#நாவலர்_பசுமலை_சோமசுந்தரபாரதியாரின் 147வது பிறந்தநாள்
———————————————————-
தமிழ்ச் சூழலில் நாவலர் என்றாலே வழக்கறிஞர் சோமசுந்தர பாரதி அவர்களும் இலங்கை யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலரும் தான் நினைவுக்கு வருவார்கள்! வரவேண்டும்!!
ஆனால் 1960 இல் இருந்து தங்களைச் சார்ந்தவர்களுக்கு நாவலர் பேராசிரியர் இனமானத் தலைவர் கொள்கை வீரர் குணக்குன்று இடி முழக்கப் பாசறை கழக அடலேறு
என்றெல்லாம் தகுதி இருப்பவர் இல்லாதவர் என்று பலருக்கும் அடைமொழி சூட்டி வளர்த்து விட்டார்கள். இவர்களில் பலர் வெட்டிப் பேச்சு வீரர்கள். எந்த அரசியல் அனுபவம் இல்லாதவர்கள். ஆபாச பேச்சுகளின் மூலம் அடையாளம் பெற்றவர்கள். இவர்களை மக்களிடையே பிரசித்தி பெற வைக்க வேண்டும் என்பதற்காக மேடை ஏற்றிவிட்டு வேடிக்கை பார்த்ததுதான் கடந்த கால அரசியல் வரலாறு. இவர்கள் எதிர்க்கட்சிகளைச் சாடுவார்கள் அவர்கள் இவர்களைச் சாடுவார்கள்.
இதுதான் இவர்கள் தமிழ் வளர்த்த லட்சணம்.
இதை எதற்கு சொல்கிறேன் என்றால் இன்று நாவலர் சோமசுந்தர பாரதி அவர்களின் 147 ஆவது பிறந்தநாள்.
அவருடைய பின்னணியை இணைய தளங்களில் தேடும்போது நாவலர் நெடுஞ்செழியன் தான் அதிகம் வருகிறார். குறிப்பாகச் சோமசுந்தர பாரதியாரின் புகைப்படத்தைக் கூடப் பல தளங்களில் சென்று தேட வேண்டி இருக்கிறது.
நாவலர் சோமசுந்தர பாரதி தமிழ் தேசியத்தின் பிதாமகன்.
நாவலர் என்றால் இவர் யார்? நெடுஞ்செழியன் தானே நாவலர்? என்றெல்லாம் கேட்கிற காலம் வந்துவிட்டது. நான் நெடுஞ்செழியனைக்
குறைத்து மதிப்பிடவில்லை. அவர் மதிப்பிற்குரியவர்தான்.
ஆனால் ஆறுமுக நாவலர் சோமசுந்தர பாரதி என்கிற இவர்கள் இருவரையும் இவர்கள் மறக்கடித்து விட்டார்கள் என்பதைத் தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். இவர்கள் இருவர் போக வையாபுரிப் பிள்ளை காசு பிள்ளை போன்ற தமிழ் பல முன்னோடி அறிஞர்கள் தமிழுக்கும் நாட்டுக்கும் மொழிக்கும் அதன் தொன்மைக்கும் உலகளாவிய அதன் மரபிற்கும் செய்த சேவைகளின் நிழலில் அமர்ந்து இவர்கள் அரசியல் நடத்திக் கொண்டு வருகிறார்கள்.
இந்தச் சுயநலக் கும்பலுக்கு அரசு பதவி அதிகாரம் தான் முக்கியம்!
தமிழுக்கும் அதன் தேசத்திற்கான வரைவிலக்கணமும் அடிக்கட்டுமானத்தையும் வகுத்த இந்த முன்னோடிகள் நினைவு கூறப்பட மாட்டார்கள். உருவாக்கியவர்கள் மறைய உதவாக்கரைகள் வந்துவிட்ட காலம்.
இன்று தமிழ் தேசிய நாவலர் சோமசுந்தர பாரதியார் அவர்களின் பிறந்த நாள். அவர் சிறப்பை போற்றுவோம்.
தமிழ் வளர்த்த சான்றோர்களின் கனவினை நிறைவேற்ற
உறுதி ஏற்போம்!
நாவலரின் புகழ் நீடு வாழ்க!!

No comments:
Post a Comment