Monday, August 12, 2024

#கிராமராஜ்யம்

#கிராமராஜ்யம் 
————————
உத்தமர் காந்தியின்  கிராம ராஜ்யம் சுயசார்பு ஆதாரனமானது . இந்தியாவின்
ஆன்மா கிராமங்கள் என்றார். (Villages are real india)
கிராமப் பொருளாதாரத் திட்டத்தை மறு மதிப்பீடு செய்து  அது இறுதியில் செல்வந்தர்களின் அதிகார மையமாகிவிடும் என்று எதிர்வினையாற்றி மறுத்தவர்களிடம்   இன்றைய அரசியல் சமூக நிலை பற்றிக் கேட்க வேண்டிய கேள்விகள் நெருங்கிவிட்டன . கதர் பொருளாதாரம் வேண்டும் என விரும்பினர் காந்தி.

நகர்ப்புற வளர்ச்சி நகர மயம் என்றெல்லாம் தாராளப் பொருளாதாரத்தை ஆதரித்தவர்கள் 
மத்தியில் இன்று அவை பன்னாட்டுக் கூட்டில் ஏதோச்சதிகார சக்தியாக வளர்ந்து கொண்டு இருப்பதற்கு என்ன காரணம் கூறுவார்கள். 
தேச அரசியலில் சாதிகளின் சக்தி வளர்ந்து அவை இன்று பன்னாட்டுக் கூட்டு உறவில் தனி குடும்பங்களாக பெரு வளர்ச்சியடைந்து இருக்கின்றன. நகரமயமானால் சாதி ஒழிந்து விடும் என்று சொன்னார்கள்! சாதி ஒழிந்து விட்டதா? அல்லது ஒழிக்கத்தான் முடிந்ததா?
கிராமப்புற நிலங்கள்  அவர்களின் வாழ்வு முறைகள்  அபாயகரமாகப் பெருகிவரும் சுற்றுச்சூழல் மாசுகள் விவசாயம் அற்றுப் பல நிலங்கள் வறட்சி நிலை மில் கைவிடப்படுவது அவற்றுக்கான நீர் ஆதாரங்கள் அற்றுப்போய்க் கொண்டிருப்பது. என்பது ஒரு புறம் இருக்க மொத்த இயற்கை வளமும் அரசியல்வாதிகளின் அவர்களின் குடும்ப வாரிசுகளின் பெயரால் ஆளும் அதிகாரத்தை பயன்படுத்தித் தனியுடமை மயமாகிக் கொண்டிருப்பது பற்றி எல்லாம் ஏன் வாயைத் திறக்க மாட்டேன் என்கிறார்கள். 
காந்தி உண்மையில் எதை எதிர்த்தார்? பன்னாட்டு இறக்குமதியையும் இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகை உற்பத்தி செய்வதையும் இந்திய கிராமங்களுக்கு உரித்தான தன்னிறைவான உற்பத்தி முறைதான் வேண்டும் என்றும் சொன்னதையெல்லாம் கைவிட்டு விட்ட இந்த அரசியல் சுயநலவாதிகள் மக்களை விலைக்கு வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் இவர்களுக்கெல்லாம் உத்தமர் காந்தியின்  தொலைநோக்குத் திட்டத்தை அறிவதற்கான தெளிவான அறிதிறன் இருக்கிறதா?
நாகர் மயம் சாதிகளை அழிக்கும் காந்தியின் கிராம ராஜ்யம் கூடாது என்றனர். இன்றைக்கு அப்படியான  நிலை இல்லையே. நாடு சுதந்திர அடைந்தும் சமுதாய ஒற்றுமை அற்ற நிலை.
#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
17-7-2024

No comments:

Post a Comment

2023-2024