Wednesday, July 24, 2024

பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார்.


 பிளாட்பாரத்தில் ஒரு போர்ட்டர் கடைசி இரயில் சென்ற பிறகு, கஸ்டமர் கிடைக்காததால் வீட்டிற்கு புறப்பட்டார். 

பிளாட்பார பெஞ்சில் ஒரு வயது முதிர்ந்த பெண்மணி உட்கார்ந்து இருப்பதை பார்த்தார்.

அருகில் சென்று கேட்டார்: "நீங்கள் எந்த ஊருக்கு செல்லவேண்டும்?"

-- "நான் டெல்லிக்கு எனது மகனை பார்க்க செல்கிறேன்"

"அம்மா - இனிமேல் எந்த வண்டியும் கிடையாது; கடைசி ரயிலும் கொஞ்ச நேரம் முன்பு தான் சென்றது.."


பெண்மணிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை; கவலையுடன் பார்த்தார்...

அந்த போர்ட்டர் கொஞ்சம் கரிசனத்தோடு, பெண்மணியை பயணிகளின் அறைக்கு அழைத்து சென்றார். 

அங்கே இரவை கழிக்கலாம் என்றார். 

"உங்கள் மகன் எங்கே இருக்கிறார்? என்ன செய்கிறார்?" 

-- எனது மகன் இரயில்வே துறையில் வேலை செய்கிறான் 

"அவரது பெயரை சொல்லுங்கள்; தொடர்பு கொள்ள முடியுமா என்று பார்க்கலாம்..."

-- அவன் எனது லால்; எல்லோரும் லால் பகதூர் சாஸ்திரி (அப்போது அவர் ரயில் துறை அமைச்சர்) என்று அழைப்பார்கள்..

மொத்த ஸ்டேஷனும் புரண்டது; எல்லோரும் சேர்ந்து அவரை பத்திரமாக டெல்லிக்கு அனுப்பிவைத்தனர்...

அதை பார்த்து, அந்த பெண்ணுக்கு ஒன்றும் விளங்கவில்லை..

தன் மகனை பார்த்ததும் கேட்ட முதல் கேள்வி: நீ இரயில்வேயில் என்ன வேலை பார்க்கிறாய்?

அமைச்சர் சொன்னது: ஒரு சிறு, எளிய வேலை அம்மா...

No comments:

Post a Comment

Water Crisis..

Water Crisis Threatening World Food Production – Report channelstv.com/2024/10/17/wat… நீரின்றி அமையாது உலகு..    எல்லா காலத்துலயுமே தண்ணீர்...