Tuesday, August 13, 2024

#இந்தியநீதிமன்றங்களில் நிலுவையில் தேங்கி உள்ள

 #இந்தியநீதிமன்றங்களில் நிலுவையில் தேங்கி உள்ள

வழக்குகளின் புள்ளி விவரங்களை அறியும்போது அவை மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளன.
#சுப்ரீம்கோர்ட்டுகளில் மட்டும்.80,221 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
#ஐகோர்ட்டுகளில் 62,00,061 வழக்குகளும்
4,47,87,945 வழக்குகள் தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கின்றன.
இதில் எத்தனை சிவில் கிரிமினல் மற்றும் பல்வேறு வகையான கம்பெனி ஊழல் சுற்றுச்சூழல் அதிகார மட்டத்தில் நிகழ்ந்த லஞ்ச லாவண்யங்கள் மாநிலங்களுக்கு இடையான தாவாக்கள் பல்வேறு மக்களுக்குமான அண்டை அக்கம்பக்க நியாயங்கள் பெண்கள் மீதான வன்முறை என ஏராளமான வழக்குகள் தீர்வு காணப்படாமலே இருக்கின்றன என்பதைத்தான் இந்த புள்ளி விவரம் காட்டுகிறது.
அந்த வகையில் இந்தியாவில் நீண்ட காலமாக நிகழ்ந்து வரும் வழக்குகள் இரண்டை இங்கு குறிப்பிடலாம்.
இந்தியாவின் மிகப் பழமையான வழக்கு என்று சொன்னால் அது தோசிபுரா நில வழக்கு. இந்த வழக்கு நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பிரிட்டிஷ் காலத்தில் அதாவது 1878 ல் வாரணாசி நீதிமன்றத்தில் தொடங்கப்பட்டது.
வாரணாசி அருகே உள்ள தோசிபுராவில் ஒரு இரண்டு ஏக்கர் நிலம் சன்னி ஷியா முஸ்லிம் மக்களுக்கிடையே அது தங்களுக்கு சொந்தம் என்கிற முறையில் இரு சாராரும் தொடர்ந்த வழக்கு என்பதாய் இருந்தது.. அது பனாரஸ் மகாராஜா தானமாக வழங்கிய நிலம் என்று சொல்லப்பட்ட போதும் அதை சன்னிப் பிரிவு மக்கள் ஏற்கவில்லை.
நெடுங்காலம் இழுபறியாக இருந்த இந்த வழக்கு1976 இல் மீண்டும் வாரணாசி நீதிமன்றத்திற்கு கொண்டுவரப்பட்டது. பல விசாரணைகளுக்குப் பிறகு 1981 இல் இது ஷியாப் பிரிவினருக்கு சொந்தம் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. 136 வருடங்கள் நிலுவையில் இருந்த வழக்கு.
இன்னொரு வழக்கு என்னவெனில்
1951ல் கல்கத்தா கோர்ட்டில் போடப்பட்ட வழக்கு. பெர்காம்பூர் வங்கி திவாலான காரணத்தினால்
போடப்பட்ட வழக்கு. அது கடந்த 2006 வரை இழுபறியாக நடந்தது. 57 வருடங்கள் நிலுவை.
இத்தகைய வழக்குகளால் எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டு இருப்பார்கள் என்பதை யோசித்துத் தான் பார்க்க வேண்டி இருக்கிறது. இதில் குறிப்பிட்ட சதவிகிதம் விவாகரத்து வழக்குகள் இடம் பிடிக்கின்றன.
அடுத்து, மத்திய ரயில்வே அமைச்சர் பிகார் மாநில சமஷ்டிபூரி குண்டு வீசி படுகொலை வழக்கு 40 ஆண்டுகளுக்கு மேலாக நடந்தது. இப்படி பல வழக்குகள் உண்டு.
அனைத்தும் மாறிவரும் சூழலில் புத்தம் புது வழக்குகள் பிறந்து கொண்டு தான் இருக்கின்றன.
என்னைப் பொறுத்தவரையில் இவற்றைத் தீர்க்க வேண்டும் எனில் சட்டவிதிகளை நவீனத் தொழில்நுட்ப முறைகளின் மூலம் விரைவுபடுத்தி அரசு நீதி தவறுகள் தண்டனைகள் மக்களின் நியாயங்கள் என்கிற கான்ஸ்டியூஷன் அமைப்பாக்கத்தில் அதன் தீவிரமான கூட்டுச் செயல் ஆக்கங்களால் சமூகத்தை இறுக்கி கட்டுவதன் மூலம் தான் நடைமுறை படுத்த முடியும்!. மக்கள் இன்னும் சட்டங்களையும் நீதிமன்றங்களையும் நம்பித்தான் இருக்கிறார்கள். ஒரு உதாரணமாகச் சொன்னால் விவாகரத்து வழக்குகளில் ஒரு வருடம் புரிந்துணர்வுடன் இருக்க முயற்சித்து முடிந்து விட்டால் பிறகு சேர்ந்து இருக்கவும் என்கிற நிபந்தனை இருந்தது. அதற்கு பிறகு தான் விவாகரத்து வழங்க முடியும்! இன்று அந்த நிலை மாறி இன்று ஆண் பெண் இருவரும் நீதிமன்றத்தில் ஏறி நாங்கள் புரிந்துணர்வுடன் பிரிந்து கொள்கிறோம் என்று சொன்ன உடனே விவாக ரத்து வழங்கப்படுகிறது.

No comments:

Post a Comment

2023-2024