Wednesday, August 14, 2024

 #இன்று_ஆடிப்பெருக்கு!  ஆடி 18

——————————————————



மேற்கு தொடர்ச்சி மலையும் மலை சார்ந்த இடங்களிலும்  தென்மேற்குப் பருவக்காற்றின் மழை பெய்து நிலம் நோக்கி ஆறுகளிலும் ஓடைகளிலும் புதுப்புனல் பொங்கி வரும் நாள்!

காவேரி நதி பெருகி இன்று பெரு வெள்ளமாக தமிழகஆற்றுப்பகுதிகளைக் பாய்ச்சலுடன் கடந்து கொண்டிருக்கிறது. நற்றமிழர் வாழ்வில் நீங்கா இடம் பிடித்தவள் காவேரி! இதில் வைகை, தாமிரபரணியும் உண்டு

மேலும் இந்த விசால வரிசையில், அடையாறு, அமராவதி ஆறு - காவிரியின் துணையாறு, அரசலாறு, அர்ச்சுணன் ஆறு, பவானி ஆறு - காவிரியின் துணையாறு, சிற்றாறு,சின்னாறு,செஞ்சி ஆறு, செய்யாறு ஆறு ,கபினி ஆறு, கடனாறு - தாமிரபரணியின் துணையாறு, கல்லாறு, காவிரி ஆறு - தமிழகத்தின் பெரிய ஆறு, கெடிலம் ஆறு, கொள்ளிடம் ஆறு, குடமுருட்டி ஆறு, குண்டாறு, குந்தா ஆறு, குதிரையாறு - அமராவதியின் துணையாறு, நங்காஞ்சி ஆறு - குடகனாற்றின் துணையாறு, கெடிமலம், கோமுகி ஆறு, கோதையாறு, மலட்டாறு, மஞ்சளாறு, மணிமுத்தாறு - தாமிரபரணியின் துணையாறு, மணிமுக்தா ஆறு, மோயாறு, முல்லை ஆறு, நொய்யல் ஆறு - காவிரியின் துணையாறு, பச்சை ஆறு - தாமிரபரணியின் துணையாறு, பரளி ஆறு, பாலாறு, பரம்பிக்குளம் ஆறு, பைக்காரா ஆறு, சங்கரபரணி ஆறு, சண்முகா ஆறு, சிறுவாணி ஆறு, தென்பெண்ணை ஆறு, தாமிரபரணி ஆறு, உப்பாறு, வைகை ஆறு, வராக ஆறு, வைப்பாறு, வெண்ணாறு, வெட்டாறு, சனத்குமார ஆறு- காவிரியின் துணையாறு, மார்கண்ட ஆறு- தென்பெண்னையாற்றின் துணையாறு, பாம்பாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, வாணியாறு-தென்பெண்னையாற்றின் துணையாறு, கம்பையநல்லூர் ஆறு-தென்பெண்னையாற்றின் துணையாறு என்று தமிழகம் முழுவதும் நரம்பு மண்டலம்போல ஆறுகள் இருந்தன. 

எனினும், இந்த ஆறுகள் யாவும் எல்லாப் பருவங்களிலும் வற்றாமல் ஓடிக்கொண்டிருந்தவையல்ல. மழைக்காலங்களில் மட்டுமே இந்த ஆறுகள் நீர்புரண்டு கிடந்தன. 

கடந்த 10 நாட்களுக்கு முன்பாகவே விவசாயிகள்  நிலத்தையும் விதைகளையும் பண்படுத்தும்  நாளாகவும் இந்த ஆடிப்பெருக்கு விவசாய நிலங்களை நனைத்து பசும்பயிர்களை உருவாக்கும் நாளாகவும் இருக்கிறது. 

ஆடிப்பட்டம் தேடி விதை என்பார்கள்! 

இந்த ஆடியில் விதைத்தால் தான் அடுத்த தையில் அறுவடை முடியும்.

ஆண்டுதோறும் இந்த புதுப்புனல் அன்று பெண்கள் அம்மனுக்கு கூழ் காய்ச்சி ஊற்றுவார்கள். ஆடித் திருவிழா ஆடி நோம்பி என்றெல்லாம் அழைக்கப்படும் இந்த நாட்களில் புது வெள்ளம் பாய்ந்து வருவதை வேடிக்கை பார்க்க சமைத்த உணவுகளுடன் ஆற்று ஓரங்களில் மக்கள் கூடுவது பல காலமாக தொடர்ந்து வரும் அழகான ஏற்பாடு! அந்நேரங்களில் நதிகள் ஓடைகளின் மீது பூக்களைத்தூவி நதியை வரவேற்பது தமிழக மக்களின் பண்பாட்டு செயல்பாடு.

நீர் மேலாண்மை நாளாக பண்பாடு உருப்பெற்று உள்ளதை சூழலியல் வாதிகள் மக்களிடம் நீராதாரம் பகுதிகளை விழிப்புணர்வுடன் காக்க இந்த நாள் நிகழ்வுகளை முன்னெடுக்க வேண்டும்

இந்த இனிய நன்னாளில் எல்லா வளமும் நலமும் பெற்று மக்கள் சிறப்போடும் செழிப்போடும் வாழ என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்!!

#ஆடிப்பெருக்கு

#adiperku

#கேஎஸ்ஆர்போஸ்ட்

#ksrpost

3-8-2024.

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...