Tuesday, August 6, 2024

Bangladesh #பங்களாதேஷ்பி்ரச்சனை

#Bangladesh
#பங்களாதேஷ்பி்ரச்சனை
———————————————————
பங்களாதேஷில் உள்நாட்டுக் கலவரங்கள் நடந்து கொண்டிருக்கிறது. முஜிபுர் ரகுமான் அவருடைய மகள்  ஷேக் ஹசீனா அவர்கள்பதவியை ராஜினாமா செய்துவிட்டு  தனது தங்கையுடன் இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். அப்படியே இந்தியா வழியாக லண்டன் செல்ல இருப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. ஒருவேளை அவர் இந்தியாவில் தஞ்சமடைந்து இருந்தாலலும் இங்கு ஒரு சில நாட்கள் தான் தங்க முடியும் அதற்கு மேல் தங்க இயலாது. 

வங்கதேசத்தின் பிதாமகரான முஜிபூர் ரகுமான் உருவசிலை கலவரக்காரர்களால் சேதப்படுத்தப்படுவதையும், அந்நாட்டு நாடாளுமன்றத்தினுள் புகுந்து இவர்கள் செய்யும் அட்டூழியங்களும் நம்மை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்குகின்றன..

வங்கதேச சுதந்திர போராட்டத்திற்கு முஜிபூர் ரகுமான் அவர்களது தியாகமும் போராட்டமும் ஈடுஇணையற்றது.

கலக்க்கார்ர்கள  வெறியாட்டம் ஆடுகிறார்கள். வங்கதேசத்தின் தந்தை என்று சொல்லக்கூடியவரும் வங்கதேசத்தை நிர்மாணித்தவரும் அதற்கிடையில் கொல்லப்பட்டவரும் ஆகிய ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களின் சிலையை போராட்டக்காரர்கள் இலக்குமின்றி அடித்து நொறுக்கக்கூடிய காட்சிகளும் ஊடகத்தில் காட்டப்படுகின்றன. நாட்டை விட்டு தப்பி சென்றார் வங்கதேச பிரதமர்.

பங்களாதேஷின் சிராஜ்கஞ்ச் மாவட்டத்தின் எனயத்பூர் காவல் நிலையத்தில் 11 காவலர்கள் மற்றும் இந்துக்கள் போராட்டகாரர்களால் உயிருடன் எரிக்கப்பட்டனர். கடந்த 24 மணி நேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 
இந்த போராட்டகாரர்களுக்கு சீனா -பாக் நிதியுதவி வருகிறது என தகவல். 

அதிக விவசாயம் நெல் கரும்பு புகையிலை சணல் என்று ஏராளமான விளைபொருட்கள் விளையக்கூடிய வளமான இடம். அங்குதான் கங்கை நதி கடலில் கலக்கும் முகத்துவாரங்களும் இருக்கின்றன. நாட்டின் இரு நகரங்களான டாக்கா மற்றும் சிட்டாகாங் ஆகியவை நாட்டின் அண்மைய வளர்ச்சிக்குப் உந்துசக்தியாக விளங்குகின்றன. வங்காளதேச நாட்டின் நிர்வாக வசதிக்காக 64 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 64 மாவட்டங்கள், 8 கோட்டங்களின் நிர்வாகத்தில் செயல்படுகிறது.

வங்காளதேசம் உலகின் எட்டாவது அதிக மக்கட்தொகை கொண்ட நாடாகும். வங்காளதேசக் குடியரசு நாடாளுமன்ற சனநாயக நாடாகும். இதன் நாடாளுமன்றம் ஜாதியோ சங்சத் என அழைக்கப்படுகிறது. இந்நாடு, வளமிக்க கங்கை-பிரமபுத்திரா கழிமுகத்தில் அமைந்துள்ளதோடு, வரலாற்று மற்றும் பல்வேறு
 கலாசார மரபுரிமைகளையும் கொண்டுள்ளது. ஊழல் மற்றும் வறுமை போன்ற பல்வேறு பாரிய சவால்கள் காணப்பட்டாலும், 1991-இலிருந்து நாட்டின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி பெற்றுள்ளது. மேலும், 1975 உடன் ஒப்பிடுகையில் தனிநபர் வருமானமும் இருமடங்காகியுள்ளது. வங்காளதேசம் அடுத்த பதினொரு பொருளாதார நாடுகளுள் ஒன்றாக  இருந்தது.

இவ்வளவு இருந்தும் அங்கு என்ன பிரச்சனை? இட ஒதுக்கீட்டு பிரச்சனைகளில் அதிக குழப்பங்கள் நேர்ந்து இருக்கின்றன. அதில் தான் கலவரம் தோன்றியது. இப்போது வங்கதேசத்தை ராணுவம் எடுத்துக் கொண்டு அங்கு ராணுவ ஆட்சி நடக்கிறது.

சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு அரசு வேளைகளில் 30% இட ஒதுக்கீடு கொடுப்பதற்கு எதிராக தேசமெங்கும் எழுந்த போராட்டங்கள்தான் இதற்கு ஆரம்பமாக சொல்லப்படுகிறது. அப்போராட்டத்தை அரசு இரும்புக் கரங்களுடன் எதிர்கொண்டது. 200க்கும் மேற்பட்டவர்கள் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். 20,000க்கும் மேல் காயமடைந்திருந்தனர். சுமார் பதினோராயிரம் பேர் சிறைப்படுத்தப்பட்டிருந்தனர். தேசம் முழுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து, இணையத் தொடர்புகள் அனைத்தையும் துண்டித்தது. 

இவை எல்லாம் நடந்தும் போராட்டம் தணியாததால் உச்ச நீதிமன்றம் அந்தத் திட்டத்தை வாபஸ் வாங்கி விட்டது. இருப்பினும் அரசின் அடக்குமுறை மக்களின் கோபத்தை மேலும் வலுப்படுத்தவே உதவியது. ஷேக் ஹசீனா கடந்த 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கிறார். அவரது ஆட்சியில் பொருளாதாரம் வளர்ச்சியுற்றாலும், கடந்த தேர்தலை எதிர்க்கட்சிகள் மொத்தமாக புறக்கணித்திருந்தன.

கிழக்கு பங்கம்  விடுதலை அடைய எண்ணற்றோர் முக்தி பாகினி என இரத்தம் சிந்திய தியாக வரலாறும் நாடாளுமன்ற ஜனநாயகத்தின்  கீர்த்தி 2கே எனும் இன்றைய இளைய தலைமுறைக்கு புரியவில்லை... வெறும் வெறிபிடித்த வெற்று mob hypocrisy மனநிலையில் உழல்வது பேராபத்தானது...

ஷேக் ஹசீனா நான்காவது முறையாக வங்க தேசத்தின் பிரதமராக கடந்த ஜனவரியில் தேர்ந்தெடுக்கபட்டார். நீண்ட அரசியல் பயணம் இவருக்கு உண்டு; 1971 இல் தனிநாடக்கிய முஜிபூர் ரகுமானின் மகள் இவர்.  முஜிபூர், பின்னர் ராணுவத்தால் கொல்லப்பட்டப் பிறகு  அவருடைய அவாமி லீக் கட்சிக்கு ஹசீனா தலைமை ஏற்று ஆட்சிக்கு வந்தவர். 

இவருடைய ஆட்சிக் காலத்தில் வங்க தேசம் பொருளாதரத்தில் மேம்பட்டது. 
நாட்டின் தனிநபர் வருமானம் நான்கு மடங்காக உயர்ந்தது. வறுமையிலிருந்து இரண்டரை கோடி மக்கள் மீட்கப்பட்டனர். உலக அளவில் ஆயத்த ஆடைகள் தயாரிப்பில் வங்க தேசம் முன்னணி நாடாக மாறியது. இன்னும் சொல்லப் போனால் பாகிஸ்தானை விட வங்க தேசத்தின் பொருளாதரம் மேம்பட்டது. 

அனைத்தும் ஷேக் ஹசினாவின் நிர்வாகத் திறமையால் நிகழ்ந்தது என்று ஊடகங்கள் புகழ்ந்தன. அதனால் தான் அவரால் தொடர்ச்சியாக நான்காவது முறை ஜனவரியில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வரமுடிந்தது. 

இவ்வளவு சிறப்பு பெற்ற  ஹசீனா,  
சுய நலங்கள், ஊழல் புகார்கள், அரசியல் கொலைகள் போன்றவற்றால் வெறுக்கவும் பட்டார்.

வங்கேதேசத்தின் விடுதலைக்காக பாடுபட்டவர்கள் குடும்பத்தினருக்கு அரசு வேலை வாய்ப்புகளில் 30 விழுக்காடு கொடுக்கப்படும் என்று ஷேக் ஹசீனா அரசு வெளியிட்ட அறிவிப்பு அவருடைய கட்சிக்காரர்களுக்கு அதிக அளவில் பயன் தரக்கூடியது என்ற கருத்தால் எதிர்ப்பு வலுவானது. கடந்த ஒரு மாதமாக நடந்த போராட்டங்களில் சுமார் 300 பேர் உயிரிழந்துவிட்டனர். 

போராட்டத்தை  ஒடுக்க இணைய  சேவைகள்  நிறுத்தப்பட்டன.  பொதுப் போக்குவரத்து நடைபெறவில்லை. நாட்டின் முதுகெலுமபாக விளங்கும் பின்னலாடை நிறுவனங்கள் செயல்படவில்லை. 
நிலைமையை சமாளிக்க பிரதமர்  பேச்சு வார்த்தைக்கு பல முறை அழைப்பு விடுத்தும் மாணவர் தலைவர்கள்  அதனை ஏற்கவில்லை. 

கடைசியாக  போராட்டக்காரர்கள் கையில் கட்டைகளுடன் டாக்காவில் உள்ள ஷேக்  ஹசீனாவின் வீட்டுக்குள் ஆகஸ்டு 5-   ஆம் தேதி நுழைந்தவுடன் நிலைமை மோசமானது

இப்போது தேசம் ராணுவத்தின் கைகளுக்குப் போயிருக்கிறது. வேறு வழியில்லை. அடுத்ததாக எதிர்க் கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வருவோம் என்று ராணுவம் அறிவித்திருக்கிறது. 

இது போலத்தான் பாகிஸ்தானிலும் அடிக்கடி ராணுவ ஆட்சி மாறி மாறி வந்து கொண்டு  இருப்பதை வரலாற்றில் பார்த்து வந்திருக்கிறோம். அதிபர்கள் கொலை செய்யப்படுவதும் ராணுவ ஆட்சி வருவதும் இரு நாடுகளிலும் தொடர்ந்து நடைபெறுகிறது ஏற்கனவே வங்கதேசத்தில் இருந்த ஒரு அதிபர் ஊழல் குற்றச்சாட்டால் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

 1989 இல் சீனா செநஞ்சதுக்க கலவரம், ஆப்கான் கலவரம் ரஷ்யா மாஸ்கோவில் லெனினின் பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டுள்ளது.. ஆனால் இன்றைய ரஷ்ய இளைஞர்களுக்கு அது லெனினின் உடல் என்ற எந்த உணர்வும் இல்லை... அதை ஏதோ ஒரு சாதாரண பொருளை  போல விளையாடியது, ஸ்டாலின் மற்ற சிலைகளை தூக்கி எரிந்தது என சம்பவங்கள்…. மியாம்மர்  கலவரம், எகிப்தில் கெய்ரோவில் நடந்த கலகக் காரர்களின் வன்முறைகள், டிரம்ப் காலத்தில் வெள்ளை மாளிகையில் இளைஞர்களின்  போராட்டங்கள் என பல உண்டு

இப்படியான சூழலில் இந்தியாவைச் சுற்றி பாகிஸ்தான் சீனா வங்கதேசம் மாலத்தீவுகள் போன்ற அனைத்தும் எதிரி நாடுகளாகிக் கொண்டிருக்கும் வேளையில் மியான்மர்  கூட நம்மோடு நல்லுறவுகளில் இல்லை.

நேபாளமும் இலங்கையும் சீனாவின் கைப்பாவையாகி ஆகிவிட்டன.

இப்படித்தான் இருக்கிறது இந்தியாவின் அண்டை நாடுகளுக்கு இடையே இருக்கும் பிரச்சனைகள்.

இலங்கையிலும் கடந்த வருடங்களில் ஆட்சியாளர்கள் மீது  பொருளாதார சிக்கல் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுஅவர்கள்விரட்டப்
பட்டார்கள். இதே தான் கடந்த 2022- ல் இலங்கையில் நடைபெற்றது.  ராஜபக்சே குடும்பம். விலை வாசி உயர்வு, ஊழல் புகார்கள், வன்முறை, வேலையின்மை, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு போன்ற காரணங்களால் பொது மக்கள் வெகுண்டு எழுந்ததால் கொழும்பு நகரம் போர்க்களம் ஆனாது. உச்சக்கட்டமாக பிரதமர் ராஜபக்சேவின் வீட்டுக்குள் புகுந்து சூறையாடினார்கள். அவர் வீட்டை விட்டு வெளியேறி ராணுவத்தின் உதவியுடன் தலைமறைவாக இருந்து பின்னர் அமெரிக்காவுக்கு தப்பி செல்ல வேண்டியிருந்தது.

சொந்த நாட்டின் வரலாறும் தெரியாமல் வளர்க்கப்படும் தலைமுறையால் இன்றைய வங்கதேச நிலைமை நாளை இந்தியாவுக்கும் வரலாம் என்ற கவலை ஏற்படுகிறது...ஆனால் இதையெல்லாம் மீறி இந்தியா இன்று மிகப்பெரும் ஜனநாயக நாடாக அதன் மீது மாறாத அக்கறை கொண்ட ஒரு முன்மாதிரிநாடாக இருக்கிறது.

2 கே ,இன்றைய இளைய தலைமுறைக்கு கேஎப்சி சிக்கனும் டாமினோஸ் பிட்ஸாவும் சாப்பிட்டால் தான் அது சிறப்பான உணவு என்று நினைக்கும் போலி மால் காலாச்சாரம் நிரம்பிய மேட்டிமைத்தனம் தலைமுறையை வளர்ந்து வருகிறது.

ஆயிரம் அரசியல் கருத்து வேறுபாடுகள் பல்வேறு மொழிகள் பல்வேறு மாநிலங்கள் கலாச்சாரங்கள் பண்பாடுகள் என்று இருந்தாலும் கூட கூட்டாட்சித் தத்துவத்தில் நிலைத்து நிற்கக் கூடிய அளவில் உலகமே வியக்கும் வண்ணம் இந்தியா ஒரு வலிமைமிக்க நாடாகத்தான் இன்றும் இருக்கிறது!

காரணம் அது ஜனநாயகத்தின் மீது அதிக நம்பிக்கையும் அதனால் நிலைத்து நிற்கக்கூடிய வலிமையும் பெற்று இருக்கிறது என்பதுதான் 
அதன் வரலாற்று நிதர்சனமாகவும் இருக்கிறது. இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் ஏற்படும் அதிகார குழப்பங்களுக்கு பதிலாக இந்தியா இன்னும் தேர்தல் முறை ஜனநாயகத்தை வலுவாகவே தக்க வைத்துக் கொண்டிருப்பது இந்தியர்களாகிய நமக்கு ஒரு பெருமையான விஷயம்தான்! 

1)BURNT ALIVE 🚨
Awami League leaders and Hindus were burned alive and then paraded in a van by Islamists in Bangladesh.🎗️

2)வங்கதேச கலவரக்காரர்கள் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் அவரது சகோதரியின் ஆடைகளை எடுத்து வந்து அதை காண்பித்து தாங்கள் எவ்வளவு கீழ்த்தரமானவர்கள் என்பதை காட்டு கின்றனர்...

#AllEyesOnBangladesh| #BangladeshCrisis #SaveBangladeshiHindus
#Bangladesh
#பங்களாதேஷ்பி்ரச்சனை

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
6-8-2024.


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...