. There was even a case of a son locking up his 'party leader' father in a room after becoming his successor so he has not even his father look over his shoulder. Sibling rivalry also puts parents in a fix who wring their hands helplessly.

#FAMILY_DYNASTICPOLITICS*
#வாரிசுஅரசியல்
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-5-2024.


*Working hard becomes a habit, a serious kind of fun*. Don't wai

*Working hard becomes a habit, a serious kind of fun*. Don't wait. The time will never be just right. Do the difficult things while they are easy and do the great things while they are small. A journey of a thousand miles must begin with a single step. You get self- satisfaction from pushing yourself to the limit, knowing that all the effort is going to pay off. Understand you have to take care of yourself, in the end you've got to be ur own hero, because everybody's busy trying to save THEMSELVES... 

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
24-5-2024


Thursday, May 23, 2024

என் மண்…. என் பூமி….. #கரிசல்காடு

என் மண்….
என் பூமி…..
#கரிசல்காடு


*தொடரும் வாரிசு அரசியல் பரிதாபங்கள்*.

*தொடரும் வாரிசு அரசியல் பரிதாபங்கள்*.

*தேவகவுடாவின்* பேரன் பிரஜ்வல் எச் டி ரேவண்ணா  பெண்ண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளின் பேரில் அவருக்கு தேவகவுடா ஊடகங்களில் பகிரங்கமாக எச்சரிக்கை விடுகிறார்.

குறிப்பிட்ட நாட்களுக்குள் பிரஜ்வல் ரேவண்ணா வந்து சேராவிட்டால் குடும்பப் பாத்தியதை
களில் ஒருபோதும் இனித் தலையிட முடியாது என்றும் குடும்பத்திற்குள் அவருக்கு எதிராகப் பகையை உருவாக்குவேன்
 என்றும் கோபமாகக் குறிப்பிட்டுள்ளார். முதல் அமைச்சராகவும் ஒருமுறை பிரதமராகவும் இருந்த அவருடைய குடும்ப நிலை இதுதான்.

இதே போலத்தான் கலைஞர் ஒரு முறை மு க அழகிரியைத் தனது மகனே இல்லை என்று சொன்னார்! 

அக்காலத்தில் பிரதமராக இருந்த நேரு கூட தனது மருமகனாகிய பெரோஸ் காந்தியை எனக்கு அவர் மருமகனே அல்ல! இந்திரா காந்தி மட்டுமே ஒரே ஒரு மகள் என்று சொல்லி  தனது மருமகன் மீதான வெறுப்பை வெளிப்படுத்தினார். 

சமாஜ்வாதி கட்சியிலிருந்து உ.பி. முதல்வர் அகிலேஷ் யாதவை 6 ஆண்டுகளுக்கு நீக்கம் செய்து அக்கட்சி தலைவரும், அகிலேஷின் தந்தையுமான முலாயம் சிங் உத்தரவிட்டிருந்த நிலையில், பதிலுக்கு எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தினார் அகிலேஷ் யாதவ் குடும்பம் ஆதிக்க அரசியல் தராது.

காஷ்மீர் முதல்வர் போட்டியில் பரூக் மற்றும் அவரின் மகன் உமரோடு பிரச்சனை…. என பல நிகழ்வுகள் உண்டு.

இப்படியான அரசியல் பிரபலங்களின்  குடும்பங்களில் ஏற்பட்டு வரும் மதிப்பீட்டுச் சரிவு ஒருபுறம் இருக்க
தங்களது வாரிசுகளின் கட்டுப்பாடற்ற செயல்களின் மூலம் அடையும் வேதனை மறுபுறமாக இருக்கிறது. 
அவர்களைத் தொடர்ந்து தங்களது வாரிசுகளாக அரசியலில் ஈடுபடுத்திச் செல்லம் கொடுத்து வந்ததன் வினையை இன்று அனுபவிக்கிறார்கள். 

இவைதான் இன்றைய இந்திய நாட்டின் அரசியல் நிலைமைகள்!
கொள்கை கோட்பாடு மக்கள் நலம் அதற்கான திட்டங்கள் என்பதையெல்லாம் குடும்பம் என்று வருகிற போது  தள்ளி வைத்துவிட்டு 
குடும்பத் தவறுகளை மூடி மறைத்துக் கொண்டு வருவது அரசியலில் மிகுந்த அபத்தமாக இருக்கிறது. 

தொடரும் வாரிசு அரசியல் பரிதாபங்கள்.

#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
23-5-2024,


Rajmata Gayatri Devi of Jaipur

H.H. the late Rajmata Gayatri Devi of Jaipur, was renowned for her beauty, grace, strength, and wisdom. As a powerful leader, advocate of progressivism, and patron of the arts, she left a lasting impact on society.




Today, on her Birth Anniversary, we pay tribute to her enduring legacy. She is roll model to others

#வெள்ளந்தி மன்சன்…..

#வெள்ளந்தி 

மன்சன்…..

வாழ்க்கையில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றதும் ‘எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறாய்’ என்கிறீர்கள். மன்னிக்கவும், என் வெற்றி -நிம்மதி! மகிழ்ச்சி!! வாசிப்பு- புரிதல்-அனுபவம!!! #கேஎஸ்ஆர்

வாழ்க்கையில் வெற்றிபெற்றுக் கொண்டிருக்கிறேன் என்றதும் ‘எவ்வளவு பணம் சேர்த்து வைத்திருக்கிறாய்’ என்கிறீர்கள். மன்னிக்கவும், 
என் வெற்றி -நிம்மதி! மகிழ்ச்சி!!
வாசிப்பு- புரிதல்-அனுபவம!!!

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
23-5-2024


The Viennese legal philosopher Alexander Somek interestingly argues that artistic depictions -- giving us the goodness in wicked schemes and the sinister side of righteousness -- suggest the one-right answer approach "is obnoxious owing to its moralistic embrace of banality."

The Viennese legal philosopher Alexander Somek interestingly argues that artistic depictions -- giving us the goodness in wicked schemes and the sinister side of righteousness -- suggest the one-right answer approach "is obnoxious owing to its moralistic embrace of banality."

*To have a peaceful living, stay away from negative people, they have a problem for every solution*.

*To have a peaceful living, stay away from negative people, they have a problem for every solution*. Learning to ignore negative people is one of the great path to inner peace. Have the maturity to know that sometimes silence is more peaceful and powerful than having the last word. And remain focused on your goals.  Even if you have a moment of difficulty, do not give up. Always believe that you will make it and things will get better and no problem or challenge will stop you. Everything you deserve  will come to you...

#ksrpost
23-5-2024.


Wednesday, May 22, 2024

ப சிதம்பரம் அவர்கள் மு க ஸ்டாலினை காமராஜரோடு ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இதைக் கூறுகிறார் என்று அவர் தான் சொல்ல வேண்டும்.! காமராஜர் காலத்தில் அவரது செயல்பாடுகளை அறியாத வகையில் வளர்ந்து வந்த ஒருபோதும் எந்த தொடர்பும் இல்லாத ஸ்டாலின் எப்படி அவருக்கு சமமாக முடியும்.




இவரே கூட எக்காலத்திலும் காமராஜர் உடன் அரசியல் பயணம் மேற்கொண்டவர் அல்ல. இவர் கூட இருந்தவர்கள் எல்லாம் கம்யூனிச இயக்கத்தை சேர்ந்த ராம் மற்றும் மறைந்த மைதிலி சிவராமன் போன்றவர்கள் தான்.  Radical என்ற ஏட்டை காங்கிரஸ் எதிராக நடத்தினார்கள். பின் சி. சுப்பிரமணியம் மூலம் இந்திரா காங்கிரஸ் கடசியில் சேர்ந்தார்.

காமராஜரை பற்றி ஒன்றும் தெரியாத இவர் ஸ்டாலினை அவருடன் ஒப்பிடுகிறார். ப சிதம்பரம் இந்திரா காங்கிரசில் தான் இருந்தார் இந்திரா காங்கிரசின் இளைஞர் அணியில் இருந்து  வந்தவர். காமராஜர் மறைவுக்கு பின் ஸ்தாபன காங்கிரஸ்  இந்திரா காங்கிரஸ் இணைந்தது.

பிஜேபி இந்த தேர்தலில் சிவகங்கையில் கார்த்திக் சிதம்பரத்திற்கும் தூத்துக்குடியில் கனிமொழிக்கும் மற்றும் டி ஆர் பாலு மூவரையும் எதிர்க்கத்
 தகுதி உள்ள வேட்பாளர்களை ஏன் அங்கே  நிறுத்தவில்லை. சிதம்பரம் சிவகங்கையில் தன் மகனை நிறுத்தி இருக்கிறார்.

அதனால்தான் அவர் இப்படி எல்லாம் பேசுகிறார். பிஜேபியை எதிர்த்து பேசுகிறார். அவர் அமித்ஷாவின் கற்பனா வாதத் தன்மையில் இப்படி எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்.

இதெல்லாம் பிஜேபிக்கு வேண்டும்தான். மேற்கண்ட மூவருக்கும் எதிரான தகுதி வாய்ந்த வேட்பாளர்களை போடாததால் வந்த விளைவு. அவர் இப்படி ஸ்டாலினைப் பாராட்டிப் பேசிக் கொண்டிருப்பதற்கெல்லாம் பிஜேபி தான் பதில் சொல்ல வேண்டும்

காலச் சுமைதாங்கி போலே மார்பில் எனைத்தாங்கி, வீழும் கண்ணீர் துடைப்பாய் அதில் என் விம்மல் தணியுமடி, ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் வந்துமென்ன வேரெனநீ இருந்தாய் அதில் நான் வீழ்ந்து விடாதிருந்தேன்-

1958 களில் நான் சிறுவனாய் இருந்த காலத்தில் குளத்து நீருக்குள் நின்றிருக்கும்படி
யான இந்த ஓவியத்தை வரைந்தவர் டிராயிங் மாஸ்டர் இன்னாசி முத்து .
அவர் குருவிகுளம் கழக உயர்நிலைப் பள்ளியில் ( Board high School)ஓவிய ஆசிரியராக இருந்தார். அக்காலத்தில் மழை அதிகம் பெய்து  எங்களூர் குளம் நிரம்பி இருந்தது. அக்குளத்தில் நான் பின்புறம் கையைக் கட்டி நின்றிருந்த போது எனது மூத்த அண்ணன் பேராசிரியர் முனைவர் டாக்டர் எஸ். பாலகிருஷ்ணன் அவர்கள் ஒருபுகைப் படத்தை எடுத்தார்.

அந்த புகைப்படத்தை வைத்து டிராயிங் மாஸ்டர் இன்னாசி முத்து அவர்கள் வரைந்திருந்த இந்த ஓவியத்தை நான் கிராமத்திற்கு போனபோது சமீபத்தில் தான் பார்த்தேன். இந்த ஓவியம் வரைந்து ஏறக்குறைய 66 ஆண்டுகள் ஆகி இருக்கிறது.

இந்த ஓவியத்தை பார்த்ததும் எனது பால்யகால நினைவுகள் அனைத்தும் மீண்டும் மேலோங்கி வந்தன. எத்தனை உறவினர்கள் சுற்றுப்புறங்கள் அவர்கள் என்னை பராமரித்த விதங்கள் நான் சக வயது சிறுவர்களோடு விளையாடிய குளங்கள் தெருக்கள் யாவும் கண்முன்னே காட்சியாக ஓடியது. காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடி விடுகிறது. நமது சிறு பிராயத்தை அது எவ்வாறு மெல்ல மெல்ல கடத்தி முதிர்ச்சிஅடைய வைத்து எத்தனையோ பேரை சந்திக்க வைத்து எத்தனையோ வாழ்வு அனுபவங்களை கொடுத்து 
வாழ்வெனும் பேராற்றில் கரைத்தும் விடுகிறது. 

அந்த  இளம்பருவக் கனவுகளில்
எத்தனை லட்சியங்கள் கோட்பாடுகள் அறிவு வாதங்கள் சம்பவங்கள் உள்ளே புகுந்து ஒருவரை  முழு மனிதனாக்க முயல்கிறது என்று எண்ணிப் பார்க்கும்போது இந்த அரசியல் இழுத்துக் கொண்டு போன கடந்த காலங்களை என்ன செய்வது என்றே தெரியவில்லை.

மீண்டும் இந்த ஓவியத்தை பார்க்கும்போது நான மட்டில்லா மகிழ்ச்சி அடைகிறேன். அதில் வெகுளித்தனமும் நம்பிக்கைகளும் மாறாத இளம் எண்ணங்கள் அக்காலத்தின் மகிழ்ச்சியான உறவுகள் நட்புகள் மேலும் நினைத்துப் பார்க்கக் கூடிய வாழ்வு அனுபவங்கள்தான் எத்தனை எத்தனை? அத்துடன் இன்றைய நவீன காலத்தின் மாற்றங்கள் விழுமியங்கள் அனைத்தும்  அற்றுப் போன இன்றைய நிலம் உள்ளிட்டு அனைத்தும் மனிதர்களின் வேட்டைக் காடாகி போன அவலங்களோடு எல்லாவற்றிற்கும் ஆன மூன்று தலைமுறைகளின சாட்சியாக நான் மீந்திருப்பதை அவதானித்துப் பார்க்கிறேன்.   எத்தனை காலம் தான் ஆனால் என்ன ?மாற்றங்கள் எதுவானாலும் அடிப்படை வாழ்வு ஒன்றே!அது எப்பொழுதும் உறுதியானது.

இந்த ஓவியத்தை போலவே நீடித்திருப்பது. கால சக்கரம் வேகமாக ஓடுகிறது…
•••



#கேஎஸ்ஆர்போஸ்ட் 
#ksrpost
22-5-2024.

India has approximately 1,300 islands

"India has approximately 1,300 islands. I was surprised to know that we did not have a record or survey of these islands. Some islands are the same size as Singapore. It means for India, building new Singapores is not difficult if we do it," said PM Modi.

*What ever could have been or should have been, doesn't matter*.

*What ever could have been or should have been, doesn't matter*. Make your faith larger than your fears and your dreams bigger than your doubts.  If you are willing to be a self-learner, you will develop yourself.To turn your dreams into reality, all your resources, efforts and concentration should be aligned in the same direction This moment is here and now for you to live. Keep going...

#ksrpost
22-5-2024.


Tuesday, May 21, 2024

துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

1)*துரோணாச்சாரியார் பசியுடன் இருக்கும் தனது மகன் அஸ்வத்தாமனைக் கூட்டிக் கொண்டு தன் நண்பன் துருபதனை காண செல்லும் போது நிகழ்வது*:

"நண்பா துருபதா உன்னைத்தானே தேடி வந்தேன்.இப்போது இங்கே நீ அரசனாக இருக்கிறாய் என்று தெரியாது.உன் தந்தை எப்பொழுது இறந்தார்?பசியால் அழும் இந்த குழந்தைக்கு முதலில் சாப்பிட ஏதாவது ஏற்பாடு செய்.பிறகு உட்கார்ந்து சாவகாசமாக பேசலாம்.பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன என்றபடி அவன் அருகில் செல்ல காலடி வைத்தேன்.உடனே அவன் சேவகனே அரசு சபையில் எங்கே நிற்க வேண்டும் எப்படி பேச வேண்டும் என்பதை சரியாக சொல்லித் தராமல் இவனை நீ எப்படி உள்ளே அனுமதித்தாய் என்று தன் சேவகனை திட்டினான் அவன்.அவனுடைய வார்த்தையை கேட்டதுமே அதிர்ச்சியில் உறைந்து போனேன் நான்.என்னை அடையாளம் தெரியவில்லையா பெரியண்ணன் என்று என்னை அழைத்தாயே குரு அக்னி தேவரின் குருகுலத்தில் உன்னோடு கூட படித்த துரோணன், நெருங்கிய தோழன் என்று விரிவாகச் சொன்னேன் நான்.

நீ என் குருவின் சிஷ்யன் என்பது உண்மைதான்.ஆனால் அவர் உனக்கு வெறுமனே வில் வித்தை தான் கற்றுக் கொடுத்திருக்கக்கூடும்.ஆனால் யாரோடு எந்த மாதிரி கௌரவத்தோடு பேச வேண்டும் என்கிற நாகரிகத்தைச் சொல்லித் தரவில்லை என்றான். அவன் முகத்தில் சட்டென ஒரு கம்பீரக் களை தோன்றியது.உன் நிலைமை சரியில்லை என்று சொன்னால் நான் ஏதேனும் உதவி செய்ய தயார்.ஆனால் நண்பன் என்ற முறை கொண்டாடும் பேச்சு வேண்டாம்.அரசு சபையில் எப்படி மரியாதையுடன் பேசுவது என்று கற்றுக்கொள்ள வேண்டும்.சேவகனே இவர்களை அழைத்துக் கொண்டு போய் அரண்மனையின் பணியாட்களுக்கான சமையல் கட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வழங்க ஏற்பாடு செய்ய என்றான்.
இந்த துரோணர் என்றும் அவமானத்தை சகித்துக் கொண்டவனில்லை.கோபம் வந்துவிட்டது. அடேய் துருபதா உன் திமிரை அடக்காவிட்டால் நான் அக்னிவேசரின் சீடனே அல்ல என்று முகத்துக்கு நேராக சொல்லிவிட்டு குழந்தையின் கையை  பிடித்துக் கொண்டு திரும்பி விட்டேன்.இந்த சத்திரியர்களின் திமிர் என்று தான் குறைந்திருந்தது.துருபதன் மட்டுமில்லை,ஒவ்வொரு அரசனும் அப்படித்தான்"
————————————
2)"சுகதேவன் பெரிய ஞானி விரும்பும் சமயத்தில் மரணத்தை தழுவி கொள்ளும் வரம் கொண்டவன். தானாகவே இறந்து போக வேண்டும் என்று முடிவெடுத்து இறந்தான். அவனுடைய பிரம்மச்சரியம் முதலில் அறிவு பூர்வமாக உருவாகி பிறகு உணர்வுகளின் துணையோடு உறுதி பெற்ற ஒன்றாகும்.பற்று என்பதே தவறு.அதில் அகப்பட்டுக் கொள்ளாமல் வாழ வேண்டும் என்று நம்பிக் கொண்டிருந்தவன்,ஒருநாள் அதற்கு நேர் மாறாகப் பேச ஆரம்பித்தான்.குடும்பம் மனைவி மக்கள் என்பதெல்லாம் பொருளற்றது என்ற பிறகு பிரம்மச்சாரியாக எத்தனை நாள் வாழ்ந்துதான் என்ன பயன்?இப்பொழுது இறந்துவிட்டால் என்ன அல்லது இன்னும் ஐம்பது வருஷம் கழித்து இறந்தால் என்ன? பிறப்பு சாவு என்னும் நச்சுச்சக்கரத்திலிருந்து விடுதலை ஆவதே வாழ்க்கையின் குறிக்கோள். ஆசையையும் சுயநலத்தையும் விடாத வரை விடுதலை என்பது சாத்தியம் இல்லை"

#பருவம்

எஸ்.எல்.பைரப்பா

தமிழில்:பாவண்ணன்


JULIUS CAESAR -WILLIAM SHAKESPEARE

JULIUS CAESAR
-WILLIAM SHAKESPEARE 

The Tragedy of Julius Caesar is a tragedy by William Shakespeare, believed to have been written in 1599. It is one of several plays written by Shakespeare based on true events from Roman history, which also include Coriolanus and Antony and Cleopatra.

Summary:

Two tribunes, Flavius and Murellus, find scores of Roman citizens wandering the streets, neglecting their work in order to watch Julius Caesar’s triumphal parade: Caesar has defeated the sons of the deceased Roman general Pompey, his archrival, in battle. The tribunes scold the citizens for abandoning their duties and remove decorations from Caesar’s statues. Caesar enters with his entourage, including the military and political figures Brutus, Cassius, and Antony. A Soothsayer calls out to Caesar to “beware the Ides of March,” but Caesar ignores him and proceeds with his victory celebration (I.ii.19, I.ii.25).

Cassius and Brutus, both longtime intimates of Caesar and each other, converse. Cassius tells Brutus that he has seemed distant lately; Brutus replies that he has been at war with himself. Cassius states that he wishes Brutus could see himself as others see him, for then Brutus would realize how honored and respected he is. Brutus says that he fears that the people want Caesar to become king, which would overturn the republic. Cassius concurs that Caesar is treated like a god though he is merely a man, no better than Brutus or Cassius. Cassius recalls incidents of Caesar’s physical weakness and marvels that this fallible man has become so powerful. He blames his and Brutus’s lack of will for allowing Caesar’s rise to power: surely the rise of such a man cannot be the work of fate. Brutus considers Cassius’s words as Caesar returns. Upon seeing Cassius, Caesar tells Antony that he deeply distrusts Cassius.

Caesar departs, and another politician, Casca, tells Brutus and Cassius that, during the celebration, Antony offered the crown to Caesar three times and the people cheered, but Caesar refused it each time. He reports that Caesar then fell to the ground and had some kind of seizure before the crowd; his demonstration of weakness, however, did not alter the plebeians’ devotion to him. Brutus goes home to consider Cassius’s words regarding Caesar’s poor qualifications to rule, while Cassius hatches a plot to draw Brutus into a conspiracy against Caesar.

That night, Rome is plagued with violent weather and a variety of bad omens and portents. Brutus finds letters in his house apparently written by Roman citizens worried that Caesar has become too powerful. The letters have in fact been forged and planted by Cassius, who knows that if Brutus believes it is the people’s will, he will support a plot to remove Caesar from power. A committed supporter of the republic, Brutus fears the possibility of a dictator-led empire, worrying that the populace would lose its voice. Cassius arrives at Brutus’s home with his conspirators, and Brutus, who has already been won over by the letters, takes control of the meeting. The men agree to lure Caesar from his house and kill him. Cassius wants to kill Antony too, for Antony will surely try to hinder their plans, but Brutus disagrees, believing that too many deaths will render their plot too bloody and dishonor them. Having agreed to spare Antony, the conspirators depart. Portia, Brutus’s wife, observes that Brutus appears preoccupied. She pleads with him to confide in her, but he rebuffs her.

Caesar prepares to go to the Senate. His wife, Calpurnia, begs him not to go, describing recent nightmares she has had in which a statue of Caesar streamed with blood and smiling men bathed their hands in the blood. Caesar refuses to yield to fear and insists on going about his daily business. Finally, Calpurnia convinces him to stay home—if not out of caution, then as a favor to her. But Decius, one of the conspirators, then arrives and convinces Caesar that Calpurnia has misinterpreted her dreams and the recent omens. Caesar departs for the Senate in the company of the conspirators.

As Caesar proceeds through the streets toward the Senate, the Soothsayer again tries but fails to get his attention. The citizen Artemidorus hands him a letter warning him about the conspirators, but Caesar refuses to read it, saying that his closest personal concerns are his last priority. At the Senate, the conspirators speak to Caesar, bowing at his feet and encircling him. One by one, they stab him to death. When Caesar sees his dear friend Brutus among his murderers, he gives up his struggle and dies.

The murderers bathe their hands and swords in Caesar’s blood, thus bringing Calpurnia’s premonition to fruition. Antony, having been led away on a false pretext, returns and pledges allegiance to Brutus but weeps over Caesar’s body. He shakes hands with the conspirators, thus marking them all as guilty while appearing to make a gesture of conciliation. When Antony asks why they killed Caesar, Brutus replies that he will explain their purpose in a funeral oration. Antony asks to be allowed to speak over the body as well; Brutus grants his permission, though Cassius remains suspicious of Antony. The conspirators depart, and Antony, alone now, swears that Caesar’s death shall be avenged.

Brutus and Cassius go to the Forum to speak to the public. Cassius exits to address another part of the crowd. Brutus declares to the masses that though he loved Caesar, he loves Rome more, and Caesar’s ambition posed a danger to Roman liberty. The speech placates the crowd. Antony appears with Caesar’s body, and Brutus departs after turning the pulpit over to Antony. Repeatedly referring to Brutus as “an honorable man,” Antony’s speech becomes increasingly sarcastic; questioning the claims that Brutus made in his speech that Caesar acted only out of ambition, Antony points out that Caesar brought much wealth and glory to Rome, and three times turned down offers of the crown. Antony then produces Caesar’s will but announces that he will not read it for it would upset the people inordinately. The crowd nevertheless begs him to read the will, so he descends from the pulpit to stand next to Caesar’s body. He describes Caesar’s horrible death and shows Caesar’s wounded body to the crowd. He then reads Caesar’s will, which bequeaths a sum of money to every citizen and orders that his private gardens be made public. The crowd becomes enraged that this generous man lies dead; calling Brutus and Cassius traitors, the masses set off to drive them from the city.

Meanwhile, Caesar’s adopted son and appointed successor, Octavius, arrives in Rome and forms a three-person coalition with Antony and Lepidus. They prepare to fight Cassius and Brutus, who have been driven into exile and are raising armies outside the city. At the conspirators’ camp, Brutus and Cassius have a heated argument regarding matters of money and honor, but they ultimately reconcile. Brutus reveals that he is sick with grief, for in his absence Portia has killed herself. The two continue to prepare for battle with Antony and Octavius. That night, the Ghost of Caesar appears to Brutus, announcing that Brutus will meet him again on the battlefield.

Octavius and Antony march their army toward Brutus and Cassius. Antony tells Octavius where to attack, but Octavius says that he will make his own orders; he is already asserting his authority as the heir of Caesar and the next ruler of Rome. The opposing generals meet on the battlefield and exchange insults before beginning combat.

Cassius witnesses his own men fleeing and hears that Brutus’s men are not performing effectively. Cassius sends one of his men, Pindarus, to see how matters are progressing. From afar, Pindarus sees one of their leaders, Cassius’s best friend, Titinius, being surrounded by cheering troops and concludes that he has been captured. Cassius despairs and orders Pindarus to kill him with his own sword. He dies proclaiming that Caesar is avenged. Titinius himself then arrives—the men encircling him were actually his comrades, cheering a victory he had earned. Titinius sees Cassius’s corpse and, mourning the death of his friend, kills himself.

Brutus learns of the deaths of Cassius and Titinius with a heavy heart, and prepares to take on the Romans again. When his army loses, doom appears imminent. Brutus asks one of his men to hold his sword while he impales himself on it. Finally, Caesar can rest satisfied, he says as he dies. Octavius and Antony arrive. Antony speaks over Brutus’s body, calling him the noblest Roman of all. While the other conspirators acted out of envy and ambition, he observes, Brutus genuinely believed that he acted for the benefit of Rome. Octavius orders that Brutus be buried in the most honorable way. The men then depart to celebrate their victory.


Monday, May 20, 2024

ஷோ கம்யூன் வாழ்வு…. என்றார். #polyamoryயும் #molecule எனும் சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship

ஓஷோ  கம்யூன்  வாழ்வு….
 என்றார்.

#polyamoryயும் #molecule எனும்  சொல்லை சேர்த்து #polycule அழைக்கப்படுகிறது,இதற்கும் open relationship-என மேலநாட்டு நிலைமை. இங்கு ஒரு வாரமாக சமூக ஊடகங்களில் இது பேசும் பொருளாக உள்ளது. இது ஒரு சாபமே… நம் மண்வாசனைக்கு சரி அற்றது. பின் நவீனத்துவம், இருத்தல் வாதம் பேசி சிலர்  உச்ச நீதி மன்ற தீர்ப்பையும் முன் எடுத்து இதையும் இங்கு ஆமோதிக்கின்றனர்.

#polycule
#molecule
#polyamory

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-5-2024.


#கேரள சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை

#கேரள சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை 

காவிரி  நடுவர் மன்ற தீர்ப்பை மீறி, இடுக்கி மாவட்டம், தேவிகுளம் பகுதியில் உள்ள பெருகுடாவில் கேரள கம்யூனிஸ்ட் ஆட்சி சிலந்தி ஆற்றின் குறுக்கே அணை கட்டிக் கொண்டிருக்கிறது.  தமிழக அமராவதி அணைக்கு நீரின் வரத்து குறைந்து, தமிழக விவசாயிகள் பாதிக்க படுவார்கள். ஏற்கனவே கர்நாடக காங்கிரஸ் அரசு மேகேதாட் கட்ட உள்ளது. இங்குள்ள திமுக அரசு குறட்டை விடுகிறது. என்ன சொல்ல….⁉️சிபிஎம், காங்கிரஸ்  திமுகவின் நம்பிக்கையான தோழமை கட்சிகள் வேறு…..


#Reader;s Digest UK Discontinues After 86 Years

#Reader's Digest UK Discontinues After 86 Years

ஏப்ரல் 30, 2024 புத்தகம் படிப்பவர்களுக்கு ஒரு சோகமான நாள்.. ரீடர்ஸ் டைஜஸ்ட் மூடப்பட்டுள்ளது.  சர்வதேச புத்தக தினத்தன்று அதன் தலைமை ஆசிரியரின் குறிப்புடன் வெளிவந்த ஒரு குறியீட்டு வீடியோ விளக்கத்துடன் அந்த சோகமான செய்தி பின்வருமாறு.  சில படங்கள் பிரமாதம்.  *ஒரு சகாப்தத்தின் முடிவு* ஏப்ரல் 30, 2024 நிலவரப்படி, ரீடர்ஸ் டைஜஸ்ட் UK அதன் அச்சுப் பதிப்பை 86 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடுவதை நிறுத்திவிட்டது.  தற்போதைய இதழ் வெளியீட்டு நிலப்பரப்பின் நிதி அழுத்தங்களை நிறுவனத்தால் தாங்க முடியவில்லை என்று லிங்க்ட்இனில் பத்திரிகையின் தலைமை ஆசிரியர் இவா மக்கேவிக் அறிவித்தார்.  மே 2024 இதழ் கடைசியாக வெளியிடப்பட்டது.









பிறந்த பொழுது முதல் இன்று வரை பார்தத ரீடர்ஸ் டைஜஸ்ட் கதை முடிவது வேதனையான விடயம்.

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
20-5-2024.


#வாழ்க்கையை வியப்பாக பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.

#வாழ்க்கையை வியப்பாக பார்ப்பவருக்குத்தான் அது உற்சாகமாக இருக்கும்.  யாரால் வாழ்க்கையை வியப்பாக பார்க்க முடியும் தெரியுமா?  இடைவிடாமல் கற்றுக் கொள்பவருக்குத் தான் வாழ்க்கை வியப்பாக இருக்கும்.  யாரால் இடைவிடாமல் கற்றுக் கொள்ள முடியும்? உலகத்தில் ஏற்படும் எல்லா நிகழ்வுகளை பற்றி தனக்குத் தெரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறவர்களால்தான் கற்றுக்கொள்ள முடியும்.  கற்றுக்கொள்ள கற்றுக்கொள்ள, அனுபவிக்க அனுபவிக்க, உள்ளே ஒரு நிறைவு வரும்.  போதும் என்கிற மனம் வரும்.  அந்த நிறைவு வரும் வறை கற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். 
                                    
 -#பாலகுமாரன்

"பிறப்பும் சாவும் மட்டுமே உண்மையில் இரண்டு முகங்கள்.நடுவில் வெறும் எண்ணங்கள்.பிறப்பது எதற்கு? வாழ்வது எதற்கு?சாவுக்கு பின் உயிர் எங்கே போகிறது?பிறப்பு என்பதே பொருளற்றுப் போகும்போது பிறப்புக்கு காரணமானவருக்கு என்ன பொருள் இருக்கப் போகிறது. அவருக்கு அடைக்கப்பட வேண்டிய கடனாக எதுதான் மிஞ்ச போகிறது?"
- #பருவம்

“Hell is empty and all the devils are here.” 
― #Shakespeare
(The Tempest)

போலியாக இருக்க தான் நிறைய மெனக்கெட்டு நடிக்கணும். உண்மையா இருக்க நாம நாமாக இருந்தாலே போதும்...

பாராட்டு, விமர்சனங்கள், பழி இவற்றை காதில் வாங்காமல்  நகருங்கள். காதில் வாங்கினால் வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை தவற விடுவீர்கள்.

தழும்புகள் காயத்தை நினைத்து வருத்தப்படுதவற்காக அல்ல. அந்த காயத்தை கடந்து வந்ததற்கு பெருமைப்படுவதற்காக.

மற்றவர்கள் நம்மைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று, தேவையில்லாமல் நாமே நமக்குள் நினைத்துக் கொள்ளும் ஒரு கண்ணோட்டம் மிகவும் தவறானது.
நம்மைப் பற்றிய நம் கண்ணோட்டத்தை விட, மற்றவர்கள் கண்ணோட்டத்திற்கு, நாம் பெரிதாக மதிப்பளிக்க ஆரம்பிக்கும் போதே,

நாம் மனதளவில் நம்மைத் தாழ்த்திக் கொள்ளத் துவங்கி விடுகின்றோம்.. நாம் செய்யும் செயல்களையும்,அதன் விளைவுகளையும் மறந்து, அடுத்தவர்களின் எண்ணத்திற்கு அதிக மதிப்புக் கொடுப்பதால்,நம் செயல்கள் முழுதாக நடைபெறாமல், அதனால் மனம் புழுங்குவது வழக்கமாகி விட்டது.

முன்னேற நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியை இந்த எண்ணம் சாகடித்து விடும்.முளையிலேயே முயற்சி சாகடிக்கப்படுவதால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்?இந்தப் பயத்திலேயே பலர் மற்ற தகுதிகளை, திறமைகளை கைவிட்டு விடுகின்றனர்.இந்த அச்சம் இருந்தால், படைப்புத் திறனோ, முன்னேற வேண்டும் என்கிற உந்துதலோ இருக்காது.

மற்ற தடைகளை வரிசையாகக் களைய வேண்டும்...மனதில் ஆழப் பதிந்துள்ள எதிர்மறை எண்ணம், தாழ்வு மனப்பான்மை, பயம், தயக்கம், ஒப்பீடு என்று அனைத்தில் இருந்தும் வெளிவர முயற்சி செய்ய வேண்டும்.

வெற்றியை நோக்கி செல்லும் பயணத்தில், பிறர் கருத்துகளையும், அதிருப்தியையும் சமாளிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.பிறர் உங்களைக் குறை கூறும் போது, சோர்ந்து போகாதீர்கள்;
பிறர் இப்படி இருக்கின்றனரே என்று, உள்ளுக்குள் பொறுமாதீர்கள். இருக்கும் நிலையை ஏற்றுக் கொள்ளுங்கள்; தீர்வு காணுங்கள்.இந்த உலகம் உங்களைப் பார்க்கிற விதம் ஒவ்வொரு நாளும் மாறிக் கொண்டே இருக்கும்.
சிலருக்கு இன்று உங்களைப் பிடிக்கும். நாளையே அவர்களுக்கு பிடிக்காமலும் போகலாம்.மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தால் நம்முடைய வாழ்க்கையை நாம் வாழ முடியாது".

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
20-5-2024


இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்கும் மனிதர்களும்.

அன்றைய கூட்டு குடும்பங்கள்…. - வழக்கறிஞர் கே.எஸ். இராதா கிருஷ்ணன் —————————————————— இழந்து போன கூட்டுக் குடும்ப வாழ்வும் தனிமையில் தத்தளிக்...