Tuesday, August 6, 2024

#அ.சீனிவாசன்

#அ.சீனிவாசன் 
—————————


அ. சீனிவாசன் பிறந்த நாள் , ஆகஸ்ட் 6, 1925 அன்று, விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மகாராஜபுரம் கிராமத்தில், அய்யப்ப நாயுடு-வெங்கடம்மாள் இணையருக்குப் பிறந்தார். தொடக்கக் கல்வியை மகாராஜபுரம் கிராமப் பள்ளியில் பயின்றார். சாத்தூர் எட்வர்ட் உயர்நிலைப் பள்ளி, வற்றாயிருப்பு இந்து நடுநிலைப் பள்ளி, விருதுநகர் க்ஷத்திரிய வித்தியாசாலை பள்ளிகளில் உயர்நிலைக் கல்வி கற்றார். மதுரையில் பட்டப்படிப்பு படித்தார். ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளைக் கற்றார்.    அ. சீனிவாசன், 1943-ல், இந்திய விமானப் படையில் சேர்ந்து ராணுவப் பயிற்சியும், தொழில் பயிற்சியும் பெற்று பொறியாளராகப் பணியாற்றினார். சுதந்திரப் போராட்டத்திற்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு 1947-ல் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதழாளராகவும், சுதந்திர எழுத்தாளராகவும் செயல்பட்டார்      

 அ. சீனிவாசன் 1947 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரை இந்தியப் கம்யூனிஸ்ட்  கட்சியில் வட்ட, மாவட்ட, மாநில, தேசியப் பொறுப்புகள் பலவற்றை வகித்தார். தமிழ் மாநில துணைச் செயலாளராகவும் தேசியக்குழு உறுப்பினராகவும் பணியாற்றினார். அக்காலத்தில் அமைப்பாக்கம், தொழிற்சங்கம், இதழ், பரப்புரை, வெளியீடு, கொள்கைக் கல்வி ஆகிய துறையில் பணியாற்றினார்

 சென்னை தொழிலாளர் வாரியத்தில் தொழிலாளர் பிரதிநிதியாக இந்திய ஒன்றிய அரசால் நியமிக்கப்பட்டுப் பணியாற்றினார்.
     
உலகத் தொழிற்சங்க மாநாடு பல்கேரிய நாட்டில் நடைபெற்ற பொழுது அ. சீனிவாசன் அதில் கலந்துகொண்டார்.

  அ. சீனிவாசன் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு அரசியல், பொருளாதாரம், தத்துவம், இலக்கியம் தொடர்பான நூல்களையும் கட்டுரைகளையும் மொழிபெயர்த்திருக்கிறார். மேலும் பல நூல்களை எழுதி இருக்கிறார்.
 
#srivilliputhur 
#ஶ்ரீவில்லிபுத்தூர்


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...