Wednesday, August 14, 2024

*#கிராமத்துசங்கதிகள்*…


 *#கிராமத்துசங்கதிகள்*… 

கணவனுக்கும் மனைவிக்கும் சிறிய தகராறு. தகராறு பெரிதாகி ஒருவரோடு ஒருவர் பேசுவதை நிறுத்திவிட்டனர்.

ஒரு நாள் கணவன் தொழில் விசயமாக அதிகாலை 5மணிக்கு புறப்பட வேண்டியிருந்தது.

மனைவியிடம் நேரடியாக சொல்ல சுயமரியாதை இடம்தரவில்லை.

அதிகாலை 5மணிக்கு எழுப்பிவிடு என ஒருதாளில் எழுதி மனைவியின் தலையணையின் கீழ் வைத்துவிட்டு மனைவி காலையில் எழுப்பிவிடிவாள் என்ற நம்பிக்கையில் தூங்கிவிட்டான்.

காலையில் எழுந்து நேரத்தை பார்த்தால் மணி 7. பயங்கர கோபத்தோடு மனைவியை பார்த்தான். ஏன் என்னை எழுப்பிவிடவில்லை என கோபமாக கேட்டான்.

மனைவி அமைதியாக கணவனின் தலையணையை காட்டினாள். அதன்கீழ் ஒரு தாளில் மனைவி எழுதிவைத்திருந்தாள் ” மணி 5 ஆகிவிட்டது எழுந்திருங்கள்” என்று!

இந்த கதையில் சுய மரியாதையை காப்பாற்ற வேண்டி சீட்டில் எழுதி வைத்த கணவன், காலை தாமதமாக எழுந்தவுடன் கோபத்தில் சுய மரியாதையை மறந்து ஏன் என்னை எழுப்பி விடவில்லை என்று கேட்கிறார். முதல் நாள் இரவு கொஞ்சம் தனது சுய மரியாதையை மறந்து மனைவியிடம் எழுப்பிவிட சொல்லி இருந்தால் பயணம் தடைபட்டு இருக்காது.

இதே தவறைத்தான் இன்று நம்மில் பலரும் செய்து கொண்டுஇருக்கிறோம். முதலில் சுய மரியாதையை யாரிடம் எங்கே காட்ட வேண்டும் என்று தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

மனைவி என்பவள்

உன்னில் ஒரு பாதி

உன் உயிரில் ஒரு பாதி

உன் உடலில் ஒரு பாதி

அப்படிப்பட்ட மனைவியிடம் கொஞ்சம் ஈகோ வை மறக்க பழகுங்கள். இது ஆண்களுக்கு மட்டுமல்ல , பெண்களும் இதே தவறைத்தான் செய்கிறார்கள். இதனால் பாதிக்கப்படுவது இருவருமே தான்….

***

மனைவி என்றால்

அன்பின் இன்னொரு சொல் என்றும் கொள்ளலாம்!

பணிக்கு செல்லும் மனைவிகள் எல்லாம் குடும்பம் சுமக்கும்

அன்பு தேவதைகள்!

ஆணுக்கு ஒரு பக்க மத்தளம் என்றால் பணிக்கு செல்லும் மனைவிகளுக்கு இரண்டு பக்க மத்தளம்!

பெண் என்கிற கிரீடம் அழகு தான்

என்றாலும் அவளை வெளியில்

உள்ள சமூகம் கிள்ளி கொண்டேதான் இருக்கும்!

கணவர்கள் கொஞ்சம் கை கொடுங்கள். உங்களுக்காக வாழ்ந்துகொண்டு

இருக்கும் அந்த அன்பு பறவையை

அரவணைத்து வைத்து

கொள்ளுங்கள்!

அன்பாகப் பேசுங்கள்

சமையல் பணியை நேரம் கிடைக்கும் போதெல்லாம் பகிர்ந்து கொள்ளுங்கள்!!

மனைவிக்கு கை வலியோ, உடல் வலியோ, மனசு வலியோ புரிந்து கொள்ளுங்கள்!

உங்கள் மகளை கவனிப்பது போல் உங்கள் மனைவியையும்

கவனித்து கொள்ளுங்கள்!

உடல் மனசு இரண்டையும்

மென்மை படுத்துங்கள்!

சமையலை பாராட்டுங்கள்

அவள் சமையல் அறையில்

பட்டிருக்கும் வெப்பம் தொட்ட தழும்பைப் பாருங்கள். அவை உங்களுக்காக

அவள் பட்ட அன்பின் சின்னம்.

அவள் செய்வது சமையல்

அல்ல. அன்பின் அழகு.

தினசரி நன்றி சொல்லுங்கள்.

குறுந்தகவல்களை மனைவிக்கும்

அனுப்பலாமே!

அவள் குடும்பத்திற்காக எரியும் இன்னொரு மெழுகுவர்த்தி.

வாழ்க்கை முழுதும் கூட வரும்

அன்பு தேவதை!!

கடவுள் நம்முடன்

இருக்கமுடியாது என்பதற்காக

கடவுள் கொடுத்த வரம்

அன்னையும் மனைவியும்!

அவள் கண்களில் கண்ணீர்

வராமல் பார்த்து கொள்ளுங்கள்.

மூன்றாவது கையாக நீங்கள் இருங்கள். பெண் கண்ணீர் விட்டால் அங்கே செல்வம் தங்காது....

•••••

*#நகரத்துசங்கதிகள்*

கல்யாணம் பண்ணாமல் வாழ முடியாதா????

நிச்சயமாக முடியும்… அதுல சந்தேகம் வேறயா? என்னுடன் வேலை பார்க்கும் ஒரு இளம் பேராசிரியைக்கும் எனக்கும் இரண்டு வருடங்களுக்கு முன் நடந்த உரையாடல் இது. அவள் பெயர் சுமா என்று வைத்துக்கொள்வோம்.

சுமா : Ma'am, ஒரு கேள்வி

நான் : கேளு மா

சுமா : இந்த கல்யாணம் எல்லாம் பண்ணி தான் ஆகணுமா?

நான் : பண்ணு… பண்ணாத… அது உன்னோட இஷ்டம்

சுமா : Ma'am… நான் சுயமா சம்பாதிக்கிறேன். நெனச்ச நேரம் அப்பா, அம்மா கூட போய் இருக்க முடியுது. நெனச்ச நேரம் ஹோட்டல், ஷாப்பிங், பார்க், சினிமான்னு friendsஓட சுத்துறேன். ஜாலியா இருக்கிறேன். எனக்கு இப்போ ஒரு கொறச்சலும் இல்ல. லைப் செமமையா போயிட்டு இருக்கு

நான் : ரொம்ப சந்தோஷம் சுமா

சுமா : இதுல நா இப்போ கல்யாணம் பண்ணிக்கிட்டேன்ன்னு வைங்க… இதெல்லாம் முடியுமா? கல்யாணம் முடிஞ்ச உடனே என்னைய pack பண்ணி புருஷன் வீட்டுக்கு அனுப்பிருவாங்க. அப்புறம் அவன் (அதாங்க… புருஷன் ) பேச்சை மட்டும் தான் நான் கேக்கணும். என்னோட freedom போயிரும். மாமியார், நாத்தனார் தொல்லையை எல்லாம் வேற சமாளிக்கணும்… இதெல்லாம் தேவையா?

நான் : ம்ம்ம்… வாஸ்தவம் தான்

சுமா : அப்போ சொல்லுங்க ma'am

நான் : அதான் நான் சொல்லிட்டேனே… உன்னோட இஷ்டம்ன்னு…

சுமா : சரி ma'am.. நான் உங்ககிட்ட ஒன்னு கேக்குறேன்… நீங்க கல்யாணத்துக்கு முன்னாடி சந்தோஷமா இருந்தீங்களா இல்ல கல்யாணத்துக்கு அப்புறமா சந்தோஷமா இருக்கிறீங்களா?

நான் : கல்யாணத்துக்கு முன்னாடி பொறுப்புகள் இல்லாம பிரீயா இருந்தேன். இப்போ அது முடியாது. கணவர் குழந்தைகளை பாத்துக்கணும், நெனச்ச நேரம் அம்மா வீட்டுக்கு போக முடியாது.

சுமா : அதான் என்னோட பாயிண்ட்! So இந்த கல்யாணம் ஒரு தேவை இல்லாத தொல்லை

நான் : சுமா… நான் ஒண்ணு சொல்றேன். நான் என் அப்பா அம்மாவுக்கு கடைக்குட்டி. ரொம்ப செல்லம். பொறுப்புகள்னா என்னன்னு தெரியாம வளந்தவ. ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் என்னோட லைப்ல நெறைய மாற்றங்கள்… பண கஷ்டம்னா என்னன்னு தெரிஞ்சுக்கிட்டேன். குழந்தை வளர்ப்பு எவ்வளவு பெரிய தொல்லைன்னு புரிஞ்சுது.. சமையல் எல்லாம் கத்துக்குறதுக்குள்ள… அப்பப்பா… ஆனா என்னோட திருமண வாழ்க்கை எனக்கு என்ன எல்லாம் குடுத்திருக்குதுன்னா… சாயங்காலம் களைத்துப் போய் வீட்டுக்கு செல்லும் போது என் வரவுக்கக்காக காத்துக்கிடக்கும் குழந்தைகள், ஏதாவது பிரச்சனை என்று புலம்பினால் 'நான் இருக்கிறேன் இல்ல… பாத்துக்கலாம் ' என்று யானை பலம் தரும் கணவர்… ஒரு சுகவீனம் என்றால் அக்கறை காட்டும் புகுந்த வீட்டார்…

சுமா : ma'am… இந்த அன்பு, அக்கறை எல்லாம் அப்பா அம்மா கிட்ட இருந்தும் கிடைக்கும்.

நான் : ஆமா… கண்டிப்பா கிடைக்கும். ஆனால் எத்தனை நாளைக்கு? அப்பா அம்மாவால் காலம் பூரா உன்னோட வர முடியாது. ஒரு காலத்துக்கு பிறகு நமக்குன்னு ஒரு துணை இல்லையே ன்னு ஏங்குற ஒரு பருவம் வரும். அப்போது திருமண வயசு எல்லாம் தாண்டி போயிருக்கும். திருமணத்தின் பிரதான நோக்கம் companionship - நமக்கென்று ஒருவன் /ஒருவள் இருக்கிறான்/ள் என்ற உணர்வு. என்னதான் திருமணத்துக்கு பிறகு தம்பதிகள் அடித்துக் கொண்டாலும் இந்த உணர்வு மட்டும் கடைசி வரை மாறாது. நாம் பெற்ற பிள்ளைகள் கூட ஒரு காலத்துக்குப் பிறகு படிப்பு, வேலை, திருமணம் என்று தங்கள் வாழ்க்கையைப் பார்த்துக் கொண்டு போய் விடுவார்கள். ஆனால் வாழ்வின் இறுதி வரை நம்முடன் கை கோர்த்து வருவது நம் வாழ்க்கைத் துணை மட்டுமே. உனக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன் சுமா!

பின்குறிப்பு :

இன்றைய இளைஞர்கள் பலர் நம்ம சுமா வைப் போலத் தான்… இந்த கல்யாணம், கூத்தெல்லாம் தேவையா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டார்கள். அவர்களுக்கெல்லாம் என்னுடைய மெசேஜ் இது தாங்க… மனிதனுக்கு இந்த companionship மிக அவசியம். நன்மையோ தீமையோ, வாழ்வோ தாழ்வோ, சுகமோ சுகவீனமோ… எனக்கு நீ… உனக்கு நான் என்று வாழ்வது கணவன் மனைவி மட்டுமே!

No comments:

Post a Comment

காலம் காலமாக நம்மை யாரேனும்

 காலம் காலமாக   நம்மை யாரேனும்  நினைவில் வைத்திருத்தல்  அத்தனை இலகுவான விடயமா என்ன அதற்கு  ஏதெனுமொரு காரியத்தை  பெரிதாய் செய்திருக்க வேண்டும...