#நிட்டிஆயோக்
••••
முன்னாள்த் திட்ட குழு இன்று நிட்டி ஆயோக் என்று அழைக்கப்படுகிற
சூப்பர் கேபினட் கூட்டத்திலிருந்து நேற்று மம்தா பானர்ஜி வெளியேறியுள்ளார்.
இதுகுறித்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறும்போது
மம்தா பானர்ஜி மாலை தான் பேசுவதற்கான அனுமதி தரப்பட்டிருந்தது. ஆனால் அவர் கல்கத்தாவிற்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னை முன்பே அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டதால் அனுமதி வழங்கப்பட்டது.
அவ்வாறு உரிய நேரம் வழங்கப்பட்டு அவர் பேசியது எல்லாம் மானிட்டர் திரையில் ஒளிபரப்பட்டு அவருக்கு கொடுத்த நேரம் வரை அவர் பேசி இருக்கிறார் என்பதற்கெல்லாம் கூட பதிவுகள் இருக்கிறது. இப்படி எல்லாம் இருக்கையில் தன்னைப் பேசவிடவில்லை என்று அவர் மனப்போக்கில் குற்றம் சாட்டுகிறார்.
இந்த நிட்டி ஆயோக் என்று சொல்லக்கூடிய சூப்பர் கேபினட் மத்திய திட்டக்குழு என்பது அரசியல் சாசனத்தில் அதிகாரப்பூர்வமாக சொல்லப்படவில்லை. நிதி கமிஷன் உடைய அதிகாரங்கள் மட்டும் தான் அரசியல் சாசனத்தில் இடம்பெற்றுள்ளன.
ஆனால் அவை தொடர்ந்து நாட்டின் அவ்வப்போதைக்கான பொருளாதார மாற்றங்களுக்கு ஏற்ப நடந்து கொண்டிருக்கிறது. அவற்றில் முதல் கூட்டத்தில் மம்தா கலந்து கொள்ளவும் இல்லை. ஏன் கலந்து கொண்டு பேச வேண்டியதுதானே? எதற்கு வெளியேற்றம் ஆங்கிலத்திலும் வங்கத்திலும் பேசிக் கூட சிறப்புப் பொருளாதாரங்கள் பற்றிய தன்னுடைய நீண்ட அனுபவங்களை சொல்ல வேண்டியது தானே! இப்படித்தான் காங்கிரஸ் காலத்திய திட்டக்குழு ( planing commission)
கூட்டத்தில் இருந்து ஒரு முறை ஜெயலலிதா தன்னைப் பேச விடவில்லை என்று 2012 இல
சொல்லி வெளியேறினார்.
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் இன்றைய மாநில முதலமைச்சர்கள் பலருக்கும் பொருளாதாரம் பற்றிய கூர்ந்த அறிவோ தெளிவோ இருப்பதில்லை!
இனத்தையோ சாதியோ எதையோ ஓட்டுக்கு காசு என பயன்படுத்தி ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். ஆனால் பன்னாட்டு உள்நாட்டு பொருளாதாரங்களில் நுட்பமான அறிவு அவர்களுக்கு போதவில்லை என்பதைத் தான் இது காட்டுகிறது.
இன்றைய தமிழக முதல்வர் ஸ்டாலினும் கலந்து கொள்ளவில்லை. இவர் ஏற்கனவே கடந்த இரண்டு நிட்டி ஆயோக் கூட்டங்களில் கலந்து கொள்ள வில்லை.பெருந்தேசியங்கள் மாநில தேசியங்கள் பற்றி எல்லாம் பேசுகிறவர்கள் சர்வதேசிய ஒருங்கிணைந்த பொருளாதார மண்டலங்கள் பற்றிய அறிவை இழந்து விடுகிறார்கள்.

No comments:
Post a Comment